என் மலர்
நீங்கள் தேடியது "Actor Prithviraj"
- `எல் 2: எம்புரான்' கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது.
- 11 நாள்களில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகப் படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `லூசிஃபர்'. இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் `எல் 2: எம்புரான்' கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. முதல் படத்தை போலவே இரண்டாம் பாகத்திற்கும் அதிக வரவேற்பு கிடைத்தது.
'எம்புரான்' திரைப்படம் வெளியான 11 நாள்களில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகப் படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
இதன்மூலம் மலையாளத் திரையுலகில் ரூ.250 கோடி வசூலைக் கடந்த முதல் படம் என்ற பெருமையை எம்புரான் பெற்றுள்ளது.
இதற்கிடையே எம்புரான் படத்தில் குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றதாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் படத்தில் சில காட்சிகளும் நீக்கப்பட்டன. படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்து தவறான காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தில் எதிர்ப்பு குரல்கள் எழுந்தது.
திரைப்படம் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 30 நாட்கள் கடந்த நிலையில் திரைப்படம் உலகளவில் 325 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இது மலையாள சினிமாவின் மிகப் பெரிய வெற்றியாகும். வெற்றியை விட எம்புரான் திரைப்படம் இந்திய சினிமாவில் ஒரு வரலாற்றை படைத்துள்ளது.
- கொச்சியில் உள்ள இவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடந்தது.
- நடிகர் பிரித்விராஜ், தமிழில் பாரிஜாதம், மொழி உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் மலையாள சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் சில நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித்துறையினருக்கு புகார்கள் சென்றது.
இதையடுத்து மலையாள நடிகர் பிரித்விராஜ் மற்றும் பிரபல மலையாள பட தயாரிப்பாளர்கள் ஆண்டனி பெரும்பாவூர், ஆண்டோ ஜோசப், லிஸ்டின் ஸ்டீபன், ஆபிரகாம் மேத்யூ உள்பட பலரது வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கொச்சியில் உள்ள இவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று இந்த சோதனை நடந்தது.
படத்தயாரிப்புகளுக்கு பணம் சேகரித்தது, ஓ.டி.டி. தளங்களுக்கு படங்களை விற்பனை செய்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுமார் 6 மணிநேரம் இந்த சோதனை நடந்தது.
இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் இது தொடர்பான விபரங்களை பின்னர் தெரிவிப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நடிகர் பிரித்விராஜ், தமிழிலும் பாரிஜாதம், மொழி உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
- .படப்பிடிப்புக்காக சவுதி அரேபியாவில் இருந்து 250 செம்மறி ஆடுகள் மற்றும் 20 ஒட்டகங்கள் வாங்கப்பட்டன.
- வருகிற 28- ந் தேதி (மார்ச்) படம் தியேட்டர்களில் வெளியாகுகிறது
மலையாள பட உலகின் முன்னனி நடிகர் பிருத்வி ராஜ். இவர் 'தி கோட் லைப்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் அமலாபால் , வினீத் ஸ்ரீவின்வாசன் மற்றும் ஜிம்மி ஜீன் லூயிஸ் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். தேசிய விருது வென்ற இயக்குநர் பிளெஸ்ஸி இந்தப் படத்தை இயக்கி உள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 6 வருடமாக நடந்து வந்தது.
இந்த படத்திற்காக பிருத்விராஜ்31 கிலோ எடை குறைத்து இருந்தார். துரதிருஷ்டவசமாக 1.5 வருடங்களாக கோவிட் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அவரது உடல் எடையும் அதிகரித்து.
அதன் பின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டதும் உடல் எடையை குறைக்க மீண்டும் அதே செயல்முறையை மேற்கொண்டார்.படப்பிடிப்புக்காக சவுதி அரேபியாவில் இருந்து 250 செம்மறி ஆடுகள் மற்றும் 20 ஒட்டகங்கள் வாங்கப்பட்டன.

இந்த படத்துக்கு பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்து உள்ளார்.அவரது இசை படத்துக்கு கூடுதல் பலம் அளிப்பதாக அமைந்து உள்ளது.இந்நிலையில் இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து உள்ளன. வருகிற 28- ந் தேதி (மார்ச்) படம் தியேட்டர்களில் வெளியாகுகிறது. தமிழ், இந்தி, மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் வெளியிடப்படுகிறது.
சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சினிமா ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறித்த எதிர்பார்ப்புகளை அதிகரித்தது.பிருத்விராஜ்க்கு இந்த படம் வெற்றிப்படமாக அமையுமா என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்து வருகின்றனர்.
பிருத்வி சிறந்த நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராகவும் பயணித்து வருகிறார் இவர் 'ஆகஸ்ட் சினிமா' என்ற பெயரில் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அண்மையில் வெளியான மலையாளப் படங்கள் தமிழ், தெலுங்கு ரசிகர்களை கவர்ந்து உள்ளது. மேலும் நடிகர் பிருத்விராஜின் 'தி கோட் லைப்' படத்தின் மீது ரசிகர்கள் பார்வை குவிந்து உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.