என் மலர்
நீங்கள் தேடியது "Al Shifa Hospital"
- அல் ஷிபாவில் சுமார் 1500 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்
- தாக்குதல்களிலிருந்து தப்பிக்க புகலிடம் தேடி 15 ஆயிரத்திற்கும் மேல் அங்கு சென்றுள்ளனர்
வடக்கு காசாவில் அல் ஷிபா மற்றும் அல் குத்ஸ் எனும் 2 மருத்துவமனைகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் அந்த மருத்துவமனைகள் புதிய நோயாளிகளுக்கு அனுமதியின்றி மூடப்பட்டுள்ளன.
எரிபொருள் மற்றும் மருந்து தட்டுப்பாடு நிலவுவதால், முன்னரே அனுமதிக்கப்பட்டுள்ள பல நோயாளிகள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
அல் ஷிபா மருத்துவமனையில் 1500 நோயாளிகள் மற்றும் 1500 மருத்துவ பணியாளர்களும் உள்ளனர்.
இது மட்டுமின்றி, ஆங்காங்கே நடைபெறும் குண்டு வெடிப்புகளால், சுமார் 15 ஆயிரம் பேர் அங்கு புகலிடம் தேடி வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனை வாசலிலேயே ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் சண்டை நடப்பதாகவும் மக்கள் வெளியேற உதவுவதாக இஸ்ரேல் கூறுவது உண்மையில்லை என்றும் மருத்துவ பணியாளர்கள் கூறுகின்றனர்.
காசா மருத்துவமனைகளை ஹமாஸ் மறைவிடங்களாக பயன்படுத்துவதால் அவற்றின் அருகே தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் கூறி வருகிறது. ஆனால், மருத்துவமனைகளை அவ்வாறு பயன்படுத்தவில்லை என ஹமாஸ் மறுக்கிறது.
இந்நிலையில், புகலிடம் தேடி அங்கு சென்றுள்ள 15,000 பேர் கதி குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் இல்லை.