என் மலர்
நீங்கள் தேடியது "ADMK"
- கூடா நட்பு கேடாய் முடியும் என அ.தி.மு.க.வினரை பார்த்து துணை சபாநாயகர் பிச்சாண்டி கூறினார்.
- 1999-ல் பா.ஜ.க.வுடன் நீங்கள் கூட்டணி வைத்திருந்த போது கூடா நட்பு எப்படி இருந்தது? என எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பினார்.
சென்னை:
அ.தி.மு.க.- பா.ஜ.க.வுடனான கூட்டணி குறித்து தமிழக சட்டசபையில் ஏற்கனவே விவாதங்கள் நடைபெற்று உள்ளன. இந்த நிலையில் இன்றும், தேர்தல் கூட்டணி தொடர்பாக சட்டசபையில் தி.மு.க.- அ.தி.மு.க.வினர் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கூடா நட்பு கேடாய் முடியும் என அ.தி.மு.க.வினரை பார்த்து துணை சபாநாயகர் பிச்சாண்டி கூறினார்.
இதற்கு, கூடா நட்பு கேடாய் முடியும் என்பது உங்கள் தலைவர் (கலைஞர்) சொன்னதுதான் என எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
1999-ல் பா.ஜ.க.வுடன் நீங்கள் கூட்டணி வைத்திருந்த போது கூடா நட்பு எப்படி இருந்தது? என எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பினார்.
- 160 தொகுதிகள் போக மீத முள்ள 74 தொகுதிகளை பா.ஜ.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
- மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.
அந்த வகையில் தி.மு.க.வை வீழ்த்தி ஆட்சியில் அமர வேண்டும் என்கிற எண்ணத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார். இதற்காக பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள அவர் அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் பல கட்சிகளை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்.
இதன் மூலம் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளும் சேர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதியானதையடுத்து மத்திய மந்திரி அமித்ஷா அளித்த பேட்டியில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று கூறியதாக செய்திகள் வெளியானது. இதுபற்றிய கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொல்லவில்லை என்று மறுத்தார்.
இதையடுத்து அ.தி.மு.க.வை தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியில் அமர வைத்திட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி மிகவும் தீவிரமாக உள்ளார். இதற்கு வசதியாக கூடுதல் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர்களை களம் இறக்க அவர் முடிவு செய்துள்ளார். கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 150 தொகுதிகளை நீங்கள் எடுத்துக் கொண்டு மீதமுள்ள 84 தொகுதிகளையும் எங்களிடம் கொடுத்துவிடுங்கள். நாங்கள் தேவையான தொகுதிகளை எடுத்துக் கொண்டு கூட்டணி கட்சிகளுக்கும் பிரித்து கொடுத்து விடுகிறோம் என்று கூறி உள்ளது.
ஆனால் எடப்பாடி பழனிசாமியோ 160 தொகுதிகளில் அ.தி.மு.க.வை போட்டியிட வைப்பதற்கு விரும்புகிறார். அப்போதுதான் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 117 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் கணக்காக உள்ளது. 160 தொகுதிகள் போக மீத முள்ள 74 தொகுதிகளை பா.ஜ.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் 49 தொகுதியில் மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே அ.தி.மு.க. தோல்வியை தழுவி இருந்தது. 34 சட்டமன்ற தொகுதிகளில் 2 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலும், 15 தொகுதிகளில் 4 சதவீத வாக்குகள் வித்தியாசத்திலுமே அ.தி.மு.க. தோல்வி அடைந்திருந்தது.
இந்த தொகுதிகள் எவை? எவை? என்பதை பட்டியல் போட்டு வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி அதனை அ.தி.மு.க. நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களிடம் கொடுத்து குறிப்பிட்ட 49 தொகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்ற அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று மாலையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். சட்டமன்ற தேர்தல் பணிகளில் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என்றும், தி.மு.க. அரசின் குறைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு அ.தி.மு.க.வுக்கு வெற்றியை தேடித் தர வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
- அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
- அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், விருந்து ஆகியவற்றை தவிர்த்த செங்கோட்டையன் இபிஎஸ் உடன் சந்தித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் செங்கோட்டையன் சந்தித்துள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், விருந்து ஆகியவற்றை தவிர்த்த செங்கோட்டையன் இபிஎஸ் உடன் சந்தித்துள்ளார்.
இங்கு, முதல் வரிசையில் இபிஎஸ்-ஐ நேராக பார்த்தபடி செங்கோட்டையன் அமர்ந்திருந்தார்.
- பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- பொது இடங்களிலும் கண்காணிப்பு மற்றும் சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பொது இடங்களிலும் கண்காணிப்பு மற்றும் சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
மேலும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும், அவரது வீட்டில் சோதனை நடத்தினா். இதனால் எடப்பாடி பழனிசாமி வீட்டின் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக இன்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.
- அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உறுதியான பின் நடைபெறும் முதல் கூட்டம் இது என்பதால் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஏப்.25-ந்தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உறுதியான பின் நடைபெறும் முதல் கூட்டம் இது என்பதால் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகர் உடல்நலக் குறைவால் காலமானார்.
- அவரது மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:
சென்னை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகர் உடல்நலக் குறைவால் காலமானார்.
இந்நிலையில், அவரது மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:
அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர், செய்தி தொடர்பாளர், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா கணவர் சந்திரசேகர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
கணவரை இழந்து மிகுந்த வேதனையில் வாடும் கோகுல இந்திராவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், இந்த துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், சந்திரசேகர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
- ஸ்ரீபெரும்பு தூர் தாலுகா அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
- காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி வாழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாததோடு, அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டு உள்ள தி.மு.க. அரசையும், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்தும், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அத்தியாவசியத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்திட வலியுறுத்தியும், அ.தி.மு.க. காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில், வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டம், கழக இலக்கிய அணிச் செயலாளர் வைகைச்செல்வன் தலைமையிலும் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சோம சுந்தரம், குன்றத்தூர் மேற்கு ஒன்றியக் செயலாளர், மதனந்தபுரம் பழனி, மாவட்ட துணைச் செயலாளர் போந்தூர் செந்தில் ராஜன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 7.5% இடஒதுக்கீடு தொடர்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அ.தி.மு.க.வினர் விவாதம் நடத்தினர்.
- அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்குமாறு அ.தி.மு.க. வலியுறுத்தினர்.
சட்டசபையில் 7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவ இளநிலை படிப்பில் சேர்ந்தோருக்கான கட்டணம் குறித்து கவனஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது.
7.5% இடஒதுக்கீடு தொடர்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அ.தி.மு.க.வினர் விவாதம் நடத்தினர்.
நீட் தேர்வு பிரச்சனையில் மக்களிடம் சாயம் வெளுத்துவிடும் என்பதால் 7.5% இடஒதுக்கீடு கொண்டு வந்தீர்கள் என மா.சுப்பிரமணியன் கூறினார்.
இதற்கு அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தவறான தகவலை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறி இருப்பதாக அமளியில் ஈடுபட்டனர்.
அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்குமாறு அ.தி.மு.க. வலியுறுத்தினர்.
- மெகா கூட்டணியை அமைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி திட்டம்.
- நாளை மறுநாள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கும் எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு
சென்னை:
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வீழ்த்தி ஆட்சியில் அமர வேண்டும் என்பதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக உள்ளார். இதற்காக பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது.
இந்த கூட்டணியில் பா.ம..க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளையும் சேர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணியை அமைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு காயை நகர்த்தி வருகிறார்.
சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் அவர் அடுத்தடுத்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு இன்று இரவு சைவ அசைவ உணவுகளுடன் இரவு விருந்து அளிக்கிறார்.
இதைத் தொடர்ந்து நாளையும், நாளை மறுநாளும் கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நாளை மாலை 4.30 மணி அளவில் அ.தி.மு.க. பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
அ.தி.மு.க. சார்பில் மாநில அளவிலான நிர்வாகிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வுக் கூட்டங்களை நடத்தி பூத் கமிட்டி பொறுப் பாளர்கள் போட்டிருப்பதை உறுதி செய்து எடப்பாடி பழனிசாமியிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதன்படி ஒவ்வொரு பூத்துக்கும் 45 வயதுக்குட்பட்ட 9 பேர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை கண்காணிப்பதற்காக 100-க்கும் மேற்பட்ட பொது கமிட்டி பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மாநில அளவிலான நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்த பூத் கமிட்டி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் அனைத்து பூத்களிலும் மிகுந்த கவனத்தோடு செயல்படுவதற்கான அறிவுரைகள் அவர்கள் மூலமாக பூத் கமிட்டியின் நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி நாளை பூத்தமிட்டி பொறுப்பாளர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடு கிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு சட்டமன்றதேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறு முக்கிய ஆலோசனைகளையும் கருத்துக்களையும் தெரிவிக்க உள்ளார். பூத் கமிட்டி நிர்வாகிகளை எப்படி ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும்? என்பது பற்றி இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கும் எடப்பாடி பழனி சாமி ஏற்பாடு செய்திருப்ப தன் மூலம் சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அவர் தீவிரமாக தயாராகி இருப்பது தெரியவந்து உள்ளது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் தொடர்பா கவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
- மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் வருகிற 25-ந்தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
வருகிற வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உறுதியான பின் நடைபெறும் முதல் கூட்டம் இது என்பதால் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஒரு துறையின் பிரச்சனையை 10 நிமிடத்தில் எப்படி பேசமுடியும்.
- அ.தி.மு.க. ஆட்சியில் அனைவருக்கும் பேசுவதற்கு நாங்கள் வாய்ப்பு கொடுத்தோம்.
சென்னை:
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறுகையில்,
* சட்டசபை சபாநாயகர் இன்று நடந்து கொண்ட விதம் ஜனநாயக படுகொலை.
* ஒரு துறையின் பிரச்சனையை 10 நிமிடத்தில் எப்படி பேசமுடியும். ஆக்கப்பூர்வமாக கருத்துகளை கூறுவதற்கு நேரம் கொடுக்க மறுக்கிறார்கள்.
* மக்கள் பிரச்சனை பேசுவதற்கு அனுமதி கொடுக்காதது கண்டிக்கத்தக்கது.
* அ.தி.மு.க. ஆட்சியில் அனைவருக்கும் பேசுவதற்கு நாங்கள் வாய்ப்பு கொடுத்தோம்.
* முறையாகத்தான் அனுமதி கேட்டேன். தவறாக இருந்தால் நீக்கி விடுங்கள் என்று கூறினேன்.
* டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக யாரும் பதில் கூறவில்லை.
* யாரும் பதில் கூறாததால் ரூ.1000 கோடி முறைகேடு புகார் நிரூபணம் ஆகிறது.
* மதுபாட்டிலுக்கு ரூ.10 வீதம் கூடுதலாக விற்பதால் ரூ.5,400 கோடி கிடைக்கிறது என்றார்.
- சென்னை ஐகோர்ட்டும், அமைச்சர் பொன்முடி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
- போராட்டத்தில் அமைச்சர் பொன்முடியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கவுதமி உள்ளிட்டோர் முழக்கமிட்டனர்.
தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி, சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் பேசிய கருத்துகள் சர்ச்சையானது. அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு, அ.தி.மு.க., பா.ஜ.க. உள்பட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன.
இதற்கிடையில், தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
பின்னர், தன்னுடைய கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டார். சென்னை ஐகோர்ட்டும், அமைச்சர் பொன்முடி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில், பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக அமைச்சர் பொன்முடியை கண்டித்து சேலத்தில் அ.தி.மு.க. மகளிரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க. மகளிரணி கண்டன போராட்டத்தில் நடிகை கவுதமி பங்கேற்றார்.
போராட்டத்தில் அமைச்சர் பொன்முடியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கவுதமி உள்ளிட்டோர் முழக்கமிட்டனர்.