search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "afganistan"

    • வங்கதேசத்திற்கு எதிரான அடுத்த டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து ஹசரங்கா இடைநீக்கம் செய்யப்படுவார்.
    • 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என இலங்கை கைப்பற்றியது. இதில் ஹசரங்கா தொடர் நாயகன் விருதை பெற்றார்.

    இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா 2 போட்டிகளில் விளையாட தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

    தம்புல்லாவில் நடைபெற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில், தான் வீசிய பந்துக்கு NO BALL கொடுத்ததற்கு கள நடுவர் லிண்டன் ஹனிபல்லிடம் ஆவேசமாக பேசியதற்காக வனிந்து ஹசரங்காவிற்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால், வங்கதேசத்திற்கு எதிரான அடுத்த டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து ஹசரங்கா இடைநீக்கம் செய்யப்படுவார்.

    ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என இலங்கை கைப்பற்றியது. இதில் ஹசரங்கா தொடர் நாயகன் விருதை பெற்றார்.

    பாகிஸ்தானில் பிறக்கும் ஆப்கானிஸ்தான் அற்றும் வங்காளதேச அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். #Pakistan #ImranKhan #AfghanRefugee
    இஸ்லாமாபாத்:

    ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் இருந்து பல ஆயிரம் அகதிகள் அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்கின்றனர். உள்நாட்டு போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக குடியேறுகின்றனர்.

    அவ்வாறு அகதிகளாக குடியேறிய மக்களுக்கு எந்த நாட்டிலும் குடியுரிமை உட்பட எவ்வித உரிமைகளும் வழங்கப்படுவது இல்லை. இதனால் அவர்கள் அன்றாட வாழ்வுக்கு மிகவும் போராடும் சூழல் இருக்கிறது.



    இந்த நிலையை ஒழிக்கும் முயற்சியில் தற்போது பாகிஸ்தான் அரசு களமிறங்கியுள்ளது. பாகிஸ்தானில் பிறக்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேச அகதிகளுக்கு குடியுரிமை மற்றும் பாஸ்போர்ட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பு தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றில் பேசிய பிரதமர் இம்ரான் கான், அகதிகள் எவ்வித அடையாளங்களும் இல்லாததால் வேலை வாய்ப்புகள் இன்றி அவர்கள் மிகவும் சிரமப்படுவதாகவும், அதனால் நடைபெறும் பல்வேறு குற்றங்களை தடுக்கவும் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தானில் 2.7 மில்லியன் ஆப்கானிஸ்தான் அகதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. #Pakistan #ImranKhan #AfghanRefugee
    ஆப்கானிஸ்தானில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #Afganistan #SuicideAttack
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தினம் தினம் பாதுகாப்பு படையினர் மீதும், அப்பாவி பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் உரிய பதிலடி கொடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள முகமந்த் தாரா என்ற மாவட்டத்தில் காவல்துறை அதிகாரியான பிலால் பாட்சா என்பவர் அட்டூழியம் செய்வதாகவும், அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். அந்த போராட்டத்தில் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 57 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #Afganistan #SuicideAttack
    ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப்படைகளின் தாக்குதலில் ஐ.எஸ் இயக்கத்தின் தளபதி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #IS #US #Afganistan
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் ஒரு சில பகுதிகளில் இருந்து வருகிறது. தலிபான், ஐ.எஸ் போன்ற பயங்கரவாதிகளை ஒடுக்க அந்நாட்டு பாதுகாப்பு படையும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு படைகளும் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது.

    அதன்படி, கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்க கூட்டுப்படைகள் மற்றும் ஆப்கானிஸ்தான் ராணுவம் இணைந்து ஐ.எஸ் அமைப்பு பதுங்கி இருந்ததாக கருதிய இடங்கள் மீது பல்வேறு வித தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் இயங்கும் ஐ.எஸ் இயக்கத்தின் தலைமை தளபதி அபு சயீத் உயிரிழந்ததாக அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் ஷா உசைன் தெரிவித்துள்ளார்.

    இதே தாக்குதலில் ஐ.எஸ் இயக்கத்தின் ஆப்கானிஸ்தான் தலைவனாக செயல்பட்டு வந்த அபு சாட் எர்ஹாபி என்பவன் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. #IS #US #Afganistan
    ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு தலைமை வகித்த அபு சாட் எர்ஹாபி கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. #Afganistan #ISHeadKilled
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் ஒரு சில பகுதிகளில் இருந்து வருகிறது. தலிபான், ஐ.எஸ் போன்ற பயங்கரவாதிகளை ஒடுக்க அந்நாட்டு பாதுகாப்பு படையும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு படைகளும் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது.

    அதன்படி, ஐ.எஸ் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த பகுதியில் ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதலில் ஐ.எஸ் இயக்கத்தின் ஆப்கானிஸ்தான் தலைவனாக செயல்பட்டு வந்த அபு சாட் எர்ஹாபி என்பவன் கொல்லப்பட்டான். மேலும், 10 ஐ.எஸ் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும், பல்வேறு ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாகவும் தேசிய பாதுகாப்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது. #Afganistan #ISHeadKilled
    ஆப்கானிஸ்தானில் சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 போலீசார் உயிரிழந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. #Afganistan #TalibanAttack
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் அரசுக்கு எதிராக மிகவும் தீவிரமாக போராடி வருகிறது. நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி போட்டி அரசு ஒன்றை நடத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகள், போலீசார் மீதும், பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    அவர்களை எதிர்த்து அரசு படைகளும் தீவிரமாக போராடி வருகின்றனர். பாதுகாப்பு படையினரின் பதிலடி தாக்குதல்களில் பயங்கரவாதிகளும், அவர்களது படைகளும் தகர்க்கப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் ஜாபுல் மாகாணத்தில் உள்ள சோதனைச் சாவடியில் பயங்கரவாதிகள் எதிர்பாராதவிதமாக நடத்திய தாக்குதலில் 7 போலீசார் வீர மரணம் அடைந்தனர். அதையடுத்து, போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர். போலீசாரின் இந்த பதிலடி தாக்குதலில் 7 தலிபான் பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Afganistan #TalibanAttack
    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள கிராமப்புற மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்துக்கு வெளியே நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Afganistan
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கும், அரசு படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. சமீபத்தில் ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் மீது அரசுப்படை நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் அமைந்துள்ள கிராமப்புற மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்துக்கு வெளியே தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை அதிகாரிகள் 3 பேர் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், அமைச்சகத்தில் இருந்து வெளிவரும் அதிகாரிகளை குறிவைத்து இந்த தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்,ம் இதில் 13 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளாதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. #Afganistan 
    ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆப்கானிஸ்தான் அதிபர் அஷரப் கனி உறுதியளித்துள்ளார். #AfganSikhAttack
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் சமீபத்தில் ஐ.எஸ் அமைப்பினர் ஜலாலாபாத் பகுதியில் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் சீக்கியர்கள் பலர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் அதிபரை சந்திக்க சீக்கியர்கள் குழு சென்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்தது. இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, குருத்வாராவுக்கு சென்று இறந்த சீக்கியர்களுக்காக அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து, வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். #AfganSikhAttack
    ஆப்கானிஸ்தானில் ரம்ஜானையொட்டி அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில், தலிபான்கள் விரும்பினால் போர் நிறுத்தத்தை நீட்டிக்க தயார் என அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார். #Afganistan #Taliban #Ceasefire
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வருகிறது. நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி தன்வசம் வைத்துள்ள தலிபான், அரசை கவிழ்க்க போராடி வருகிறது. இதனால் அரசுக்கு எதிராக போட்டி அரசு ஒன்றையும் நடத்தி வருகிறது.

    தலிபான் அமைப்பை கட்டுப்படுத்த அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான அரசும் பல்வேறு வழிகளில் போராடி வருகிறது. இருதரப்பிலும் போரால் பல உயிர்கள் பலியாகின்றன.

    இதற்கிடையே கடந்த மாதம் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் கொண்டாடப்பட்டது. ரம்ஜானை முன்னிட்டு, 5 நாள் போர் நிறுத்தம் ஒன்றை அதிபர் அஷ்ரப் கானி அறிவித்திருந்தார். இதனை ஏற்ற தலிபான் அமைப்பும் 3 நாள் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்திருந்தது.



    இந்நிலையில், இந்த போர் நிறுத்தம் முடிவடைந்து விட்டதால், தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் செவ்வாய் அன்று மீண்டும் . போர்க்களம் திரும்பினர். எனவே, அரசு படைகளும் போர் நிறுத்தம் முடிந்து பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இனி ஈடுபடும் என அதிபர் அஷ்ரப் கனி அறிவித்துள்ளார். அதன்படி தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கையை பாதுகாப்பு படையினர் தொடங்கி உள்ளனர்.

    இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அஷ்ரப், அமைதியை விரும்புவதை வெளிக்காட்டவே இந்த போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாகவும், தலிபான் அமைப்பு விரும்பினால், எப்போது வேண்டுமானாலும் போர் நிறுத்தத்தை நீட்டிக்க தயார் எனவும் தெரிவித்தார்.  #Afganistan #Taliban #Ceasefire
    ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரில் தலிபான் பயங்கரவாதிகளின் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 15 பேர் பலியாகியுள்ளனர். #Afghanistan #Talibanattack
    காபூல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் அந்நாட்டின் அரசுக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் பல ஆண்டுகளாக போர் நடந்துவருகிறது. இதுவரை ஏராளமான பொதுமக்களும், பாதுகாப்பு படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.

    மேலும், ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளையும் தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி போட்டி அரசு ஒன்றை நடத்தி வருகின்றனர். இதையடுத்து இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடு என்பதால் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு 5 நாள் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி அழைப்பு விடுத்திருந்தார்.

    அவரது அழைப்பை ஏற்ற தலிபான் அமைப்பு 3 நாள் போர் நிறுத்தத்துக்கு சம்மதிப்பதாக ஒப்புக்கொண்டு இருந்தது. ஆனால் தலிபான் ஒப்புக்கொண்ட 3 நாள் போர் நிறுத்தம் என்று துவங்கும் என்பது குறித்த அறிவிப்பை தலிபான் அமைப்பு வெளியிடவில்லை.

    இந்நிலையில், இன்று ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் பகுதியில் உள்ள கல்வித்துறை கட்டிடம் அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். மேலும், குண்டூஷ் மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 15 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.

    பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பாதுகாப்பு படை வீரர்களும் எதிர்தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் சில பகுதிகளிலும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதால் தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. #Afghanistan #Talibanattack
    ஆப்கானிஸ்தான் அணி 2-வது டி20 போட்டியில் ரஷித் கானின் சிறப்பான பந்துவீச்சால் வங்காளதேசத்தை வீழ்த்தியதன் மூலம் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
    டேராடூன்:

    வங்காளதேசம்- ஆப்கானிஸ்தான் இடையே மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நடந்த முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டி நேற்று டேராடூனில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அந்த அணியின் தமிம் இக்பால் 43 ரன்னிலும், முஷ்பிகுர் ரகுமான் 23 ரன்னிலும்,  அபு ரைடர் ரோனி 21 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் வங்காளதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 4 விக்கெட்களும், மொகமது நபி 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

    இதையடுத்து, 135 ரன்களை இலக்காக கொண்டு ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஆடிய மொகமது ஷசாத் 24 ரன்களும், உஸ்மான் கனி 21 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். அடுத்து இறங்கிய சாமுல்லா ஷென்வாரி அதிரடியாக ஆடி 3 சிக்சர், 2 பவுண்டரியுடன் 49 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மொகமது நபி 15 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதைத்தொடர்ந்து, வங்காள தேசத்துடனான டி-20 தொடரை ஆப்கானிஸ்தான் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி, முன்னிலை வகிக்கிறது. #Afghanistan #Bangladesh #T20
    ×