என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "amruta fadnavis"
- அனிஷ்கா தனக்கு சில சூதாட்டக்காரர்களை தெரியும் என அம்ருதா பட்னாவிசிடம் கூறினார்.
- அம்ருதா பட்னாவிஸ் சம்பவம் குறித்து மும்பை மலபார்ஹில் போலீசில் புகார் அளித்தார்.
மும்பை :
மராட்டிய துணை முதல்-மந்திரியாக இருக்கும் பா.ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா. இவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு நவம்பா் மாதம் அனிஷ்கா என்ற பேஷன் டிசைனர் அறிமுகம் ஆனார். அவர் தான் வடிவமைத்த ஆடைகள், நகைகள், காலணிகளை பொது நிகழ்ச்சிகளில் அணிந்தால் தனக்கு விளம்பரம் கிடைக்கும் என அம்ருதா பட்னாவிசிடம் கூறினார்.
மேலும் அவர் தனக்கு தாய் கிடையாது, குடும்பத்தை தனியாக கவனித்து வருவதாகவும் கூறினார். இதனால் அம்ருதா பட்னாவிசுக்கு அவர் மேல் அனுதாபம் ஏற்பட்டுள்ளது.
அனிஷ்கா அவரது தந்தையுடன் அம்ருதா பட்னாவிசை துணை முதல்-மந்திரி பங்களாவிலும் சந்தித்து இருக்கிறார்.
இந்தநிலையில் அனிஷ்கா தனக்கு சில சூதாட்டக்காரர்களை தெரியும் என அம்ருதா பட்னாவிசிடம் கூறினார். அவர்கள் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
மேலும் அம்ருதா பட்னாவிசிடம் சூதாட்டக்காரரான தனது தந்தையை வழக்கு ஒன்றில் இருந்து காப்பாற்ற வேண்டும் என கேட்டார். இதற்காக ரூ.1 கோடி லஞ்சம் தருவதாக கூறினார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அம்ருதா பட்னாவிஸ், அனிஷ்காவின் செல்போன் எண்ணை பிளாக் செய்துவிட்டு அவருடனான தொடர்பை துண்டித்தார். அதன் பிறகு அனிஷ்கா வேறு செல்போனில் இருந்து அம்ருதா பட்னாவிசை மறைமுகமாக மிரட்டும் வகையில் வீடியோ, ஆடியோ பதிவுகளை அனுப்பினார். அனிஷ்காவின் தந்தையும் அம்ருதாவை மிரட்டி உள்ளார்.
இதையடுத்து அம்ருதா பட்னாவிஸ் சம்பவம் குறித்து மும்பை மலபார்ஹில் போலீசில் புகார் அளித்தார். புகார் தொடர்பாக போலீசார் அனிஷ்கா, அவரது தந்தை மீது சதித்திட்டம், ஊழல் தடுப்பு, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.
துணை முதல்-மந்திரியின் மனைவிக்கு லஞ்சம் கொடுக்க முயன்று ஆடை வடிவமைப்பாளர் தனது தந்தையுடன் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நமது நாட்டிற்கு தேசத்தந்தை என்றால் அது மகாத்மா காந்தி.
- புதிய இந்தியாவின் தந்தை என்றால் அது பிரதமர் மோடி என்றார்.
மும்பை:
மகாராஷ்டிர மாநில துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ். அம்மாநிலத்தில் மிகவும் பிரபலமான இவர் பல்வேறு விழாக்களில் அதிகம் கலந்துகொள்வார்.
இந்நிலையில், துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்நாவிஸ், நமது நாட்டிற்கு இரு தேசத் தந்தைகள் இருக்கிறார்கள் என கூறினார்.
மேலும், நமது நாட்டிற்கு தேசத்தந்தை என்றால் அது மகாத்மா காந்தி. அதேபோல், புதிய இந்தியாவின் தந்தை என்றால் அது நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி என இந்தியாவுக்கு 2 தேசத்தந்தைகள் இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் உள்நாட்டு சொகுசு கப்பல் போக்குவரத்தை மும்பை கடல் பகுதியில் மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மத்திய மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் கடந்த 20-ம் தேதி தொடங்கி வைத்தனர்.
அங்க்ரியா என பெயரிடப்பட்டுள்ள இந்த சொகுசு கப்பல் வாரம் 4 முறை மும்பையில் இருந்து கோவா சென்று திரும்பும்.
399 பயணிகள் மற்றும் 67 பணியாளர்கள் இதில் செல்லலாம். 8 வித கட்டணங்களில் அறைகள் மற்றும் நீச்சல் குளம், மனமகிழ் கூடம் ஆகியவை இந்த சொகுசு கப்பலில் உள்ளன. வாரம் 4 முறை செல்லும் இந்த பயணத்துக்கான கட்டணமாக 7 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து மேலே ஏறிவருமாறு அவர்கள் விடுத்த வேண்டுகோளை புறக்கணித்த அம்ருதா, கடல் அலைகள் உரசும் கப்பலின் அடிப்பகுதியில் நின்றவாறு உயிருக்கு ஆபத்தான நிலையில் செல்பி எடுத்த சம்பவம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவியது.
நான் செல்பி எடுக்க முயன்ற இடம் அவ்வளவு ஆபத்தான பகுதி அல்ல என குறிப்பிட்டுள்ள அவர், ஆனால், இதுபோல் செல்பி எடுப்பதற்காக இளைஞர்கள் சவாலான காரியங்களில் ஈடுபட கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார். #AmrutaFadnavis #AmrutaFadnavisselfie #AmrutaFadnavisapologises
இந்தியாவின் முதல் உள்நாட்டு சொகுசு கப்பல் போக்குவரத்தை மும்பை கடல் பகுதியில் மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மத்திய மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.
உற்சாக மிகுதியினால் ஒருகட்டத்தில் கப்பலின் தடை செய்யப்பட்ட ஆபத்தான நுனிப் பகுதிக்குள் தாவி குதித்தார். இதை கண்டு அங்கு காவலுக்கு நின்றிருந்த போலீசாரும், அம்ருதாவின் பாதுகாவலர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
அங்கிருந்து மேலே ஏறிவருமாறு அவர்கள் விடுத்த வேண்டுகோளை புறக்கணித்த அம்ருதா, கடல் அலைகள் உரசும் கப்பலின் அடிப்பகுதியில் நின்றவாறு உயிருக்கு ஆபத்தான நிலையில் செல்பி எடுத்த சம்பவம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. #AmrutaFadnavis #AmrutaFadnavisselfie
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்