என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Anganwadi Center"
- தேனி நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில், இந்திய உணவுக் கழகத்திலிருந்து வரப்பெற்ற அரிசி மற்றும் கோதுமையின் தரம் குறித்து கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- அங்கன்வாடி மையத்தில் பராமரிக்கப்படும் 11 வகையான பதிவேடுகள் ஆகியன குறித்தும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
தேனி:
தேனி நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில், இந்திய உணவுக் கழகத்திலிருந்து வரப்பெற்ற அரிசி மற்றும் கோதுமையின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதுடன், ரேசன் கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பொருட்கள் முறையாக நகர்வு செய்யப்படுகிறதா, சரியான எடை அளவில் கொண்டு செல்லப்படுகிறதா என்று கலெக்டர் ஷஜீவனா ஆய்வு செய்தார்.
மேலும், அத்தியாவசிய பொருட்கள் இருப்பு பதிவேடு, காலி சாக்குகள் பதிவேடு, உள்வரும் வாகனங்கள் மற்றும் வெளி செல்லும் வாகனங்களை கண்காணிப்பதற்கான பதிவேடு, தரக்கட்டுப்பாட்டு பதிவேடு, எடை அளவு பதி வேடு, விற்பனை பதிவேடு, அரிசி மற்றும் கோதுமை நகர்வு பதிவேடு, பட்டியல் அட்டைகள் பதிவேடு உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.
பின்னர், பழனி செட்டி பட்டி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பணி யாளர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, உள்நோயாளிகள் பிரிவில் உள்ள படுக்கை வசதி, புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வருகை தந்த பொதுமக்களின் எண்ணிக்கை, சிகிச்சை அளிக்கப்படும் விதம், மருந்து, மாத்திரைகளின் இருப்பு, மருந்து மாத்திரை களில் அச்சிடப்பட்டுள்ள காலாவதியாவதற்கான காலம், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, பழனிசெட்டிபட்டி பேரூ ராட்சி பகுதியில் ரேசன் கடைகளின் விற்பனை முனைய இயந்திரங்களில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, வழங்கப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை, மீதமுள்ள பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடை அளவு மற்றும் எடை அளவிடும் இயந்திர த்தில் முத்திரை பதிக்கப்பட்டு ள்ள காலம், இயந்திரத்தின் செயல்பாடு கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளுக்கு அளிக்கப்படும் முறைசாரா முன்பருவ கல்வி, எடை மற்றும் உயரம் அளவீடு செய்யப்பட்டு முறையாக பதிவேற்றம் செய்யப்படு கிறதா, ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா எனவும், அங்கன்வாடி மையத்திற்கு வழங்க ப்பட்டு ள்ள முன்பருவ கல்வி உபகரண கருவி நல்ல முறை யில் உள்ளதா, குழந்தை களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் மற்றும் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களின் தரம் ஆகியவை மற்றும் அங்கன்வாடி மையத்தில் பராமரிக்கப்படும் 11 வகையான பதிவேடுகள் ஆகியன குறித்தும் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ஆறு முகம் உள்ளிட்ட அலுவ லர்கள் பலர் உடன் இருந்த னர்.
- ரூ.10.90 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது.
- பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை ஊராட்சி தலைவர் மரகதமணி மணியன் தொடங்கிவைத்தார்.
அவினாசி:
அவினாசி ஊராட்சி ஒன்றியம் தெக்கலூர் ஊராட்சி காந்தி நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தில் ரூ.10.90 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நடந்தது. புதிய கட்டிடத்தை ஒன்றியக்குழு தலைவர் ஜெகதீசன் முன்னிலையில் ஊராட்சி தலைவர் மரகதமணி மணியன் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.
இதையடுத்து பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை ஊராட்சி தலைவர் மரகதமணி மணியன் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் பி.பாலாமணி, ஒன்றிய கவுன்சிலர் ஜெயந்தி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- கட்டி முடித்து 5 ஆண்டுகளாகியும் அங்கன்வாடி மையம் பயன்பாட்டுக்கு வரவில்லை.
- அங்கன்வாடி மையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி கிராமத்தில் கடந்த 2017-18-ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.8.50 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத அங்கன்வாடி மையத்தால் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சமுதாயக்கூடத்தில் பயின்று வருவது பெற்றோர்கள் மத்தியில் வேதனையை உருவாக்கி யுள்ளது.
அங்கன்வாடி மையம் பயன்பாட்டிற்கு வராமலேயே கடந்த 2022-23-ம் ஆண்டில் அங்கன் வாடி மையம் பராமரிப்பு செய்தல் என்ற பெயரில் 1.75 லட்சம் மதிப்பில் மராமத்து பணியும் செய்துள்ளது பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளா க்கியுள்ளது.
மேலும் பேவர் பிளாக் அமைத்தல் என்ற பெயரில் 4.55 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி முன்பு பேவர் பிளாக் அமைத்து சாலையும் அமைத்துள்ள ஊரக வளர்ச்சித் துறையினர் அங்கன்வாடி மையத்தை திறப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் குழந்தைகள் தற்போது சமுதாய கூடத்தில் உள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளாக திறக்கப்ப டாமல் உள்ள நிலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் குழந்தை களை தங்கி படிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் அங்கன்வாடி மையத்தை திறக்க அதிகா ரிகளிடம் பொதுமக்கள் சார்பிலும் ஊராட்சி மன்றத்தின் சார்பிலும் தொடர்ந்து முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் குழந்தை களை சமுதாய கூடத்தில் தொடர்ந்து தங்க வைக்க முடியாத நிலை உள்ளது. ஆகையால் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி மையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்:
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில், 'போஷான்' திட்டம் மூலம் அங்கன்வாடி மையங்களில் படிக்கும் 6 வயது வரையுள்ள குழந்தைகளின் உடல் நிலை பரிசோதனை நடத்தப்பட்டது.முன்னதாக, தேசிய ஊட்டச்சத்து கழகம் சார்பிலும், ஆய்வு நடத்தப்பட்டது. இது குறித்து திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரிகள் கூறியதாவது:-
இருவகை ஆய்வுகளிலும் 10 முதல், 20 சதவீதம் குழந்தைகள், வயதுக்கு ஏற்ற உயரமும், எடையும் இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்காக, சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி, குழந்தைகள் வகைப்படுத்தப்படுகின்றனர். ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளில், மருத்துவ சேவை தேவையானவர்கள், ஆரோக்கியமான ஊட்டச்சத்து உணவு தேவையான குழந்தைகள் என பிரிக்கப்பட்டு டாக்டர் குழுவால் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படும்.
ஊட்டச்சத்து உணவு வழங்கி, உடல்நிலை மேம்படுத்தப்பட உள்ளது. தமிழக அரசு உத்தரவை தொடர்ந்து அங்கன்வாடிகளை குழுவாக பிரித்து சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
- போயம்பாளையம் ரோட்டரி சங்கம் அங்கன்வாடி மையத்திற்கு ரூ.7 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டித்தர முன்வந்தது.
- நேரு நகரில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி 8-வது வார்டுக்குட்பட்ட நந்தாநகரில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. ஆனால் இடப்பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதையடுத்து 8-வது வார்டு கவுன்சிலர் வி.வி.ஜி.வேலம்மாள் காந்தி தனியார் பங்களிப்புடன் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான முயற்சி மேற்கொண்டார். இதன் பயனாக போயம்பாளையம் ரோட்டரி சங்கம் அங்கன்வாடி மையத்திற்கு ரூ.7 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டித்தர முன்வந்தது. இதை தொடர்ந்து 8-வது வார்டுக்குட்பட்ட நேரு நகரில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
இதன் திறப்புவிழா நடைபெற்றது. விழாவுக்கு போயம்பாளையம் ரோட்டரி சங்க தலைவர் முத்துராஜ், 8-வது வார்டு கவுன்சிலர் வி.வி.ஜி.வேலம்மாள் காந்தி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். துணை மேயர் எம்.கே.எம்.பாலசுப்பிரமணியம், ரோட்டரி மாவட்ட ஆளுநர் இளங்குமரன், 2-வது மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ் ஆகியோர் குத்துவிளக்கேற்றினார்கள். ரோட்டரி நிர்வாகிகள் தனசேகரன், ஆனந்தராம், மெல்வின்பாபு ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். இதில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. க.செல்வராஜ், மேயர் ந.தினேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு அங்கன்வாடி மைய புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். முடிவில் ரோட்டரி திட்ட தலைவர் ராஜன், பொருளாளர் ஜெகதீஷ்சந்திரன் ஆகியோர் நன்றி கூறினார்கள்.
விழாவில் தி.மு.க. பாண்டியன்நகர் பகுதி செயலாளர் ஜோதி, தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. மாநில இணை பொதுச்செயலாளர் ஈ.பி.சரவணன், இந்திய ஜனநாயக கட்சி வடக்கு மாவட்ட தலைவர் பாரிகணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தேவிபட்டணம் ஊராட்சியில் புதிதாக அங்கன்வாடி மைய திறப்பு விழா நடைபெற்றது.
- வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பொன் முத்தையா பாண்டியன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
சிவகிரி:
சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணம் கிராம ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.
யூனியன் சேர்மனும், வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் மனோகரன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பொன்ராஜ், ஊராட்சி மன்றத் தலைவர் வழக்கறிஞர் ராமராஜ், துணைத் தலைவர் மாடசாமி, செயலர் பொன் செந்தில்குமார், தேவிபட்டணம் ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், கிளை செயலாளர் முருகன், தென்மலை ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், ராமர், உள்ளார் மணிகண்டன், விக்கி, அங்கன்வாடி பணியாளர்கள், தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூரில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. இதில் திம்மரச நாயக்கனூர், பிள்ளை முகம்பட்டி, இந்திராநகர் ஆகிய பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர்.
50 குழந்தைகளுக்கு ஒரு அங்கன்வாடி மையம் என்ற அடிப்படையில் இதனை 2 ஆக பிரிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனையடுத்து பிள்ளை முகம்பட்டியில் புதிய அங்கன்வாடி மையம் கடந்த 2015-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு 2 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.
இந்த மையத்தில் பிள்ளை முகம்பட்டியைச் சேர்ந்த பாலகுரு என்பவர் அங்கன்வாடி பணியாளராகவும், பொம்மிநாயக்கன் பட்டியைச் சேர்ந்த சுப்பு லெட்சுமி சமையலராகவும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த மையத்தில் மொத்தம் 54 குழந்தைகள் என்ற கணக்கில் 20-க்கும் குறைந்த அளவு குழந்தைகளே பயன்பெற்று வருகின்றனர்.
தாழ்த்தப்பட்டவர்கள் வசிக்கும் பிள்ளை முகம்பட்டியில் தொடங்கப்பட்ட அங்கன்வாடி மையத்துக்கு இந்திராநகர் பகுதியில் வசிக்கும் மற்ற சமுதாயத்தினர் தங்கள் குழந்தைகளை அனுப்ப மறுத்து வருகின்றனர்.
குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மாவு, முட்டை ஆகிய பொருட்களை மட்டும் பெற்றுக் கொண்டு கல்வி பயில அனுப்புவதில்லை என்று அங்கன்வாடி பணியாளர் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் நலனுக்காக அரசு நிதியை செலவழித்து கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்துக்கு இந்திரா நகர் உள்ளிட்ட அனைத்து சமுதாய மக்களும் தங்கள் குழந்தைகளை அனுப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இம்மையத்துக்கு மின்சார வசதி, கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தேனி மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தாமரைச் செல்வியிடம் கேட்டபோது பிள்ளைமுகம் பட்டி அங்கன்வாடி மையத்தில் தீண்டாமை கொடுமை நடப்பது குறித்து எவ்வித புகாரும் வரவில்லை. இது குறித்து ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். #AnganwadiCenter
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்