என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Amit mishra"
- டோனியின் முடிவை எதிர்த்து என்னால் எதுவும் பேச முடியவில்லை.
- நிர்வாகத்திடம் பேசினால் கூட டோனியிடமே வாய்ப்பு கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அமித் மிஸ்ரா கடந்த 2003-ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 2016-ம் ஆண்டு வரை 13 ஆண்டுகள் விளையாடியிருந்தாலும் 22 டெஸ்ட் போட்டிகள், 36 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
இந்நிலையில் தனது கிரிக்கெட் கரியரில் அதிக வாய்ப்புகளை பெற முடியாமல் போனதற்கு காரணமே முன்னாள் கேப்டன்களான டோனி மற்றும் விராட் கோலி போன்ற கேப்டன்கள் செய்த செயல் தான் என அமித் மிஸ்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்திய அணிகள் நான் தொடர்ந்து விளையாட முடியாதது ஏன் என்று டோனியிடம் கேட்டபோது : அவர் அணியின் காம்பினேஷனில் நான் பொருந்தவில்லை என்று கூறினார். மேலும் நான் விளையாட வாய்ப்பு கேட்டபோது காம்பினேஷனுக்கு செட் ஆகவில்லை என்றால் ஓய்வு வழங்கப்படும் என்றுதான் கூறினார். டோனியின் முடிவை எதிர்த்து என்னால் எதுவும் பேச முடியவில்லை. நிர்வாகத்திடம் பேசினால் கூட டோனியிடமே வாய்ப்பு கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
அதேபோன்று 2016-ம் ஆண்டு நான் மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்த போது கோலி தான் என்னை ஆதரித்தார். ஆனாலும் நான் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த வேளையில் அவரும் என்னை அணியில் இருந்து நீக்கினார். அப்போது விராட் கோலி என்னிடம் வந்து அவருடன் பயிற்சி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆனால் நான் அதிக எடையை தூக்கி பயிற்சி செய்ய முடியாது என்று கூறினேன்.
அதன் பின்னர் கோலியும் என்னை அணியிலிருந்து நீக்கிவிட்டு எனக்கு தெளிவான பதிலை கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் நானே அவருக்கு மெசேஜ் அனுப்பி வாய்ப்பு கேட்டேன். ஆனாலும் அவர் சரியான பதிலை அளிக்கவில்லை.
இவ்வாறு மிஸ்ரா கூறினார்.
- இவரை நான் ஐபிஎல் தொடரில் பார்த்தேன். அவருக்கு கேப்டன்ஷிப்பை எப்படி செய்வது என்பது தெரியவில்லை.
- அதற்கு முன்னாடி அவர் கேப்டனாக இருந்ததில்லை.
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இதில் விளையாடியது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
இதனால் சுப்மன்கில் கேப்டன்ஷிப் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தது. அதனை தொடர்ந்து நடந்த 4 டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த வெற்றி மூலம் வெளிநாடுகளில் தொடர்ந்து 4 போட்டிகளுக்கு மேல் வெற்றி பெற்ற 2-வது இந்திய கேப்டன் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
இந்நிலையில் அவருக்கு கேப்டன்ஷிப் பன்ன தெரியாது என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இவரை நான் ஐபிஎல் தொடரில் பார்த்தேன். அவருக்கு கேப்டன்ஷிப்பை எப்படி செய்வது என்பது தெரியவில்லை. அது பற்றி எந்த யோசனையும் இல்லை. அதற்கு முன்னாடி அவர் கேப்டனாக இருந்ததில்லை. அவர் எதுக்கு கேப்டனாக நியமிக்கபட்டார் என்பது குறித்து தேர்வாளர்களை தான் கேட்க வேண்டும்.
கடந்த 2 வருடங்களாக ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் இந்திய அணிக்காக டி20 தொடரிலும் சிறப்பாக விளையாடி உள்ளார். பேட்டராக சிறப்பாக செயல்படுகிறார். எனவே பேட்டராக தகுதியானவர்.
அவருக்கு கேப்டன் பதவியை வழங்கியது, அணி நிர்வாகம் அவருக்கு அந்த அனுபவத்தை வழங்க விரும்பியதால் தான் என்று நினைக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை சுப்மன் கில்லை விட ருதுராஜ் கெய்க்வாட் சிறந்த பேட்டர். யாராவது சிறப்பாக செயல்பட்டால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். நான் சுப்மன் கில் அல்லது அது போன்ற எதையும் வெறுப்பவன் அல்ல, எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும், ஆனால் ருதுராஜ் கடினமான சூழ்நிலையில் ரன்களை எடுத்ததால் ஒரு சிறந்த வீரர் என்று நான் நினைக்கிறேன்.
டி20 உலகக் கோப்பையில் ருதுராஜ் ஒரு பேக்அப் பிளேயராக இருந்திருக்க வேண்டும் என்று நான் உணர்ந்தேன். என்னைப் பொறுத்தவரை, அவர் ஒரு முழுமையான வீரர். அவர் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட முடியும் - அவருடைய நுட்பம் அப்படிப்பட்டது. அவருடைய அணுகுமுறை அப்படித்தான் இருக்கிறது.
இவ்வாறு மிஸ்ரா கூறினார்.
- கோலி காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டார். அதற்கு முக்கிய காரணம் புகழ் மற்றும் அதிகாரம்.
- ரோகித் சர்மா ஒரு நட்சத்திரமாக மாறியதில் இருந்து கொஞ்சம் கூட மாறவில்லை.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியின் போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகரான கவுதம் கம்பீர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோலி மற்றும் ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக் இடையே மைதானத்தில் தகராறு ஏற்பட்டது. மூவரும் மைதானத்தில் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து தகராறில் ஈடுபட்ட மூவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
இருப்பினும் இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியின் போது, கம்பீரும், கோலியும் கட்டிப்பிடித்து தகராறுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர் என்பது அனைவரும் அறிந்ததே...
இந்நிலையில், இந்த தகராறு முடித்து வைத்தது கவுதம் கம்பீர் தான் என்று மூத்த இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா கூறியுள்ளார்.
மேலும் அமித் மிஸ்ரா கூறுகையில், "கவுதமிடம் நான் ஒரு நல்ல விஷயத்தைப் பார்த்தேன். விராட் கோலி அவரை நோக்கிச் செல்லவில்லை. கவுதம் தாம் விராட் கோலியை நோக்கி சென்றார். அவர் சென்று 'நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், உங்கள் குடும்பம் எப்படி இருக்கிறது' என்று கேட்டார். எனவே கவுதம்தான் சண்டையை முடித்தார், கோலி சண்டையை முடிக்கவில்லை.
அந்த நேரத்தில் கவுதம் தனது பெரிய மனதைக் காட்டினார். கோலிதான் சென்று சண்டையை முடித்திருக்க வேண்டும். அவர் சென்று 'கௌதி பாய், இதை முடித்துக் கொள்வோம்' என்று கூறியிருக்க வேண்டும்.
கோலி காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டார். அதற்கு முக்கிய காரணம் புகழ் மற்றும் அதிகாரம். ஆனால், ரோகித் சர்மா ஒரு நட்சத்திரமாக மாறியதில் இருந்து கொஞ்சம் கூட மாறவில்லை.
நான் பல வருடங்களாக இந்திய அணியில் இடம் பெறவில்லை. இன்னும் ஐபிஎல் அல்லது வேறு எந்த நிகழ்ச்சியில் ரோகித்தை சந்திக்கும் போது, அவர் எப்போதும் என்னை கேலி செய்வார். அவர் என்ன நினைப்பார் என்று நான் யோசிக்க தேவையில்லை.
விராட் நிறைய மாறிவிட்டதை நான் பார்த்திருக்கிறேன். நாங்கள் பேசுவதை கிட்டத்தட்ட நிறுத்திவிட்டோம். உங்களுக்குப் புகழும் அதிகாரமும் கிடைத்தால், மற்றவர்கள் ஒரு நோக்கத்திற்காக மட்டுமே தங்களை அணுகுகிறார்கள் என்று சிலர் நினைக்கிறார்கள் என்று மிஸ்ரா கூறினார்.
- முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது.
- இந்த போட்டியில் சாஹல் பந்துவீச்சில் கிளாசன் 3 சிக்ஸர்களை விளாசினார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது.
176 ரன்களை துரத்திய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்து பைனல் செல்லும் வாய்ப்பை இழந்தது.
இந்த போட்டியில் சாஹல் பந்துவீச்சில் கிளாசன் 3 சிக்ஸர்களை விளாசினார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விட்டுக் கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனையை ராஜஸ்தான் வீரர் சாஹல் படைத்துள்ளார். அவர் மொத்தமாக இதுவரை 224 சிக்ஸர்களை விட்டு கொடுத்துள்ளார்.
இவருக்கு அடுத்த இடத்தில் பியூஷ் சாவ்லா - 222, ஜடேஜா - 206, அஷ்வின் - 203, அமித் மிஷ்ரா - 183 ஆகியோர் உள்ளனர்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விட்டுக்கொடுத்த முதல் 5 பந்துவீச்சாளர்களும் சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசி ஓவரை கலீல் அகமது வீசினார். மிஸ்ரா மற்றும் கீமோ பால் ஆகியோர் பேட்டிங் செய்தனர். 3 பந்தில் 2 ரன்கள் என்ற நிலையில் மிஸ்ரா பந்தை சந்தித்தார். அப்போது பந்து பேட்டில் படாமல் விக்கெட் கீப்பர் சகாவிடம் சென்றது. உடனே எதிர்முனையில் இருந்த கீமோ பால் ரன் எடுக்க ஓடினார். அப்போது சகா ஸ்டம்பை நோக்கி பந்தை வீசினார். பந்து படாமல் கலீல் அகமது கைக்கு வந்தது.
அவர் பந்தை எடுத்து அமித் மிஸ்ராவை ரன்அவுட் ஆக்க Non-Striker ஸ்டம்பை நோக்கி பந்தை வீசினார். அப்போது ஆடுகளத்தை பாதித்தூரம் மட்டுமே தாண்டிய மிஸ்ரா, திடீரென சற்று வளைந்து ஸ்டம்பை மறைக்கும் வண்ணம் ஓடினார். இதனால் மிஸ்ரா காலில் பந்து பட்டு விலகிச் சென்றது. இதனால் மிஸ்ரா ரன்அவுட் ஆகவில்லை. அவர் வளைந்து ஓடாமல் இருந்திருந்தால் கலீல் அகமது வீசய பந்து ஸ்டம்பை தாக்கியிருக்கும்.
இதனால் ரிவியூ கேட்டனர். ரிவியூ-வில் பந்து பேட்டில் படவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. பின்னர் ரன்அவுட்டுக்கு நடுவரிடம் முறையிட்டனர். இதனால் 3-வது நடுவர் உதவியை நாடினர். அவர் அந்த காட்சியை பலமுறை பார்த்து, மிஸ்ரா பீல்டிங் செய்தவற்கு இடையூறாக இருந்தார் என்ற ரன்அவுட் வழங்கினார்.
இதனால் ஐபிஎல் வரலாற்றில் இந்த முறையில் அவுட்டான 2-வது வீரர் என்ற மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார். இதற்கு முன் 2013-ல் கொல்கத்தா அணிக்காக விளையாடிய யூசுப் பதான் புனே வாரியர்ஸ் அணிக்கெதிராக இந்த முறையில் ஆட்டமிழந்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் 150-வது விக்கெட்டை எடுத்த 2-வது வீரர் ஆவார். இலங்கை வேகப்பந்து வீரர் மலிங்கா முதலில் இந்த சாதனையைப் படைத்துள்ளார். அவர் 115 இன்னிங்சில் 162 விக்கெட் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். 36 வயதான மிஸ்ரா டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசஸ் ஐதராபாத் அணிகளிலும் விளையாடி இருந்தார். 3 முறை ‘ஹாட்ரிக்’ சாதனை நிகழ்த்தி உள்ளார்.
அவருக்கு அடுத்தப்படியாக பியூஸ் சாவ்லா 146 விக்கெட்டுடன் 3-வது இடத்தில் உள்ளார். பிராவோ 143 விக்கெட்டும். ஹர்பஜன் சிங் 141 விக்கெட்டும் எடுத்து முறையே 4-வது, 5-வது இடங்களில் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்