என் மலர்
நீங்கள் தேடியது "Anandiben Patel"
- பிரதமரும், உள்துறை மந்திரியும் உத்தர பிரதேச மாநில அரசியல் நிலவரம் குறித்து ஆலோசித்தனர்.
- உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மாநில கவர்னரை சந்தித்துப் பேசினார்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநில பா.ஜ.க. துணை முதல் மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா வெளியிட்ட கருத்தால் மாநில தலைவர் பூபேந்திர சவுத்ரி பதவி விலக உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் அம்மாநில பா.ஜ.க.வில் கோஷ்டி பூசல் உச்சத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை உள்துறை மந்திரி அமித்ஷா சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது உத்தர பிரதேச மாநில அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் திடீரென இன்று கவர்னர் மாளிகைக்குச் சென்றார். அங்கு கவர்னர் ஆனந்திபென் பட்டேலை சந்தித்துப் பேசினார். இருவரும் மாநில அரசியல் குறித்து விவாதித்ததாக தகவல் வெளியானது.
உத்தர பிரதேச மாநில அரசில் கோஷ்டி சண்டை நடந்து வருகிறது. பா.ஜ.க.வினர் பதவிக்காக சண்டையிட்டு வருவதாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- கும்பகர்ணன் 6 மாதங்கள் தூங்குவார் என்று மக்கள் நம்புகின்றனர். அனால் அது உண்மையில்லை.
- சீதையை ராவணன் விமானத்தில் தான் கடத்தி சென்றான் என்பது கூட நம் மக்களுக்கு தெரியாது.
ராமாயண புராணத்தில் ராவணனின் தம்பியாக வரும் கும்பகர்ணன் ஒரு தொழில்நுட்ப வல்லுநர் என்றும் ரகசியமாக அவர் ஆய்வகத்தில் இயந்திரங்களை உருவாக்கினார் என்று உத்தரப்பிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள குவாஜா முயினுத்தீன் சிஷ்டி பாஷா விஸ்வவித்யாலயா கல்லூரியின் 9 ஆவது பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆனந்திபென் படேல் கலந்து கொண்டார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், கும்பகர்ணன் 6 மாதங்கள் தூங்குவார் என்று மக்கள் நம்புகின்றனர். ஆனால் அது உண்மையில்லை. கும்பகர்ணன் ஒரு தொழில்நுட்ப நிபுணராக இருந்தார். அதனால் தான் கும்பகர்ணன் பொதுவெளியில் 6 மாதங்களுக்கு வரக்கூடாது என்று ராவணன் தடை விதித்தார். கும்பகர்ணன் தனது ஆய்வகத்தில் ஆறு மாதங்கள் ரகசியமாக இயந்திரங்களை தயாரித்தார். அதனால் தான் அந்த தொழில்நுட்பம் மற்ற நாடுகளுக்கு செல்லக் வில்லை.
சீதையை ராவணன் விமானத்தில் தான் கடத்தி சென்றான் என்பது கூட நம் மக்களுக்கு தெரியாது. நமது நூலகங்களில் இந்திய அறிவுப் பாரம்பரியத்தின் பழைய நூல்கள் நிறைந்துள்ளன. அவற்றை மாணவர்களை படிக்க வேண்டும். இந்தியாவின் செழுமையான அறிவைப் பற்றி அனைவரும் அறியும் வகையில் இந்தப் புத்தகங்கள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.
உ.பி கவர்னர் பேசிய இந்த வீடியோவை காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஷிரினேட் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, "பல்கலைக்கழக மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழாவில் இந்த ஆழ்ந்த அறிவு வழங்கப்பட்டது" என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.