search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Abirami Ramanathan"

    • கஸ்தூரி எஸ்டேட்டில் உள்ள அலுவலகத்தில் சோதனை
    • வீட்டில் இருந்து கணக்கில் வராத நகைகள் கைப்பற்றப்பட்டன

    வருமான வரித்துறையினர் நேற்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை இன்றும் நீடித்து வருகிறது.

    நேற்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகம் மற்றும் கல்லூரிகளில் சோதனை நடைபெற்றது. அதோடு பல்வேறு தனியார் நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்றது.

    அந்த வகையில் கஸ்தூரி எஸ்டேட்டில உள்ள பிரபல தொழில் அதிபர் அபிராமி ராமநாதனின் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. மேலும் அவரது வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

    அவரது வீட்டில் கணக்கில் வராத நகைகள் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட நகைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அபிராமி ராமநாதனை விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணை முடிவில் வரிமான வரி ஏய்ப்பு செய்துள்ளாரா? என்பது தெரியவரும்.

    சினிமா பி.ஆர்.ஓ-க்களுக்கு தமிழ் திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் அபிராமி ராமநாதன் அடையாள அட்டை வழங்கியுள்ளார். #PRO
    தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் என்றழைக்கப்படும் சினிமா பி.ஆர்.ஓ-க்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா சென்னையில் பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

    தலைவர் விஜயமுரளி, செயலாளர் பெருதுளசிபழனிவேல், பொருளாளா் யுவராஜ், துணை தலைவர்கள் கோவிந்தராஜ், ராமானுஜம், இணைச்செயலாளர்கள் குமரேசன், ஆனந்த், செயற்குழு உறுப்பினர்கள் மதுரை செல்வம், கிளாமர் சத்யா, ஆறுமுகம், சரவணன், கே. செல்வகுமார், கௌரவ தலைவர்கள் நெல்லை சுந்தர்ராஜன், திரைநீதி செல்வம், மற்றும் மௌனம் ரவி, ரியாஸ், துரைபாண்டியன், வெட்டுவானம் சிவகுமார், மதிஒளிகுமார், வெங்கட், பாரிவள்ளல், கணேஷ்குமார், பாலன், அந்தணன், ஆதம்பாக்கம் ராமதாஸ், சக்திவேல், மனோகரன், கடையம்ராஜூ, மேஜர்தாசன், செல்வரகு, ராஜ்குமார், சூர்யா, விஜிமுருகன், நித்திஷ், சக்திசரவணன், புவன், சையதுஇப்ராகிம், பிரகாஷ், சுரேஷ்குமார், புதிய உறுப்பினர்கள் பிரியா, தர்மதுரை, தியாகராஜன் ஆகியோருக்கு தமிழ் திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் அபிராமி ராமநாதன் அடையாள அட்டை வழங்க, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் கதிரேசன் சால்வை அணிவித்து உறுப்பினர்களை பாராட்டி பேசினார்கள். 

    இந்த விழாவில் முன்னாள் மக்கள் தொடர்பாளரும், நடிகரும் இயக்குநரும் திரைப்பட தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு "கௌரவ உறுப்பினர் அடையாள அட்டை" யூனியன் சார்பில் வழங்கப்பட்டது. 

    தலைவர் விஜயமுரளி வரவேற்புரை ஆற்றி தொகுத்து வழங்க, செயலாளர் பெருதுளசி பழனிவேல் நன்றி தெரிவித்து பேசினார்.
    ×