என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Anderson"
- இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது.
- 3-வது டெஸ்ட் போட்டியில் இடம் பிடிக்காத ஆண்டர்சன் இடம் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் 3 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்ற நிலையில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி மான்செஸ்டரில் நடைபெறுகிறது.
இந்நிலையில் 4-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3-வது டெஸ்ட் போட்டியில் இடம் பிடிக்காத ஆண்டர்சன் இடம் பிடித்துள்ளார். ராபின்சன் அணியில் இடம்பிடிக்கவில்லை. இந்த ஓரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இங்கிலாந்து அணி வீரர்கள் விவரம்:-
ஜாக் க்ராலி, பென் டக்கெட், மொயின் அலி, ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேட்ச்), ஜானி பேர்ஸ்டோவ் (வாரம்), கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட், ஸ்டூவர்ட் பிராட், ஆண்டர்சன்.
- தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா (807 புள்ளி) 3 இடம் உயர்ந்து 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
- நாதன் லயன் 6 இடங்கள் அதிகரித்து 9-வது இடத்தை பிடித்துள்ளார்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் கடந்த வாரம் முதலிடத்தை பிடித்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் 4 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியதால் 6 தரவரிசை புள்ளியை இழந்து 859 புள்ளிகளுடன் நம்பர் ஒன் இடத்தை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் (859 புள்ளிகள்) ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் இணைந்து வகிக்கிறார்.
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் (849 புள்ளி) 3-வது இடத்தில் நீடிக்கிறார். தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா (807 புள்ளி) 3 இடம் உயர்ந்து 4-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 8-வது இடத்தில் தொடருகிறார்.
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் ஜொலித்த ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 6 இடங்கள் அதிகரித்து 9-வது இடத்தை பிடித்துள்ளார். பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் லபுஸ்சேன் (919 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா 2 இடம் முன்னேறி 9-வது இடத்தை அடைந்துள்ளார்.
டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் அசார் அலி, இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 2-வது ஓவரிலேயே பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இமாம் உல் ஹக் ரன்ஏதும் எடுக்காமல் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் 2-வது விக்கெட்டுக்கு அசார் அலி உடன் ஹரிஸ் சோஹைல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி விக்கெட்டை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் மந்தமாக விளையாடினார்கள். 10-வது ஓவரின் முதல் பந்தில் இந்த ஜோடி பிரிந்தது. அசார் அலி 29 பந்தில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
3-வது விக்கெட்டுக்கு சோஹைல் உடன் ஆசாத் ஷபிக் ஜோடி சேர்ந்தார். சோஹைல் 28 ரன்கள் எடுத்த நிலையிலும், ஆசாத் ஷபிக் 27 ரன்கள் எடுத்த நிலையிலும் கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தனர்.
5-வது விக்கெட்டுக்கு உஸ்மான் சலாகுதின் உடன் கேப்டன் சர்பிராஸ் அஹமது ஜோடி சேர்ந்தார். பாகிஸ்தான் அணி முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை 26 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் சேர்த்திருந்தது. 68 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்த பாகிஸ்தான் மதிய உணவு இடைவேளைக்குப் பின் ஆட்டத்தைத் தொடங்கியது.
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சை தாக்கப்பிடிக்க முடியாமல் உஸ்மான் 4 ரன்னிலும், சர்பிராஸ் அஹமது 14 ரன்னிலும், பஹீம் அஷ்ரப் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 79 ரன்னுக்குள் 7-விக்கெட்டை இழந்தது. அதன்பின் வந்த வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது அமிர் (13), ஹசன் அலி (24) ரன்கள் அடிக்க பாகிஸ்தானின் ஸ்கோர் 100 ரன்னைத் தாண்டியது.
சுழற்பந்து வீச்சாளர் சதாப் கான் 52 பந்தில் 56 ரன்கள் சேர்த்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க 48.1 ஓவரிலேயே பாகிஸ்தான் 174 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன், விராட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
ஷபோவாலோவ்
6-ம் நிலை வீரரான கெவின் ஆண்டர்சன் தரம் நிலை பெறாத பயோலோ லாரென்சியை எதிர்கொண்டார். இதில் ஆண்டர்சன் 6-1, 6-2, 6-4 என எளிதில் வெற்றி பெற்றார்.
3-ம் நிலை வீரரான மரின் சிலிச் 6-3, 7-5, 7(7) - 6(4) என டக்வொர்த்தை வீழ்த்தினார். 19 வயதே ஆன கனடாவின் இளம் வீரரான டெனிஸ் ஷபோவாலோவிற்கு இதுதான் அறிமுக பிரெஞ்ச் ஓபன் ஆகும். முதல் சுற்றில் மில்மானை எதிர்கொண்டார். இதில் ஷபோவாலோவ் 7-5, 6-4, 6-2 என வெற்றி பெற்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்