என் மலர்
நீங்கள் தேடியது "All Women Police Station"
- பொதுமக்களின் புகார்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுரை வழங்கினார்.
- கோயம்பேடு, புழல், நீலாங்கரை, தரமணி, மீனம்பாக்கம் ஆகிய அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களையும் திறந்து வைத்தார்.
சென்னை:
சென்னையில் புதிதாக கோட்டூர்புரம், கோயம்பேடு, புழல், நீலாங்கரை, தரமணி, மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் 6 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி அபிராமபுரம் போலீஸ் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை கமிஷனர் சங்கர்ஜிவால் இன்று காலை திறந்து வைத்தார். அப்போது அவர், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர், போலீசாரை வாழ்த்தி பணிகள் சிறக்கவும், பொதுமக்களின் புகார்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுரை வழங்கினார்.
இதே போல் கோயம்பேடு, புழல், நீலாங்கரை, தரமணி, மீனம்பாக்கம் ஆகிய அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களையும் அவர் திறந்து வைத்தார். இதில் இணை கமிஷனர் திஷா மிட்டல், மயிலாப்பூர் துணை கமிஷனர் ரஜத் சதுர்வேதி, உதவி கமிஷனர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- கூடுதலாக புதிதாக 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- காவல் நிலையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
சென்னை:
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல் துறை சார்பில் அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் உருவாக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இப்போது கூடுதலாக புதிதாக 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த காவல் நிலையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.அதன்படி வளசர வாக்கம், போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி, வண்டலூர், காட்பாடி, திருவண்ணாமலை, ஊரகம், திட்டக்குடி, கரூர்ஊரகம், கோட்டைப்பட்டினம், ஒரத்தநாடு, முத்துப்பேட்டை, மேட்டுப்பாளையம், பெருந்துறை, ஊத்தங்கரை, ஊமச்சிக்குளம், திண்டுக்கல் ஊரகம், பெரியகுளம், முது குளத்தூர், சேரன்மாதேவி, புளியங்குடி ஆகிய 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் புதிதாக திறக்கப்பட்டுள்ளது.