என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Accidental injury"
- கார், முன்னாள் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
சென்னையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பண்ருட்டிக்கு நேற்று வந்தனர். இவர்கள் முத்தாண்டிகுப்பம் கருப்பசாமி கோவிலுக்கு சென்றனர். அங்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற நள்ளிரவு பூஜையில் பங்கேற்று வழிபட்டனர்.
பின்னர் இன்று அதிகாலை முத்தாண்டிக்குப்பத்தில் இருந்து பண்ருட்டிக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பம் கிராமம் அண்ணா பல்கலைக்கழகம் அருகில் ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அப்போது சிதம்பரத்திலிருந்து பண்ருட்டிக்கு வந்து கொண்டிருந்த காரின் டயர் திடிரெனவெடித்தது.
இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னாள் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி கவுரி (வயது 56), பண்ருட்டி சூரகுப்பத்தை சேர்ந்த அஞ்சாபுலி (40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தை சேர்ந்த பரமேஸ்வரி (65), பண்ருட்டி திருவள்ளுவர் நகர் நிலவழகி (45), பண்ருட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த மணிகண்டன் (35), ஆட்டோ டிரைவர் பண்ருட்டி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் (63), சென்னை மயிலாப்பூரை சேர்ந்த லில்லி (52) ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர்.
அவ்வழியே சென்றவர்கள் படுகாயமடைந்து கிடந்த 5 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பலராமன், சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர்.
விபத்தில் இறந்த 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடி அமாவாசை வழிபாடு முடிந்து திரும்பிய 2 பேர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சிவகங்கை அருகே நடந்த விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு செந்தில்நாதன் எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.
- உயர் தர சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் கேட்டு கொண்டார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரி பேருந்தும், படமாத்தூரில் இருந்து கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த சரக்கு வாகனமும் கட்டுப் பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளா னது. இதில் பேருந்தில் பயணம் செய்த 27 மாணவ, மாணவிகள், 9 பேராசிரி யர்கள் காயம் ஏற்பட்டு சிவ கங்கை அரசு மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுபற்றிய தகவல் அறிந்த சிவகங்கை சட்ட மன்ற உறுப்பினர் செந்தில் நாதன் உடனே சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் உயர் தர சிகிச்சை அளிக்க மருத்து வர்களிடம் கேட்டு கொண் டார்.
அவருடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாக ராஜன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங் கோவன், ஒன்றிய செயலா ளர்கள் செல்வ மணி, கோபி, பழனிச்சாமி, ஜெக தீஸ்வரன், நகர் துணை செயலாளர் மோகன், பாசறை மாவட்ட பொருளா ளர் சரவணன், மாவட்ட கவுன்சிலர் கோமதி தேவ ராஜ், அமைப்புசாரா அணி மாவட்ட இணை செயலாளர் அழகர்பாண்டி, மாவட்ட மாணவரணி அன்பு மற்றும் நகர ஒன்றிய மாவட்ட நிர் வாகிகள் சென்றனர்.
- வேன்-பைக் நேருக்கு நேர் மோதியது
- டிரைவர் தப்பி ஓட்டம்
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு டவுன் அம்பேத்கர் தெருவைச் ஜூலை.17 முருகேசன் (வயது 48). இவருடைய மனைவி சுபா (38) தனியார் பள்ளி ஆசிரியை. நேற்று காலை முருகேசன் தனது மனைவி சுபாவை பள்ளியில் விடுவதற்காக மொபட்டில் அழைத்துச் சென்றார்.
சின்னதாமல்செருவு ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சென்றபோது, அந்த வழியாக எதிரே பெரியதாமல்செருவு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளும், முருகேசனின் மொபட்டும் நேருக்கு நேர் மோதி கொண்டன. அதில் கணவன், மனைவி மற்றும் சிறுவன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
அதேபோல் பேரணாம்பட்டு அருகில் உள்ள பத்தலப்பல்லி கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் (25) ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் ஷூ கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் ஷிப்ட் வேலை முடிந்ததும் லோகேஷ் ஆம்பூரில் இருந்து பேரணாம்பட்டை நோக்கி தனது மோட் டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
மதினாப்பல்லி கிராமம் அருகில் வந்தபோது அந்த வழியாக எதிரே தேங்காய் பாரம் ஏற்றி வந்த மினி வேனும், அவரின் மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டன. அதில் லோகேஷ் படுகாயம் அடைந்தார். மினிவேன் டிரைவர் தப்பியோடி விட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்