search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adi Dravidians"

    • தலித் விடுதலை பேரவை வலியுறுத்தல்
    • காண்ட்ராக்ட் மூலம் வழங்கப்படும் காய்கறி, மளிகைபொருட்கள் தரமற்று வழங்கப்படுவதை தடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி தலித் விடுதலை பேரவையின் மாநில தலைவர் ரோக.அருள்தாஸ், பேரவை தலைவர் முருகையன், பொதுச் செயலாளர் பொன்னிவேல், நகர தலைவர் ஆதிகேசவன், மாநில செயலாளர் கண்ணன், தலைமை நிலைய செயலாளர் இளவ யதன், ஒருங்கிணைப்பாளர் மகேந்திரவேலன், கொள்கை பரப்பு செயலர் பரமசிவம் ஆகியோர் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2ஆண்டு நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்த எந்த திட்டமும் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. குறிப்பாக மகளிர்களுக்கு இலவச பஸ் பயணம் என்ற திட்டம். ஆதி திராவிட மக்களுக்கு கறவை மாடு வாங்க 100 சதவீத மானிய திட்டம், ஆதி திராவிட மக்களுக்கு கல்வீடு கட்டும் திட்டத்தில் 5 லட்சத்திலிருந்து கூடுதலாக 50 ஆயிரம் உயர்த்தும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தாத நிலையில் மீண்டும் சட்டசபை கூடி மக்களுக்கு என்ன பயன்? அரசு பணம் தான் விரயமாகிறது.

    எந்த திட்டமும் செயல்படுத்தாத நிலையில் பல துறைகளில் ரூ.28 கோடி ஊழல் நடந்து இருப்பதாக

    தனிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கு அரசு எந்த பதிலும் கூறாமல் இருப்பது, ஊழலுக்கு துணை போவதாக அர்த்தமாகிறது.

    ஆதி திராவிடர் மாணவர்கள் நிதியில் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்துபவர்கள் மீது சாதி வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மீண்டும் விடுதி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இன்பச் சுற்றுலா, பண்டிகை கால துணிக்கு பதில் பணம் வழங்க வேண்டும். காண்ட்ராக்ட் மூலம் வழங்கப்படும் காய்கறி, மளிகைபொருட்கள் தரமற்று வழங்கப்படுவதை தடுக்க வேண்டும்.

    லாஸ்பேட்டை பகுதியில் பல கல்லூரிகள் இருக்கிறது. அங்கு உள்ள மாணவர் விடுதி மூடப்படட்டு விட்டது.

    இதனால் சுமார் 6கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள விடுதியில் தங்கி செல்கின்றனர். இதனால் மாணவர்கள் அவதிபடுகின்றனர்.

    இதேபோல் வில்லியனூர் மாணவியர் விடுதியும் 3ஆண்டுகாளமாக மூடி கிடக்கிறது. அரசு உடனடியாக ஆதிதிராவிடர் மாணவர்கள் மீது கவனம் செலுத்தி மூடப்பட்ட விடுதிகளை திறக்கவும், கூடுதலாக மாணவர் - மாணவியர் விடுதிகள் நவீன வசதிகளுடன் திறக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    ×