என் மலர்
நீங்கள் தேடியது "Air Taxi"
- முழுவதுமாக உள்நாட்டு உபகரணங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றன.
- இரண்டு இருக்கைகள் கொண்ட ஒரு விமான டாக்சி வடிவமைக்கப்பட்டு வி2 என்று பெயரிடப்பட்டது.
அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விமான டாக்சிகளை நகரங்கள் மற்றும் பெருநகரங்களில் கிடைக்கச் செய்வதற்கான முயற்சிகள் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன.
இந்தப் பந்தயத்தில் சீனா போன்ற நாடுகள் மட்டுமே முன்னிலையில் உள்ள நிலையில், ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ஒரு இளைஞர் விமான டாக்சிகள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
குண்டூரைச் சேர்ந்த சாவா அபிராம், அமெரிக்காவில் ரோபாட்டிக்ஸ் பொறியியலில் முதுகலைப் பட்டம் முடித்தார். நம் நாட்டில் ஏதாவது ஒரு அமைப்பை நிறுவும் நோக்கத்துடன் அவர் இங்கு வந்தார்.
போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில் விமான டாக்சிகளை கிடைக்கச் செய்வது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பி, அவர் அதை கவனமாக ஆய்வு செய்து வருகிறார்.
விமானி இல்லாமல் தரையில் இருந்து கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த வாகனம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. விமானி இல்லாமல் இந்த வாகனங்களை இயக்க அனுமதிப்பதில்லை என்பதால், இரண்டு மற்றும் மூன்று இருக்கைகளுடன் கூடிய விமான டாக்சிகள் தயாரித்தார்.
முழுவதுமாக உள்நாட்டு உபகரணங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றன. இரண்டு இருக்கைகள் கொண்ட ஒரு விமான டாக்சி வடிவமைக்கப்பட்டு வி2 என்று பெயரிடப்பட்டது.
சோதனை ஓட்டம் வெற்றியடைந்தது. அவர் 3 இருக்கைகள் ஏர் டாக்சி தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
- இந்த சேவை 2026 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
- கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது.
நாட்டின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனம் "இன்டிகோ"வை நிர்வகித்து வரும் இன்டர்குளோப் என்டர்பிரைசஸ் நிறுவனம் இந்தியாவில் வான்வழி டாக்சி (Air Taxi) சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது.
அதன்படி டெல்லியின் கனௌட் பிளேஸ்-இல் இருந்து ஹரியானாவின் குருகிராமிற்கு முதற்கட்டமாக வான்வழி டாக்சி சேவை இயக்கப்பட இருக்கிறது. இந்த சேவை 2026 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

வான்வழி டாக்சி சேவையானது பயணிகளை டெல்லியில் இருந்து ஹரியானாவிற்கு (125 கிலோமீட்டர்கள்) ஏழு நிமிடங்களில் அழைத்து சென்றுவிடும். இதற்கான கட்டணமாக பயணி ஒருவருக்கு ரூ. 2 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 3 ஆயிரம் வரை வசூலிக்கப்பட இருக்கிறது.
இந்தியாவில் வான்வழி டாக்சி சேவையை கொண்டு வருவதற்காக இன்டர்குளோப் என்டர்பிரைசஸ் மற்றும் ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனங்கள் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி இந்தியாவில் முற்றிலும் எலெக்ட்ரிக் திறன் கொண்ட வான்வழி டாக்சி சேவை அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
மேலும், இந்த சேவையை வழங்குவதற்காக இன்டர்குளோப் நிறுவனம் ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து கிட்டத்தட்ட 200 மிட்நைட் டிரோன் விமானங்களை வாங்க இருக்கிறது. இதேபோன்ற சேவை மும்பை மற்றும் பெங்களூரு இடையேயும் அறிமுகம் செய்யப்படுகிறது.