என் மலர்
நீங்கள் தேடியது "American woman"
- அனுமதியின்றி டிரோன் கேமரா உதவியுடன் அவர் படம் பிடித்தார்
- அமெரிக்க அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே சமாதான தூதுவராக செயல்படும் கத்தார் செயல்பட்டது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 இல் அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அதிகாரத்துக்கு வந்த பின்னர் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இதற்கிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமெரிக்கப் பெண் பாயே ஹால் என்பவரை தலிபான்கள் சிறைபிடித்தனர்.
ஆப்கனிஸ்தான் வந்த அவர் அனுமதியின்றி டிரோன் கேமரா உதவியுடன் அவர் படம் பிடித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை விடுவிப்பதற்கு அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது.
இதற்கிடையே அமெரிக்க அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே சமாதான தூதுவராக செயல்படும் கத்தார் நாட்டின் முயற்சியால் பாயே ஹால் விடுவிக்கப்பட்டார். அவர் காபூலில் உள்ள கத்தார் தூதரகத்தில் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

- வாலிபர்கள் இருவரும் அந்த பெண்ணுக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்துள்ளனர்.
- உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் சர்வதேச சுற்றுலா தலமாக திகழ்வதால் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி, பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஆண்டு முழுவதும் வருவார்கள். அதேபோன்று அமெரிக்கா கலிபோர்னியாவில் இருந்து 44 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த மாதம் கேரளாவுக்கு வந்திருந்தார்.
கேரளாவில் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்வையிட்ட அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள ஆசிரமம் ஒன்றுக்கு சென்றார். அங்கு தங்கியிருந்த அவர், சம்பவத்தன்று அந்த பகுதியில் இருந்த கடற்ரைக்கு சென்று அமர்ந்திருந்தார்.
கடற்கரையில் அமர்ந்து பொழுதை கழித்துக் கொண்டிருந்த அவரிடம் 2 வாலிபர்கள் பேச்சு கொடுத்துள்ளனர். நட்பாக பழகுவது போன்று பேசியதால், அவர்களுடன் அந்த பெண் பேசியிருக்கிறார். இதையடுத்து அந்த வாலிபர்கள், அமெரிக்க பெண்ணை மது குடிப்பதற்காக தங்களது இருசக்கர வாகனத்தில அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்பு 3 பேரும் சேர்ந்து மது குடித்துள்ளனர். வாலிபர்கள் இருவரும் அந்த பெண்ணுக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்துள்ளனர். இதனால் அமெரிக்க பெண்ணுக்கு போதை தலைக்கேறி மயக்க நிலைக்கு சென்றார்.
இதையடுத்து அந்த பெண்ணை ஒதுக்குப்புறமான பகுதியில் இருந்த ஒரு பழைய கட்டிடத்துக்கு அழைத்துச்சென்று இருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். போதை தெளிந்தபிறகே அந்த பெண், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்தார்.
தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தான் தங்கியிருந்த ஆசிரம அதிகாரிகளுடம் அமெரிக்க பெண் தெரிவித்தார். அந்த பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமெரிக்க பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து கருநாகப்பள்ளி போலீஸ் நிலைத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, அமெரிக்க பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது யார்? என்று விசாரணை நடத்தினர். அப்போது செரிய ஜீக்கல் பகுதியை சேர்ந்த நிகில் (வயது28), ஜெயன்(39) ஆகிய இருவர் தான் அமெரிக்க பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கடற்கரையில் அமர்ந்து பொழுதை கழித்துக் கொண்டிருந்த அமெரிக்க பெண்ணிடம் நட்பாக பேசுவது போல் நடித்து, அவருக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்து மயங்க செய்து பாலியல் பாலத்காரம் செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
- அமெரிக்காவில் குடியேற வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கிறது.
- பணத்தைவிட சிறந்த வாழ்க்கை முக்கியம்.
வசதியான வாழ்க்கை, படிப்பு, வேலை உள்ளிட்ட பல காரணங்களால் அமெரிக்காவில் குடியேற வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கிறது. ஆனால் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டன் பிஷ்ஷர் என்ற பெண் அங்கிருந்து வெளியேறி கடந்த 2022-ம் ஆண்டு முதல் டெல்லியில் வசித்து வருகிறார்.
தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இவர் டெல்லியில் குடியேற முக்கிய 3 விஷயங்களை வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார்.
இவர் கடந்த 2017-ம் ஆண்டு தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இந்தியாவுக்கு வந்தபோது அவருக்கு இங்குள்ள இடங்கள் மிகவும் பிடித்து போனது. இதனால் டெல்லியில் குடியேற முடிவு செய்து 2 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு குடியேறி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,
அமெரிக்காவில் எல்லாமே சுயமானதாக இருக்கும். சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறை பின்பற்றப்படுகிறது. சமூகம், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை ஆகியவற்றில் அங்கு வறட்சி உள்ளது. அங்கு யாரும் பிறருக்கு உதவ முன்வரமாட்டார்கள். இந்தியாவில் வாழ்க்கை முறை வண்ணமயமாக உள்ளது. இங்கு தனிமையை உணரமாட்டீர்கள். மக்கள் ஓடோடி வந்து உதவுகிறார்கள்.
2-வதாக இங்கு என் குழந்தைகளின் எதிர்காலம் மிகவும் வெற்றிகரமானதாக இருக்கும் என உணர்கிறேன். அமெரிக்காவில் பெற முடியாத சமூக வாழ்க்கை முறை, கலாச்சாரம், அனுபவங்கள் இங்கு என் குழந்தைகளுக்கு கிடைக்கும். பணத்தைவிட சிறந்த வாழ்க்கை முக்கியம். நான் அமெரிக்காவை நேசிக்கிறேன். ஆனால் அது எந்த வகையிலும் சரியான இடம் அல்ல என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் டி.ஆர். நகரை சேர்ந்தவர் செல்லமுத்து. இவரது மகன் பிரித்வி செல்லமுத்து. இவர் பிளஸ்-2 வரை ஈரோடு பள்ளியூத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்தார். பின்னர் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் படித்தார். இதனை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல் நகரில் ஒரு பல்கலைக்கழகத்தில் பயோ டெக்னாலஜி படிக்க சென்றார்.
அங்கு படிப்பு முடிந்ததும் அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த பல்கலைக்கழகத்தில் அமெரிக்காவை சேர்ந்த ஏஞ்செலா கிளைபர் என்ற பெண் டாக்டருக்கு படித்து வந்தார். இவருக்கும் பிரித்வி செல்லமுத்துவுக்கும் காதல் ஏற்பட்டது. ஏஞ்செலா கிளைபர் டாக்டருக்கு படித்து முடித்தார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். தங்களது காதலை பெற்றோரிடம் தெரிவித்தனர். இரு வீட்டு பெற்றோரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.
அதன் படி பிரித்வி செல்லமுத்து - ஏஞ்செலா கிளைபர் திருமணம் வெள்ளக்கோவில் முத்தூர் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
தமிழ் முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது. மணமகள் பட்டு சேலை அணிந்து இருந்தார். அவரது கழுத்தில் பிரித்வி செல்லமுத்து தாலி கட்டினார்.
இந்த திருமணத்தில் மணமகனின் உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
பின்னர் அங்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதிலும் நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். திருமணம் முடிந்ததும் மணமக்கள் இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றனர். #Marriage
வேளச்சேரி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விமல். ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கப் பெண் வெல்லா என்பவரை திருமணம் செய்தார். இருவரும் வேளச்சேரியில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், அமெரிக்கப் பெண் வெல்லா காஞ்சிபுரம் அருகே வெள்ளைக்கேட் பகுதியில் ஆடைகள் கிழிந்த நிலையில் அலங்கோலமாக போதையில் சுற்றிக்கொண்டு இருந்தார்.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வெல்லாவை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
போதை தெளிந்த பிறகு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கணவர் விமலுக்கும், வெல்லாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பத்தன்று இருவரும் போதையில் இருந்தனர். மீண்டும் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த விமல் காரில் வெல்லாவை வெளியே அழைத்து சென்று இருக்கிறார். காஞ்சிபுரம் வெள்ளைக்கேட் பகுதியில் சென்றபோது காரில் இருந்து வெல்லாவை கீழே தள்ளிவிட்டு சென்று விட்டார்.
அங்கு போதையில் சுற்றிய வெல்லாவை பார்த்த ஆட்டோ டிரைவர்கள் சிலர் அவரை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். பின்னர் அவரை காஞ்சீபுரம் வெள்ளைக்கேட் அருகே விட்டு சென்றுள்ளனர்.
தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அப்பகுதி மக்களிடம் ஆங்கிலத்தில் கூறியுள்ளார். அதன்பின் அவர்கள் போலீசுக்கு தெரிவித்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த வேளச்சேரி போலீசார் வெல்லாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றனர். ஆனால் அங்கு விமல் இல்லை. வீடு காலியாக இருந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காஞ்சீபுரம் போலீசார் அமெரிக்க பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக 3 ஆட்டோ டிரைவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய கணவர் விமலையும் தேடி வருகிறார்கள்.
வெல்லாவை கிழக்கு கடற்கரை சாலை அருகே பனையூர் பகுதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்திருந்தனர்.
தங்கள் நாட்டு பெண்ணுக்கு ஏற்பட்ட இந்த துயர நிலையை செய்திகள் வாயிலாக அறிந்த சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் காப்பகத்தில் இருந்து வெல்லாவை அழைத்து சென்றனர். அவருக்கு தேவையான பயண ஆவணங்களை உடனடியாக தயாரித்த அதிகாரிகள் அவரை சென்னையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தனர்.
அந்தப் பெண் அமெரிக்காவின் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. #Americanwoman ##Americanwomaninkanchipuram