search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agriculture Development"

    • விவசாயத்துக்கு தேவையான பண்ணைக் கருவிகள் விலைக்கு மற்றும் வாடகைக்கும் கிடைக்கும்.
    • மாநில செயற்குழு உறுப் பினர் ராமு, மீனவர் பிரிவு அமைப்பாளர் பழனி முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    விவசாயிகளுக்கு தேவையான அனைத்து சேவைகளும் ஒரே இடத் தில் கிடைக்கும் நோக்கத் தில், 'விவசாய மேம்பாட்டு 'மையம்' என்ற திட்டத்தை பிரதமர் மோடி  தொடங்கி வைத்தார்.

    இதன்படி, நாடு முழு வதும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மாதிரி விவசாய மேம்பாட்டு மையங்கள் தொடங்கப்பட்டது

    இந்த திட்டத்தின் கீழ், தற்போதுள்ள சில்லறை விற்பனை உரக்கடைகள், விவசாயிகளின் தேவைகள் மற்றும் சேவைகளை நிறை வேற்றும் விவசாய மேம்பாட்டு மையமாக மாற்றப்படும். இந்த மையங்களில் தரமான உரங்கள், பூச்சிக் கொல்லிகள், விதைகள்ஆகியவை விற்கப்படும். இந்த மையங்கள் மூலமாக விவசாயத்துக்கு தேவையான பண்ணைக் கருவிகள் விலைக்கு மற்றும் வாடகைக்கும் கிடைக்கும்.

    புதுச்சேரி பா.ஜ., விவசாய அணி சார்பில், விவசாய மேம்பாட்டு மையம் தொடக்க நிகழ்ச்சி, அரியாங்குப்பத்தில் அமைந்துள்ள விவசாய மேம்பாட்டு மையமாக மாற்றப்பட்ட சந்தானம் அக்ரோ சர்வீஸ் சென்டரில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் பிரதமரின் தொலைக்காட்சி உரை விவசாயிகளுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு விவசாய அணி தேசிய செயற் குழு உறுப்பினர் பாரதி மோகன் தலைமை தாங்கினார். கட்சியின் தொகுதி தலைவர் செல்வகுமார், மாநில செயற்குழு உறுப் பினர் ராமு, மீனவர் பிரிவு அமைப்பாளர் பழனி முன்னிலை வகித்தனர்.

    துணைத் தலைவர்கள் செல்வம், முருகன், மாவட்ட செயலாளர் நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தொகுதி பொதுச் செயலாளர் முருகவேல் நன்றி கூறினார்.

    ×