என் மலர்
முகப்பு » Anil Couto
நீங்கள் தேடியது "Anil Couto"
2019-ல் புதிய அரசாங்கம் அமைய பிரார்த்தனை நடத்த வேண்டும் என டெல்லி பேராயர் அனுப்பிய சுற்றறிக்கை விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது சரியானது தான் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி :
டெல்லி பேராயர் சமீபத்தில் மற்ற தேவாலயங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘நமது அரசியலமைப்பிலும், நமது நாட்டின் மதச்சார்பற்ற நிலையிலும் உள்ள ஜனநாயகக் கொள்கைகளுக்கு ஒரு அச்சுறுத்தலை உருவாக்கும் ஒரு கொந்தளிப்பான அரசியல் சூழ்நிலையை நாங்கள் பார்க்கிறோம். நாம் 2019 ஆம் ஆண்டை நோக்கி முன்னேறும்போது, புதிய அரசாங்கம் வேண்டும் என பிராத்தனை செய்வோம்’ என கூறப்பட்டிருந்தது.
இந்த சுற்றறிக்கை இந்திய மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகம் மீது நடத்தப்பட்ட நேரடித் தாக்குதல் என ஆர்.எஸ்.எஸ் கண்டனம் தெரிவித்திருந்தது.
இது தவிர, பல்வேறு இந்து அமைப்பினரும் பாஜகவை சேர்ந்த மத்திய மந்திரிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பேராயர் அனில் கவுடோ, கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்த மக்களின் சுதந்திரம், உரிமைகள், நல்வாழ்வு மீது அக்கரை கொண்ட அரசு மத்தியில் அமைய வேண்டும் இந்த நாடு நல்ல பாதையில் செல்ல வேண்டும் என்பதற்காக பிராத்தனை செய்ய கேட்டிருந்தேன். நான் எவ்வித அரசியலிலும் ஈடுபடவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலம் முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி பேராயர் கருத்து சரிதான் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த மம்தா பானர்ஜி, “நாங்கள் எல்லா மதங்களையும் சாதியினரையும், கொல்கத்தா உட்பட நாடு முழுதும் உள்ள ஆர்ச்பிஷப்களையும் மதிக்கிறோம். அவர்கள் என்ன கூறினார்களோ அதை சரியாகவே கூறியிருக்கிறார்கள் என்பதே உண்மை என்று நான் நினைக்கிறன்” என தெரிவித்துள்ளார். #DelhiArchbishop #Mamata Banerjee
×
X