என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Agniban"
- அக்னிபான் ராக்கெட் செயற்கைகோள் எதுவும் இன்றி விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
- இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.
ஐஐடி சார்பில் உருவாக்கப்பட்ட அக்னிபான் ராக்கெட் சோதனை முயற்சி வெற்றிப்பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
அக்னிபான் ராக்கெட் செயற்கைகோள் எதுவும் இன்றி விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
தனியார் பங்களிப்புடன் புதிய வகை ராக்கெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
திரஸ்ட் வெக்டார் கன்ட்ரோல்ட், ஜிம்பல்டு மோட்டார் தொழில்நுட்பத்தில் அக்னிபான் ராக்கெட் இயங்குகிறது.
இந்தியாவின் முதல் அரை கிரையோஜெனிக் இயந்திரத்தை அக்னிபான் ராக்கெட் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.
- ராக்கெட் ஏவப்படும் போது திட்டமிடப்பட்டவாறு செங்குத்தாக மேலே ஏறி அதன் சுற்றுவட்ட பாதையில் பயணிக்கும்.
- பணிகளை இன்னும் சில நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா:
சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களின் அக்னிகுல் ஸ்டார்ட் அப் நிறுவனம் 3டி பிரிண்டிங் முறையிலான 'அக்னிபான்' என்ற ராக்கெட்டை உருவாக்கியுள்ளது.
இஸ்ரோ மூலம் பெரிய அளவிலான செயற்கை கோள்கள் அனுப்பி வரும் நிலையில் அக்னிபான் ராக்கெட் மூலம் 30 கிலோ முதல் 300 கிலோ வரையிலான சிறிய அளவிலான செயற்கைகோள்களையும் விண்ணில் ஏவ முடியும்.
விண்ணில் 500 முதல் 700 கிலோ மீட்டர் தொலைவில் பூமியின் கீழ் புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தவும் முடியும். இதனால் குறைந்த செலவில் செயற்கைக்கோள்களை ஏவலாம். இதற்கான ராக்கெட் ஏவுதளம் (அக்னிகுல்) இஸ்ரோவில் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த ராக்கெட்டின் 2 பாகங்கள் தயார் செய்யப்பட்டு பரிசோதனைகள் முடிக்கப்பட்டது. இந்நிலையில் முதல் பாகம் 3டி பிரிண்டிங் முறையில் தயார் செய்யப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னையை தளமாக கொண்ட ராக்கெட் ஸ்டார்ட் அப் அக்னி குல் காஸ்மோஸ் நிறுவனம், ஆந்திராவின் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள தனது ஏவு தளத்தில் அதன் தொழில்நுட்ப சோதனையின் ஒரு பகுதியாக ராக்கெட்டை ஒருங்கிணைக்கும் செயல் முறையை தொடங்கி உள்ளது.
இது அக்னிலெட் எந்திரத்தால் இயக்கப்படும் சிங்கிள் ஸ்டேஜ் லான்ஜ் வாகனம் மற்றும் முற்றிலும் 3டி அச்சிடப்பட்ட, சிங்கிள் பீஸ், 6 கே.என். அறை- கிரையோ ஜெனிக் எந்திரம் ஆகும். இந்த ராக்கெட் ஏவப்படும் போது திட்டமிடப்பட்டவாறு செங்குத்தாக மேலே ஏறி அதன் சுற்றுவட்ட பாதையில் பயணிக்கும். இந்த பணிகளை இன்னும் சில நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் அக்னி பான் ராக்கெட் விரைவில் விண்ணில் ஏவப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்