என் மலர்
முகப்பு » Agni Veil
நீங்கள் தேடியது "Agni Veil"
- வெயில் கடுமையாக இருப்பதாலும் அதனை தணிக்கை செய்ய இந்த கடலில் சிறியவர் முதல் பெரியவர் வரை குளித்து வருகிறார்கள்.
- ஊராட்சி பேரூராட்சி நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
விழுப்புரம்:
மரக்காணம் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தீர்த்தவாரி பகுதியில் பல்வேறு ஊர்களில் இருந்தும் உள்ளூரிலிருந்தும் காலை மாலை என 100 -க்கும் மேற்பட்டோர் இந்த கடலில் குளித்து ஆனந்த குளியல் போடுவது வழக்கம். இதனால் கடந்த சில வாரங்களாக அக்னி வெயில் கடுமையாக இருப்பதாலும் அதனை தணிக்கை செய்ய இந்த கடலில் வெயிலில் இருந்து தப்பிக்க சிறியவர் முதல் பெரியவர் வரை குளித்து வருகிறார்கள். இதனால அலைக்கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் ஒரு சில சமயங்களில் உயிர் பலி ஏற்படுகிறது. எனவே மரக்காணம் போலீசார் எச்சரிக்கை பலகை வைத்து எச்சரித்து வருகின்றனர். இது சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் அல்லது ஊராட்சி பேரூராட்சி நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
×
X