என் மலர்
நீங்கள் தேடியது "actress Khushbu"
- பாஜகவில் உள்ள நடிகைகள் குறித்து திமுக பேச்சாளர் சைதை சாதிக் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு.
- திமுக பேச்சாளரின் தரக்குறைவான பேச்சிற்கு கனிமொழி மன்னிப்பு கோரியிருந்தார்.
பாஜகவில் உள்ள நடிகைகள் குஷ்பு சுந்தர், நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் குறித்து திமுக பேச்சாளர் சைதை சாதிக் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகார் எழுந்தது. சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள் ஒருவரான நடிகை குஷ்பு குறித்து அவர் தரகுறைவாக பேசியது சமுக வளைதளங்களில் வெளியானது.
இதற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி மன்னிப்பு கோரியிருந்தார். இதையடுத்து தமது பேச்சிற்கு சைதை சாதிக்கும் மன்னிப்பு கேட்டிருந்தார். ஆனால் அவரை மன்னிக்க முடியாது என்று குஷ்பு கூறியிருந்தார். இந்த நிலையில் சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க மகளிர் அணி சார்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், ஆபாசமாக பேசுதல், குறிப்பிட்ட சமுதாய மக்கள் குறித்து தரக்குறைவாக பேசுதல், பெண்ணின் மானத்துக்கு பங்கம் விளைவித்தல் உள்பட 5 பிரிவுகளில் தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்,வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- பா.ஜனதா மதவாத அரசியல் செய்வதாக விமர்சிக்கும் தி.மு.க. சாதிமோதல்களை தூண்டி சாதி அரசியல் செய்கிறது.
- நாடு முழுவதும் பெண்களை பாதுகாப்பதற்கான கடுமையான சட்ட திருத்தங்களை மோடி அரசு கொண்டு வந்துள்ளது.
சென்னை:
பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது-
காவிரியில் கர்நாடகா அரசு தண்ணீர் விடாததால் டெல்டா பகுதியில் பயிர்கள் கருகி கிடக்கின்றன. தி.மு.க. அரசு தண்ணீர் கேட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்கிறதாம். இப்படியே எத்தனை நாள் தான் மக்களை ஏற்றுவீர்கள்?
கர்நாடகத்தில் உங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி ஆட்சி தானே நடக்கிறது. அவர்களிடம் பேசி தண்ணீர் பெற முடியாத நிலையில் தானே தி.மு.க. உள்ளது. தமிழகத்துக்கு தண்ணீர் தராத கட்சியை தலை மீதும், தோள் மீதும் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.
தமிழகத்தை பா.ஜனதா வஞ்சிப்பதாக கூறும் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தமிழகத்தை வஞ்சிக்கிறது என்று கூறுவாரா?
நாங்கள் எந்த மாநிலத்தையும் பிரித்து பார்க்கவில்லை. மணிப்பூரை பா.ஜனதா கண்டு கொள்ளவில்லை என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறது. இந்தியா கூட்டணி. ஆனால் இப்போது வாடும் பயிரை காப்பாற்ற இந்தியா கூட்டணி முன்வரவில்லையே. தமிழகம் இந்தியாவில் ஒரு மாநிலம் தானே. இந்த மாநிலத்தின் விவசாயம் அழிவதை இந்தியா கூட்டணி கண்டு கொள்ளவில்லையே. இப்படிப்பட்ட கூட்டணி தமிழகத்துக்கு தேவையா?
பா.ஜனதா மதவாத அரசியல் செய்வதாக விமர்சிக்கும் தி.மு.க. சாதிமோதல்களை தூண்டி சாதி அரசியல் செய்கிறது. நாங்குனேரி சம்பவம் அதற்கு ஒரு சாட்சி. குழந்தைகள் மனதில் சாதிய உணர்வை தூண்டி விடுகிறார்கள். அரசு பள்ளிகளில் மட்டும் தான் இப்படிப்பட்ட சம்வங்கள் நடக்கிறது. இதை தடுக்க தவறியது அரசின் இயலாமைதான்.
நாடு முழுவதும் பெண்களை பாதுகாப்பதற்கான கடுமையான சட்ட திருத்தங்களை மோடி அரசு கொண்டு வந்துள்ளது. அதை பாராட்ட மனம் வரவில்லை. அதிலும் மொழி பிரச்சனையை சொல்லி தங்கள் குறுகிய மனதை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
எதிர்க் கட்சிகள் என்ன சொன்னாலும் சரி. அதை கண்டு கொள்ளாமல் மக்களுக்கு என்ன தேவையோ அதை பா.ஜனதா அரசு தொடர்ந்து செய்து கொண்டே தான் இருக்கும்.
மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாது. நடக்கும் விஷயங்களை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நடக்கப்போகும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் புரிய வைப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க.வுக்கு பயம் வந்துள்ளது. அந்த பயம் இருக்கணும்.
- கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிகிறார்கள். அது விரைவில் உடைந்து விடும்.
சென்னை:
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து நடிகையும், பா.ஜ.க. மூத்த தலைவருமான குஷ்பு சுந்தர் விலகினார். தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு இந்தப் பதவி தடங்கலாக இருப்பதால் பதவி விலகியதாக குஷ்பு சுந்தர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
கடந்த சில மாதங்களாகவே நாட்டில் நடக்கும் சில விஷயங்கள் மீது கருத்துகளை வெளிப்படுத்தவும் எதிர்வினையாற்றவும் முடியாத நிலையில் இருப்பதாக உணர்ந்தேன். அதற்கு நான் வகிக்கும் மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி தடங்கலாக இருப்பதாக பல தருணங்களில் உணர்ந்தேன்.
இதனால், மிகவும் தீவிரமாக யோசித்து ஆணையத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் முடிவை எடுத்தேன். அதை முறைப்படி ஆணையத்தின் தலைவர் மற்றும் நான் சார்ந்த கட்சி மேலிடத்திடமும் வெளிப்படுத்திய பிறகே பதவி விலகல் கடிதத்தை கொடுத்தேன்.
தீவிர அரசியலில் என்னால் ஈடுபட முடியாமல் போவதற்கு மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி முக்கியக் காரணமாகும். இனி ஒரு அரசியல்வாதியாக என்னால் எனது கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்த இயலும். எனது முடிவுக்கு கட்சி ரீதியாகவோ வெளியில் இருந்தோ எந்தவொரு அழுத்தமோ கொடுக்கப்படவில்லை.
நான் தீவிர அரசியலில் ஈடுபட போவதால் தி.மு.க.வுக்கு பயம் வந்துள்ளது. அந்த பயம் இருக்கணும். அவர்கள் கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிகிறார்கள். அது விரைவில் உடைந்து விடும்.
இவ்வாறு நடிகை குஷ்பு கூறினார்.
- தலைவர்கள் சமூக வலைதளத்தில் புகழாரம் சூட்டியுள்ளனர்.
- திரையுலகிலும், அரசியலிலும் தனக்கென தனி இடம் பிடித்திருந்தவர்.
சென்னை:
நடிகர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி தலைவர்கள் சமூக வலைதளத்தில் புகழாரம் சூட்டியுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை:-
தே.மு.தி.க. நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, அமரர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த தினம் இன்று. திரையுலகிலும், அரசியலிலும் தனக்கென தனி இடம் பிடித்திருந்தவர்.
நேர்மையும் துணிச்சலும் உடைய தலைவராக விளங்கியவர். எளிய மக்கள் மீது பேரன்பு கொண்டிருந்த பண்பாளர், அமரர் கேப்டன் விஜயகாந்த் புகழ் என்றும் நிலைத்தி ருக்கும்.

பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு:-
விஜயகாந்த் நல்ல நடிகர் என்பதை விட நல்ல மனிதர். எல்லோரும் நல்லா இருக்க வேண்டும் என்று மனதார விரும்புபவர். கள்ளங்கபடம் இல்லாத சொக்கத் தங்கம் அவர்.
யாருக்கு என்ன பிரச்சினை என்றாலும் எதை பற்றியும் யோசிக்காமல் முதல் ஆளாக வந்து நிற்கும் மனிதநேயம் நிறைந்த தலைவர். அவர் புகழ் என்றும் மக்கள் மனங்களில் நிலைத்து நிற்கும்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்:-
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர் எனது நண்பர் கேப்டன் விஜய காந்த். ஈகையும், வீரமும் இதயத்தில் ஏந்திய நண்பரின் நினைவுகளை அவரது பிறந்த நாளில் போற்று கிறேன்.
இவ்வாறு அவர்கள் பதிவிட்டுள்ளனர்.
- 2012-ம் ஆண்டு கலகலப்பு படம் வெளியானது.
- 2018-ம் ஆண்டு கலகலப்பு-2 வெளியானது.
சென்னை:
சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான படம் 'கலகலப்பு'. விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், மனோபாலா, ஓவியா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

அடுத்து அந்த படத்தின் இரண்டாம் பாகம், 'கலகலப்பு-2 என்ற பெயரில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியானது.

இதில் ஜீவா, ஜெய் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதுகலவையான விமர்சனங்களைப் பெற்றது. விரைவில் 'கலகலப்பு 3' உருவாகும் என்று கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், 'கலகலப்பு 3' படத்தின் அப்டேட்டை நடிகை குஷ்பு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விரைவில் 'கலகலப்பு 3' உருவாக இருப்பதாகவும், நடிகர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.