என் மலர்
நீங்கள் தேடியது "accident student death"
காரைக்குடி:
சென்னை வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவ ரது மனைவி சுமதி (வயது48). இவர் ராமநாதபுரம் மாவட் டம் கீழக்கரையில் உள்ள குலதெய்வம் கோவில் வழி பாட்டிற்காக காரில் புறப் பட்டார்.
அவருடன் உறவினர் கள் சென்னை திருமுல்லை வாயலைச் சேர்ந்த முருகன் மகன் அஸ்வின் (17) மற்றும் தங்கராஜ், நாகவள்ளி ஆகி யோரும் வந்தனர். சென் னையை சேர்ந்த டிரைவர் ஆனந்தன் காரை ஓட்டினார்.
இன்று அதிகாலை புதுக்கோட்டை மாவட்டம் அமராவதியை அடுத்த சங்கரபதிகோட்டை அருகே கார் வந்தபோது திடீரென நிலைதடுமாறியது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரில் சென்ற அஸ்வின், தங்கராஜ், சுமதி, டிரைவர் ஆனந்தன் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் வழியிலேயே அஸ்வின் பரிதாபமாக இறந்தார். அவர் பிளஸ்-2 மாணவர் என்பது குறிப் பிடத்தக்கது.
விபத்து குறித்து சோம நாதபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சின்னச் சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றார்.
ராயபுரம்:
கொடுங்கையூர் எழில்நகரை சேர்ந்தவர் ராமர். கூலித்தொழிலாளி. இவருடைய மகன் இசக்கி ஈஸ்வரன் என்கிற இளங்கோ (18). இவர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இளங்கோவுக்கு இன்று பிறந்தநாள். இந்த நிலையில் அண்ணாநகரில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக இன்று காலை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் கொருக்குப்பேட்டையில் உள்ள மணலி சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த மணல் லாரி மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து மாணவன் இளங்கோவன் கீழே விழுந்தான். அவன் மீது லாரியின் பின் சக்கரம் ஏறியது. இதில் பரிதாபமாக உடல் நசுங்கி உயிர் இழந்தான்.
விபத்துக்கு காரணமான மணல் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இறந்த மாணவன் இளங்கோவன் உடல் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.