search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Abuse Act"

    எஸ்.சி. - எஸ்.டி. பிரிவு வன்கொடுமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி திருத்தணியில் கம்யூனிஸ்டு-வி.சிறுத்தைகள் கட்சியினர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பள்ளிப்பட்டு:

    எஸ்.சி. - எஸ்.டி. பிரிவு வன்கொடுமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும். அதனை அரசியல் சாசனத்தில் 9-வது அட்டவணையில் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்தணியில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள், தலித் மக்கள் முன்னணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

    ரெயில் மறியலில் ஈடுபட்ட அவர்கள் திருத்தணி நகராட்சி அலுவலகம் அருகே இருந்து ஊர்வலமாக வந்தனர்.

    இதில் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கோபால், மாவட்டக்குழு உறுப்பினர் மோகனா, மாவட்ட பொருளாளர் நேரு, விடுதலை சிறுத்தை நகர செயலாளர் சுப்பிரமணி மற்றும் தலித் மக்கள் முன்னணியினர் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    திருத்தணி ரெயில் நிலையம் அருகே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 50 பெண்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

    போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதும் டி.எஸ்.பி. சேகர் மற்றும் போலீசார் ஒரு காரில் திருத்தணி ரெயில் நிலையம் நோக்கி சென்றனர்.

    அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் பஞ்சாட்சரம் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    அவரை உடனடியாக மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    ×