search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "'Amruth Bharat' project"

    • கோட்ட அளவிலான அதிகாரிகளுடன் ஆய்வு செய்தனர்.
    • இரண்டாவது பிளாட்பாரத்தில், பயணிகளுக்கான ஓய்வறை கட்டப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் ரெயில் நிலையல் மத்திய அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்து பங்கஜ் குமார் சின்ஹா மற்றும் கூடுதல் கோட்ட மேலாளர் சிவலிங்கம் ஆகியோர் கோட்ட அளவிலான அதிகாரிகளுடன் ஆய்வு செய்தனர்.

    திருப்பூர் ரெயில் நிலையம் 'அம்ரூத் பாரத்' திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரெயில் நிலையம் உட்கட்டமைப்பு மற்றும் விரிவாக்க பணிகள் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளது.

    அதன் ஒரு பகுதியாக முதல் பிளாட்பாரத்தில் புதிய லிப்ட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் எஸ்கலேட்டர் அமைக்கப்பட்டு செயல்பா ட்டுக்கு வந்துள்ளது.

    புதிதாக இரண்டாவது பிளாட்பாரத்தில், பயணிகளுக்கான ஓய்வறை கட்டப்படுகிறது. இப்பணிகளை அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. அதன் பின் ஸ்டேஷன் வளாகத்தில் செயல்படும் வாகன பார்க்கிங் வளாகம், வாகனங்கள் வந்து செல்லும் வழித்தடம் ஆகியனவும் ஆய்வு செய்தனர்.

    ×