search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "andhri bridge collapse"

    மகாரஷ்டிரா மாநிலத்தில் அந்தேரி ரெயில் நிலைய நடைமேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் பரிதாபமாக பலியானார். #AndheriBridgeCollapse
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மும்பை அந்தேரி பகுதியில் உள்ள மேம்பாலத்தின் பக்கவாட்டு பகுதி இடிந்து கீழே விழுந்ததில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் பரிதாபமாக பலியானார். மும்பை ஜூஹு பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அஸ்மிதா கத்கர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    இடிந்து விழுந்த பாலம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆய்வு செய்யப்பட்டு, நல்ல நிலையில் இருப்பதாக சான்றிதழ் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #AndheriBridgeCollapse
    ×