என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![அடுத்தடுத்து விபத்து: 4 பேர் படுகாயம் அடுத்தடுத்து விபத்து: 4 பேர் படுகாயம்](https://media.maalaimalar.com/h-upload/2022/07/17/1730996-bike-accident.jpg)
அடுத்தடுத்து விபத்து: 4 பேர் படுகாயம்
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு டவுன் அம்பேத்கர் தெருவைச் ஜூலை.17 முருகேசன் (வயது 48). இவருடைய மனைவி சுபா (38) தனியார் பள்ளி ஆசிரியை. நேற்று காலை முருகேசன் தனது மனைவி சுபாவை பள்ளியில் விடுவதற்காக மொபட்டில் அழைத்துச் சென்றார்.
சின்னதாமல்செருவு ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சென்றபோது, அந்த வழியாக எதிரே பெரியதாமல்செருவு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளும், முருகேசனின் மொபட்டும் நேருக்கு நேர் மோதி கொண்டன. அதில் கணவன், மனைவி மற்றும் சிறுவன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
அதேபோல் பேரணாம்பட்டு அருகில் உள்ள பத்தலப்பல்லி கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் (25) ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் ஷூ கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் ஷிப்ட் வேலை முடிந்ததும் லோகேஷ் ஆம்பூரில் இருந்து பேரணாம்பட்டை நோக்கி தனது மோட் டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
மதினாப்பல்லி கிராமம் அருகில் வந்தபோது அந்த வழியாக எதிரே தேங்காய் பாரம் ஏற்றி வந்த மினி வேனும், அவரின் மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டன. அதில் லோகேஷ் படுகாயம் அடைந்தார். மினிவேன் டிரைவர் தப்பியோடி விட்டார்.