search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "alcohol seized"

    • ஒரு பையுடன் நின்று கொண்டு இருந்தார்.
    • அவர் போட்டு சென்ற பையை சோதனை நடத்தினர்.

    பவானி, 

    பவானி அருகே உள்ள லட்சுமி நகர் கோண வாய்க்கால் பகுதியில் ஈரோடு ரோட்டில் சித்தோடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த பகுதியில் ஒருவர் ஒரு பையுடன் நின்று கொண்டு இருந்தார். அவர் போலீசாரை கண்டதும் அந்த பையை அங்கேயே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். இதையடுத்து போலீசார் அவர் போட்டு சென்ற பையை சோதனை நடத்தினர்.

    இதில் ஒரு லிட்டர் கேனில் 11 பிளாஸ்டிக் பாட்டில்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எரி சாராயம் இருப்பது கண்டறி யப்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த 11 சாராய பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து போலீசார் தப்பி ஓடியவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பவானி லட்சுமி நகர் அருகே உள்ள கோண வாய்க்கால் ஒய்யாங்காடு பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்பது தெரிய வந்துள்ளது. ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை வலை வீசி தேடி வருகின்றனர். 

    புதுச்சேரியில் இருந்து பண்ருட்டிக்கு சரக்கு வாகனத்தில் மதுபாட்டில்கள், சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி எல்.என்.புரம் பாரதி நகரில் ஒரு சரக்கு வாகனம் வெகுநேரமாக நிற்பதாகவும், அதில் மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் இருப்பதாகவும் பண்ருட்டி போலீஸ் நிலையத்துக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் சரக்கு வாகனத்தில் இருந்த 2 பேர் இறங்கி, தப்பி ஓடினர். உடனே போலீசார் விரட்டிச்சென்று ஒருவரை பிடித்தனர். மற்றொருவர் ஓடிவிட்டார். பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில், விழுப்புரம் அருகே உள்ள மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கபிலன்(வயது 32) என்பதும், தப்பி ஓடியவர் மடுகரையை சேர்ந்த கிருஷ்ணன் மகன் குமார்(23) என்பதும் தெரியவந்தது.

    பின்னர் அந்த சரக்கு வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். அதில் புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் விற்பனை செய்யக்கூடிய 500 மதுபாட்டில்கள் மற்றும் 60 லிட்டர் சாராயம் இருந்தது. இது தொடர்பாக கபிலனிடம் நடத்திய விசாரணையில், புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் சாராயத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கபிலனை போலீசார் கைது செய்தனர். மேலும் மதுபாட்டில்கள், சாராயம், இவற்றை கடத்த பயன்படுத்திய சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய குமாரை போலீசார் தேடி வருகின்றனர். 
    புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் கடத்திய மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கூனிமேடு கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு மரக்காணம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வந்த ஒரு காரை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்தனர். அதில் 474 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே கார் டிரைவரை பிடித்து போலீசார் விசாரித்ததில், அவர் சென்னை கல்லடிப்பட்டு பகுதியை சேர்ந்த அசோக்குமார் (வயது 38) என்பதும், புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து அசோக்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
    சீர்காழி அருகே பாக்கெட் சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    நாகை எஸ்.பி. விஜயக்குமார் உத்தரவின் பேரில் திருவெண்காடு இன்ஸ்பெக்டர் வேலுதேவி, தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சீர்காழி அருகே ஆலங்காடு பகுதியில் வாகனசோதனை மேற்கொண்டனர். அப்போது காரைக்கால் பகுதியிலிருந்து வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் 200 லிட்டர் சாராயம் பாக்கெட்களில் அடைக்கப்பட்டு கடத்தி வருவது தெரிந்தது. இதையடுத்து சாராயத்தோடு காரையும் பறிமுதல் செய்து காரைக்கால் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 26) என்பவரை கைது செய்தனர்.

    இதேபோல் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் பெரம்பூர் அருகே வாகனதணிக்கை செய்தபோது மோட்டார் சைக்கிளில் 120லிட்டர் சாராயம் கடத்திவந்த மாங்கா.சண்முகம்(48) என்பவரை கைது செய்தனர்.

    லால்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேனில் கடத்தி செல்லப்பட்ட 22 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    லால்குடி:

    திருச்சி மாவட்டம்லால் குடியில் நேற்று மாலையில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் லால்குடி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை மறித்து சோதனை செய்தனர். அதில் 22 பெட்டிகள் மது பாட்டில்கள் இருந்தது. உடனே இது குறித்து வேனில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சங்கர் (25) , வேன் டிரைவர் தஞ்சாவூரைசேர்ந்த அருள் ஆராக்கியதாஸ் என்பதும் தெரியவந்தது. அவர்கள் லால்குடி பூவானுரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மொத்தமாக மதுபாட்டில்கள் வாங்கி அதை தஞ்சாவூருக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. 

    உடனே போலீசார் 22 மதுபாட்டில்கள் பெட்டிகளையும், வேனையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. பிடிப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ 1 லட்சத்து 5 ஆயிரமாகும். 

    கஜா புயலால் தஞ்சாவூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடையில் மது விற்பனைக்கு தடை விதிக்கபட்டுள்ளது. இதனால் அவர்கள் திருச்சியில் இருந்து தஞ்சைக்கு மதுபாட்டில்கள் கடத்தி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
    புதுவையிலிருந்து சேலத்துக்கு காரில் கடத்தப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்புள்ள மதுப்பாடில்களை போலீசார் பறிமுதல் செய்து வாலிபர் கைது செய்தனர்.

    விழுப்புரம்:

    புதுவையிலிருந்து தமிழகத்துக்கு மதுப்பாட்டில்கள் கடத்துபடுவதை தடுக்கும் பொருட்டு விழுப்புரத்தில் மதுவிலக்கு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வழக்கம் போல் இன்று காலை விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள கெங்கராய பாளையம் மது விலக்கு சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை சோதனை செய்த போது அதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள மதுப்பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கபட்டது.

    இதைத் தொடர்ந்து கார் டிரைவரிடம் நடத் திய விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த மேல் தொம்மை பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார் (வயது 20) என்பதும் அவர் புதுவையிலிருந்து சேலத்துக்கு மதுப்பாட்டில்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    அதன் பின்னர் கார் டிரைவர் நிதிஷ்குமாரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து மதுப்பாட்டில்களையும் காரையும் பறிமுதல் செய்தனர். 

    ×