என் மலர்
நீங்கள் தேடியது "Actor Ajith"
- துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.
- சிறந்த பங்களிப்புக்காக அஜித்குமாருக்கு, மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமார், சினிமாவை தொடர்ந்து கார் பந்தயத்திலும் கலக்கி வருகிறார்.
அதன்படி இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.
அதேவேளை கலைத்துறையில் ஆற்றி வரும் சிறந்த பங்களிப்புக்காக அஜித்குமாருக்கு, மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது.
இந்நிலையில், இத்தாலியில் நடைபெற்ற 12வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் அணிக்கு 3வது இடம் கிடைத்துள்ளது.
- இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு.
- அனைத்து நன்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் பலகோடி நன்றிகள்.
மே 1 தினமான இன்று உழைப்பாளர் தினத்துக்கும், நடிகர் அஜித் பிறந்தநாளுக்கும் வாழ்த்து தெரிவித்து இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எஸ்.ஜே சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
மே 1 உழைப்பாளர் தின வாழ்த்துகள் மற்றும் இந்த உழைப்புக்கு வாழ்க்கை கொடுத்த சிறந்த உழைப்பாளி அஜித்திற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வரும் ஆண்டு சிறப்பாக அமையட்டும்.
வாலி திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிறது. அதற்காக, அப்பா, அம்மா, அஜித், என் அன்பும் ஆருயிருமான எனது அனைத்து நன்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் பலகோடி நன்றிகள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி.
- படப்பிடிப்பு அஜர்பைஜானில் படமாக்கப்பட்டது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார்.
துணிவு படத்திற்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இதில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது.

இதனையடுத்து விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. அதன்பிறகு அஜர்பைஜானில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு படக்குழு சென்னை திரும்பியது.
இந்த நிலையில் விடாமுடற்சி படத்தின் ஒரே ஒரு பாடல் ஷூட் மட்டும் நிலுவையில் இருந்தது. இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் சில தினங்கள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. அதன்பிறகு படத்தின் புரொடக்ஷன் வேலைகள் தொடரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

விடாமுயற்சியை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் `குட் பேட் அக்லி' படத்தில் நடிக்கிறார் அஜித் குமார். அந்த படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே தொடங்கிவிட்டது. சில காட்சிகளில் நடித்து முடித்துவிட்டார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
https://iflicks.in/
- துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி கலந்து கொண்டது.
- இதில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது.
துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் 24H துபாய் கார் ரேஸில் வெற்றி பெற்ற நிலையில், நடிகர் அஜித் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், கார் ரேஸில் வெற்றி பெற உழைத்த எனது அணிக்கு நன்றி. ரசிகர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என்று கூறியுள்ளார்.
ஓமலூரில் நடிகர் அஜித்குமார் நடித்த விஸ்வாசம் படம் இன்று வெளியானது இதற்கு வரவேற்பு தெரிவித்தும், படம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தும் ஆங்காங்கே பேனர்கள் வைக்கபட்டுள்ளது.
இந்த நிலையில் ஓமலூர் பேரூராட்சி பகுதிகளில் பேனர்கள் வைக்க அஜித்குமார் ரசிகர்கள் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால், பேரூராட்சி நிர்வாகத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஓமலூர் பேரூராட்சி வணிக வளாகத்தின் மேலே உள்ள விளம்பர தட்டிகள் மீதும் வைக்கப்பட்டது. இதனிடையே ஓமலூரை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அஜித் பேனர் வைக்கப்பட்டது குறித்து புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஓமலூர் பேரூராட்சி அதிகாரிகள் பேனர் வைக்கப்பட்ட வணிக வளாகத்திற்கு சென்று ஆய்வுகள் செய்தனர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்ற முயன்றனர்.
அப்போது அங்கே வந்த திமுக சமூக ஊடாக பிரிவு நிர்வாகிகள் பிரகாஷ், சீனிவாசன் ஆகியோரும், அஜித் ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு தகராறில் ஈடுபட்டனர். பேனரை அகற்றகூடாது என்றும் அகற்றினால் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். அப்போது பேருந்து நிலையம் மற்றும் பேரூராட்சி வணிக வளாக பகுதிகளில் அனுமதின்றி பேனர் வைக்கக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை தொடர்ந்தே இங்கே வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினர்.
இதனை திமுக நிர்வாகிகள் மற்றும் அஜித் ரசிகர்கள் ஏற்க மறுத்த தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் அங்கிருந்த கூட்டத்தினரை விரட்டி அடித்தனர். தொடர்ந்து வைக்கப்பட்ட பேனர் அகற்றப்பட்டு, அதற்காக அமைக்கபட்டிருந்த இரும்பு தூண்களும் அகற்றப்பட்டது. தொடர்ந்து அனுமதியின்றி பேனர் வைத்தவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். #Viswasam