search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Animals are affected"

    • பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி விட்டு வீதியில் வீசி செல்கின்றனர்.
    • பொருளாதார ரீதியாக பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- பல்லடம், மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பிளாஸ்டிக் தடை என்பது பெயருக்குத்தான் உள்ளது. எங்கெங்கு காணினும் பிளாஸ்டிக் கழிவுகள் பரவி கிடக்கின்றன. பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி விட்டு வீதியில் வீசி செல்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் கேடு, நீர் வளம், நிலவளம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    காற்றில் பறக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மேய்ச்சல் நிலங்களை முழுமையாக ஆக்கிரமித்து வருகின்றன. விவசாயிகளின் உயிர்நாடியாகவும், குழந்தைகள், பெரியவர்களுக்கு பாலை வழங்கும் கால்நடைகள் பிளாஸ்டிக்கை உண்டு விடுகின்றன. இதனால் செரிமானமும் ஆகாமல், உணவு குழாயில் இருந்து வெளியில் வராமலும் பிளாஸ்டிக் கழிவுகள் கால்நடைகளின் வயிற்றிலேயே தங்கி விடுகின்றன.

    சிறிது, சிறிதாக பிளாஸ்டிக் கழிவுகள் சேரும்போது மாடுகள் சாப்பிட முடியாமல் பட்டினி கிடந்து பரிதாபமாக உயிரை விடுகின்றன. இதனால் கால்நடைகளை நம்பியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

    இதே நிலை தொடர்ந்து நீடித்தால் வாயில்லா ஜீவன்களான கால்நடைகளின் ஆயுள் குறைந்து அது சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×