search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "animal. fat"

    • ஆந்திர சட்டசபை உறுப்பினர்களுக்கான சிறப்புக் கூட்டம் மங்களகிரியில் நடந்தது.
    • அப்போது பேசிய சந்திரபாபு, திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டது கண்டு அதிர்ந்தேன் என்றார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது.

    இந்நிலையில், ஆந்திர சட்டசபை உறுப்பினர்களுக்கான சிறப்புக் கூட்டம் மங்களகிரியில் இன்று நடந்தது. இதில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு பங்கேற்று கடந்த 100 நாட்களில் நிறைவேற்றிய திட்டங்கள், எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதன்பின் அவர் பேசியதாவது:

    திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் மிக புனிதமானது. முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் அங்கு கொடுக்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக கிடைத்த தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க முடியாத ஜெகன்மோகனும், ஒய்எஸ்ஆர் காங்கிரசும் வெட்கப்பட வேண்டும்.

    திருமலையின் ஒவ்வொரு அம்சமும் ஜெகன் அரசால் இழிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. திருப்பதி லட்டுவின் தரம் முற்றிலுமாக கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக சுத்தமான நெய்யை பயன்படுத்த உத்தரவிட்டோம் என தெரிவித்தார்.

    சந்திரபாபு நாயுடு முன்வைத்த இந்தக் குற்றச்சாட்டு பக்தர்கள் மத்தியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெட்ரோல் மூலம் விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் மிருகங்களின் கொழுப்பில் இருந்து விமான எரிபொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. #AnimalFat #jetfuel
    லண்டன்:

    விமானங்கள் பெட்ரோல் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் ஆண்டுக்கு 2 சதவீதம் கார்பன்டை ஆக்சைடு காற்றில் கலந்து மாசு ஏற்படுகிறது. விமானங்களில் வேறு வகையான எரிபொருள் பயன்படுத்த தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் மாட்டின் கெட்டியான கொழுப்பில் இருந்து எரிபொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஒரு எண்ணை சுத்திகரிப்பு நிறுவனம் இத்தகைய முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோன்று கோழி கொழுப்பில் இருந்தும் விமானத்துக்கான எரிபொருள் தயாரித்துள்ளது.

    இதன்மூலம் எரிபொருள் தயாரிப்புக்கான செலவு குறைவாக உள்ளது. எனவே வருகிற 2035-ம் ஆண்டில் விமானத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 2 மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #AnimalFat #jetfuel
    ×