என் மலர்
நீங்கள் தேடியது "Andhra"
- காகத்தின் துயர அலறலை கேட்டு நூற்றுக்கணக்கான காகங்கள் அந்த இடத்தில கூடி பெரும் அளவில் சத்தம் எழுப்பின.
- இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆந்திரா:
ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் கோழி கறிக்கடைகாரர் ஒருவர் கடைக்கு அருகே சத்தமிட்டுக் கொண்டிருக்கும் காகங்களை அச்சுறுத்துவதற்காக ஒரு காகத்தை பிடித்து கயிற்றில் கட்டி வைத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
கட்டப்பட்ட காகத்தின் துயர அலறலை கேட்டு நூற்றுக்கணக்கான காகங்கள் அந்த இடத்தில கூடி பெரும் அளவில் சத்தம் எழுப்பின.
இந்த சத்தத்தை தாங்க முடியாமல், அப்பகுதியில் உள்ள மற்ற கடைக்காரர்கள் கோழி கறிக்கடைகாரரிடம் காகத்தை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். பின்னர் அவர் காகத்தின் காலில் கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கோழிக்கறி கடைக்காரரின் இந்த செயலை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
- கால்நடை மருத்துவர்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
- பசுவுக்கு ஓங்கோல் இனத்தின் கரு செலுத்தப்பட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் ஓங்கோல் இன மாடுகள் அழிந்து வருகின்றன. இந்த மாடுகளுக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. இதனால் ஓங்கோல் இன கன்று குட்டிகளை உற்பத்தி செய்ய நவீன தொழில்நுட்பத்தை கால்நடை மருத்துவர்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
அன்னமய்யா மாவட்டம் ரயில்வே கோடூர் மண்டலம் ஜோதி காலனியை சேர்ந்த லட்சுமி தேவி என்பவர் ஜெர்சி பசு ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த பசுவுக்கு ஓங்கோல் இனத்தின் கரு செலுத்தப்பட்டது. இதன் மூலம் பசு சினை பிடித்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பசுவுக்கு ஓங்கோல் கன்று குட்டி பிறந்தது.
ராயலசீமா பகுதியில் முதல் கரு பரிமாற்றம் மூலம் ஓங்கோல் இனத்தை கன்று உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற கரு பரிமாற்றம் மூலம் மாடுகள் உற்பத்தி செய்யப்படும் என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
- 400 போலி ஆதார் அட்டைகளை பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் சுனில். இவரது நண்பர் குப்தா. இவர்கள் நேற்று சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்தனர். இவர்கள் டிக்கெட் பெறுவதற்காக போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி உள்ளனர். இதனை திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து தரிசனத்திற்கு வந்த சுனில் மற்றும் குப்தாவை விஜிலன்ஸ் அதிகாரிகள் கைது செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இருவரும் சுப்ரபாத சேவை டிக்கெட்டை முன் பதிவு செய்வதற்காக 400 போலி ஆதார் அட்டைகளை பயன்படுத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
போலி ஆதார் அட்டைகள் மூலம் இதுவரை எத்தனை டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து தரிசனம் செய்துள்ளனர்.
போலி ஆதார் அட்டை மூலம் தரிசன டிக்கெட் பெற்று வேறு நபர்களுக்கு விற்று மோசடியில் ஈடுபட்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கருவூரத்துக்கு ரூ.18,860 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
- அமலாக்கத் துறை உதவியுடன் விசாரணை நடத்தப்படும்.
திருப்பதி:
ஆந்திரா மாநில சட்டமன்ற கூட்டம் நேற்று நடந்தது. இதில் கடந்த ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அரசாங்கத்தால் கடைபிடிக்கப்பட்ட மது கொள்கை குறித்த வெள்ளை அறிக்கையை முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு வெளியிட்டார்.
ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி அரசு அறிமுகப்படுத்திய மது கொள்கைகளால் கடந்த 5 ஆண்டுகளில் அரசு கருவூரத்துக்கு ரூ.18,860 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் ஏதும் இன்றி பணமாக மட்டுமே மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளன.
கஜானாவுக்கு இவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தியதற்காக நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் . ஜெகன் மோகன் ரெட்டியின் மதுபான கொள்கைக்கு எதிராக சி.ஐ.டி. விசாரணைக்கு அரசு உத்தரவிடும் .மேலும் அமலாக்க துறை உதவியுடனும் விசாரணை நடத்தப்படும்.
போலி மது குடித்ததால் எத்தனை பேர் கடுமையான உடல்நிலை பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த விவரங்கள் சுகாதாரத் துறையிடம் இருந்து கேட்கப்படும்.
கடந்த ஆட்சியில் பிரபல பீர் வகைகள் முற்றிலும் கைவிடப்பட்டுள்ளன. உள்ளூர் வகைப்பீர்கள் அதை அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் முறைகேடுகள் நடந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
சந்திரபாபு நாயுடுவின் இந்த திடீர் குற்றச்சாட்டால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.
- மாணவர்களை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
- மறுக்கும் மாணவர்களை ஆபாசமான வார்த்தைகளால் திட்டு கின்றனர்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம், பல்நாடு மாவட்டம், நர்சராவ் பேட்டையில் பிரபல தனியார் கல்லூரி இயங்கி வருகிறது.
கல்லூரியில் தங்கியுள்ள 3-ம் ஆண்டு மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை ராக்கிங் என்ற பெயரில் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
அந்த வீடியோவில் 3-ம் ஆண்டு மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை வரிசையாக வரவழைத்து மெத்தையில் தலைக்குப்புற படுக்க சொல்கின்றனர். அப்படி படுக்க மறுக்கும் மாணவர்களை ஆபாசமான வார்த்தைகளால் திட்டு கின்றனர்.
பின்னர் மெத்தையில் படுக்கும் மாணவர்களை 4 சீனியர் மாணவர்கள் சூழ்ந்து கொண்டு பிரம்பால் சரமாரியாக தாக்குகின்றனர். அடி வாங்கும் மாணவர்கள் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தாலும் கொடூரமான முறையில் தாக்குகின்றனர்.
இதில் படுகாயம் அடைந்த 2 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நரசராவ பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களில் ஒருவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள 3 மாணவர்களை தேடி வருகின்றனர்.
இந்த ராக்கிங் சம்பவம் அரசியல் கட்சியினர் இடையே வார்த்தை போரை ஏற்படுத்தி வருகிறது.
- கைகளால் வருடி கொடுத்த படி கொஞ்சினார்.
- கொஞ்சி விளையாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள கதிரி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் . இவர் குடிபோதையில் அந்த பகுதியில் உள்ள கல்லூரி வளாகத்திற்குள் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது கல்லூரி வளாகத்தில் நல்ல பாம்பு ஒன்று வந்தது. இதனைக் கண்ட நாகராஜ் பாம்பின் அருகில் சென்றார்.
பாம்பு அதன் போக்கில் அருகில் உள்ள புதருக்குள் செல்ல முயன்றது. நாகராஜ் அதனை காலால் தடுத்து நிறுத்தி திசை திருப்பினார். இதனை கண்டதும் நல்ல பாம்பு படம் எடுத்து சீரியது. நாகராஜ் அதனை கைகளால் வருடி கொடுத்த படி கொஞ்சினார்.
அங்கிருந்தவர்கள் பாம்பை தொட வேண்டாம் என நாகராஜை எச்சரிக்கை செய்தனர். ஆனால் விடாப்படியாக பாம்பை அங்கும் இங்கும் அலைக்கழித்தபடி கைகளை தடவி கொடுக்க முயற்சி செய்தார் .அப்போது பாம்பு அவரை கடித்தது. நாகராஜ் வழியால் துடித்தார். பாம்பு புதருக்குள் சென்று விட்டது.
பொதுமக்கள் நாகராஜை உடனடியாக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாகராஜ் குடிபோதையில் நல்ல பாம்புடன் கொஞ்சி விளையாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- ஆற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- மூதாட்டிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் கல்லூரி மாவட்டம் பெடப்பயலு அடுத்த குஞ்சு வாடா பகுதியில் காட்டாறு உள்ளது. தற்போது பலத்த மழை பெய்து வருவதால் ஆற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பாலம் இல்லாததால் கிராம மக்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் முடங்கியுள்ளனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 80 வயது மூதாட்டிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.
மூதாட்டியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றால் அப்பகுதியில் உள்ள ஆற்றைக் கடந்து செல்ல வேண்டும்.
தாயை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல அவரது மகன் முடிவு செய்தார். சமையல் செய்யும் பெரிய பானையில் மூதாட்டியை அமர வைத்து நீந்தியபடி ஆற்றை கடந்து அக்கரைக்குச் சென்றார்.
பின்னர் தாயை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். ஆபத்தான முறையில் தாயை பானையில் உட்கார வைத்து ஆற்றைக் கடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும் என்றாலும் அல்லது ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்றாலும் மழை காலங்களில் இந்த ஆற்றைக் கடந்து தான் செல்ல வேண்டும். இதில் பாலம் அமர்த்தி தர வேண்டும் என வலியுறுத்தினர்.
- போலீசார் 16 ஓட்டங்களையும் பறிமுதல் செய்தனர்.
- விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.
திருப்பதி:
ஆந்திர மாநிலம்,திருப்பதி அடுத்த அன்னமய்யா மாவட்டம், சம்பப்பள்ளிக்கு ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து இறைச்சிக்காக 16 ஒட்டகங்கள் கடத்தி வரப்பட்டன.
இது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் சென்றது போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று 16 ஓட்டங்களையும் பறிமுதல் செய்தனர். ஒட்டகங்கள் அங்குள்ள கோசாலையில் ஒப்படைக்கப்பட்டனர்.
ஒட்டகங்களை கடத்தி வந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த வியாபாரி சங்கர் லால் மற்றும் ஒட்டகங்களை வாங்கிய சையத் பாபுஜி ஆகியோர் மீது விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
அழிந்து வரும் விலங்குகள் பட்டியலில் ஒட்டகம் இருப்பதால் யாரும் ஒட்டகங்களை இறைச்சிகாக விற்கவோ வாங்குவோ கூடாது என போலீசார் தெரிவித்தனர்.
- 150 ஆண்டுகள் பழமையான நித்ரா கன்னேறு மரம்.
- மரம் சினிமா படப்பிடிப்புக்கு பிரபலமானது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கோவூர் அருகே உள்ள குமாரசாமி குளித்தலை என்ற இடத்தில் உள்ள கோதாவரி ஆற்றின் கரையில் 150 ஆண்டுகள் பழமையான நித்ரா கன்னேறு மரம் ஒன்று உள்ளது.
இந்த மரத்தை பிரபல இயக்குனர்கள் பாபு, கே. விஸ்வநாத் மற்றும் ராகவேந்திர ராவ் ஆகியோர் தங்கள் படங்களில் அதிக அளவில் காட்டி வந்தனர்.
இதனால் இந்த மரம் சினிமா படப்பிடிப்புக்கு பிரபலமானது. இதுவரை இந்த மரத்தின் அடியில் 300 சினிமா பட பிடிப்புகள் நடந்துள்ளன.
தெலுங்கு சினிமாவை பொருத்தவரை கிராமக் காட்சிகள் என்றால் இந்த மரம் இடம்பெறாமல் இருந்தது இல்லை. அந்த அளவுக்கு பிரபலமானதால் இதனை சினிமா மரம் என அந்த பகுதி மக்கள் அழைத்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக 150 ஆண்டுகள் பழமையான சினிமா மரம் வேரோடு சாய்ந்தது. கிராம மக்கள் மரத்தை பார்வையிட்டு அதன் முக்கியத்துவத்தை நினைவு கூர்ந்தனர்.

இந்த மரம் இதற்கு முன்பு 1953, 1986, 2022 ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளத்தையும் 1996 பயங்கர சூறாவளி காற்றையும் தாங்கி நின்றது.
இது குறித்து கிராம மக்களுக்கு கூறுகையில், `இந்த மரத்தை உள்ளூர் கிராமவாசியான சிங்குலூரி தாதாபாய் என்பவர் நட்டு உள்ளார். மரத்தின் வீழ்ச்சி எங்களை கவலை கொள்ள செய்தது.
இதில் ஏராளமான படப்பிடிப்புகள் நடந்துள்ளன. மீண்டும் அந்த இடத்தில் புதிய மரம் ஒன்றை நட்டு சினிமா படப்பிடிப்பு தளத்தை புதுப்பிக்க வேண்டும் என்றனர்.
- ஆடி மாதம் முடிந்து முதல்முறையாக வீட்டிற்கு வந்த மருமகனுக்கு விருந்து.
- விருந்தில், இனிப்பு, காரம் என 100 வகையான உணவுகளைச் செய்து மருமகனுக்கு பரிமாறியுள்ளார்.
ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்தவர் ரவி தேஜா. இவர் கிர்லாம்பூடி மண்டலத்திற்குட்பட்ட, தாமரடா கிராமத்தைச் சேர்ந்த ரத்னகுமாரி என்பவரைக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார்.
தமிழில் ஆடி மாதம் போன்று ஆந்திரா மாநிலத்தில் ஆஷாதா மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இம்மாதம் ஜூலை மாதத்தின் பிற்பாதியும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் பாதியும் ஆகும்.
இந்நிலையில், ஆடி மாதம் முடிந்து முதல்முறையாக வீட்டிற்கு வந்த மருமகனுக்கு ரத்னகுமாரி வீட்டில் பிரம்மாண்ட விருந்து வைத்து அசத்தியுள்ளனர்.
விருந்தில், இனிப்பு, காரம் என 100 வகையான உணவுகளைச் செய்து மருமகனுக்கு பரிமாறியுள்ளார்.
பிரமாண்ட விருந்து குறித்து பேசிய மருமகன் ரவிதேஜா," ஒரே இடத்தில் 100 வகையான உணவுகளை கண்டது மகிழ்ச்சி. மாமியாரின் இச்செயல் தன்னை மிகுந்த ஆச்சரியத்தில ஆழ்த்தியது" என்றார்.
- அண்ணா கேண்டீன்கள் திறக்கப்படும் என சந்திரபாபு நாயுடு வாக்குறுதி.
- ஆந்திராவில் உள்ள 14 மாவட்டங்களில் அண்ணா கேண்டீன்கள் திறக்கப்பட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலின் போது தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்தால் மீண்டும் அண்ணா கேண்டீன்கள் திறக்கப்படும் என சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்தார்.
அதன்படி இன்று ஆந்திராவில் உள்ள 14 மாவட்டங்களில் அண்ணா கேண்டீன்கள் திறக்கப்பட்டது.

காலை, மதியம், இரவு என 3 வேளையும் 5 ரூபாய்க்கு அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. தினமும் ஒரு லட்சம் பேர் உணவு சாப்பிடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

உணவு தரம் சுவையாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பல இடங்களில் அண்ணா கேண்டீன்கள் திறக்கப்படும் என தெரிவித்தனர்.
- போலீசார் குழந்தையை விற்க முயன்ற 2 பேரை கைது செய்தனர்.
- குழந்தைகள் ரூ.5 முதல் ரூ.7 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், ஜெகநாத சாமி கோவில் அருகே உள்ள ஹார்பர் பூங்காவில் 5 மாத பெண் குழந்தையை விற்க உள்ளதாக சிறப்பு அதிரடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குழந்தையை விற்க முயன்ற 2 பேரை கைது செய்தனர்.
அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் விஜயவாடாவை சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் இருந்து 15 மாத குழந்தையை விசாகப்பட்டினத்திற்கு கடத்தி வந்து இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்ய கொண்டு வந்தது தெரிய வந்தது.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அனக்கா பள்ளி, அச்யுதா புரம், பெத்தாநாவா,ஒரிசாவில் ஜெய்பூர் ஆகிய இடங்களில் இருந்து 17 பேர் கொண்ட குழந்தை கடத்தல் கும்பலை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 6 குழந்தைகளை மீட்டனர். குழந்தைகளை கடத்தி வரும் கும்பல் டெல்லி மும்பை ஐதராபாத் விசாகப்பட்டினம் ஆகிய மாநகரங்களை குழந்தை விற்பனை சந்தையாக கொண்டு செயல்பட்டது தெரியவந்தது.
கடத்தி வரப்படும் குழந்தைகள் ரூ 5 முதல் 7 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தை கடத்தலை தடுப்பதற்காக ஆந்திராவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் முழுவதும் கேமராக்களை பொறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.