என் மலர்
நீங்கள் தேடியது "Anna arivalayam"
- கோபாலபுரம் சென்று கலைஞர் படத்துக்கு மரியாதை செலுத்தி விட்டு, தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெறுகிறார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவாலயத்தில் நிர்வாகிகள் மத்தியில் 'கேக்' வெட்டுகிறார்.
சென்னை:
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளை (மார்ச் 1) தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு காலை 7 மணிக்கு மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.
அதன் பின்னர் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடம் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். இதைத் தொடர்ந்து கோபாலபுரம் சென்று கலைஞர் படத்துக்கு மரியாதை செலுத்தி விட்டு தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெறுகிறார். இதைத் தொடர்ந்து சி.ஐ.டி. காலனியில் உள்ள கனிமொழி எம்.பி. வீட்டுக்கு செல்கிறார்.
அங்கு ராஜாத்தி அம்மாளிடம் ஆசி பெறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள கலைஞர் படத்துக்கு மலர் தூவி வணங்குகிறார்.
அதன் பிறகு தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டுக்கு வந்து 'கேக்' வெட்டி குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதன் பிறகு அண்ணா அறிவாலயத்துக்கு காலை 10 மணியளவில் வருகிறார். அவருக்கு சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு தலைமையில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது.
வரவேற்பை பெற்றுக்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவாலயத்தில் நிர்வாகிகள் மத்தியில் 'கேக்' வெட்டுகிறார்.
அதன்பிறகு கலைஞர் அரங்கத்துக்கு சென்று கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், தொண்டர்களை சந்திக்கிறார். கூட்டணி கட்சித் தலைவர்களும் அங்கு வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்க உள்ளனர்.
சென்னை மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் பிரமுகர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து கூற இருப்பதால் கூட்ட நெரிசலை ஒழுங்குப்படுத்துவதற்காக கலைஞர் அரங்கத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
கட்சி நிர்வாகிகள் பழத்தட்டுகள், மாலைகள், சால்வைகள், புத்தகங்கள், பரிசு பொருட்கள் கொண்டு வந்து வழங்குவார்கள் என்பதால் அவர்கள் சிரமமின்றி வந்து செல்லும் வகையில் கலைஞர் அரங்கத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
- திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்குள் 2 பீர்பாட்டில்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- போலீசார் விசாரணையில் கோவர்தன் கண்ணகி நகரை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
சென்னை:
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்குள் 2 பீர்பாட்டில்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இருசக்கர வாகனத்தில் வந்து அண்ணா அறிவாலயத்திற்குள் 2 பீர்பாட்டில்களை வீசிய கோவர்தனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணையில் கோவர்தன் கண்ணகி நகரை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் அவரிடம் பீர் பாட்டில்களை வீசியது ஏன் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கட்சி நிர்வாகிகளிடம் இருந்து வந்துள்ள புகார்களை விசாரிப்பது உள்ளிட்ட பணிகளை இக்குழு மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
- வழக்கறிஞர் அணி, தொழிலாளர் அணி, இலக்கிய அணியின் மாநில நிர்வாகிகளை அழைத்து கட்சி நிலவரம் பற்றி கேட்டறிகிறார்கள்.
சென்னை:
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தி.மு.க.வில் 5 பேர் கொண்ட தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அமைத்துள்ளார்.
இந்த குழுவில் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தி.மு.க.வில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளை செய்ய தி.மு.க. தலைவருக்கும், தலைமைக்கும் பரிந்துரைப்பது. கட்சி நிர்வாகிகளிடம் இருந்து வந்துள்ள புகார்களை விசாரிப்பது உள்ளிட்ட பணிகளை இக்குழு மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
அதுமட்டுமின்றி அமைப்பு ரீதியாக மாவட்டங்களில் உள்ள பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் மாவட்டங்களை மேலும் பிரித்து புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிப்பது உள்ளிட்ட பணிகளை இக்குழு மேற்கொள்ள இருக்கிறது.
ஏற்கனவே இளைஞரணி மாணவரணி, மகளிர் அணியுடன் ஆலோசனை நடத்தி முடித்துள்ள இக்குழு இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் மீண்டும் கூடி ஆலோசனை நடத்த உள்ளது.
அப்போது வழக்கறிஞர் அணி, தொழிலாளர் அணி, இலக்கிய அணியின் மாநில நிர்வாகிகளை அழைத்து கட்சி நிலவரம் பற்றி கேட்டறிகிறார்கள். அணிகளின் செயல்பாடு எந்த அளவில் உள்ளது என்பது பற்றியும் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
- தி.மு.க. மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் கூட்டம்.
- ஆனந்த், பொன்ராஜ், வி.ஜி. கோகுல், பூர்ணசங்கீதா, வீரமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது.
சென்னை:
தி.மு.க. மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் கூட்டம், வருகிற 10-ந்தேதி (வெள்ளிக் கிழமை) மாலை 4.30 மணியளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில், எனது தலைமையில், மாநில மாணவர் அணித் தலைவர் ராஜீவ்காந்தி, இணைச் செயலாளர்கள் சி.ஜெரால்டு, எஸ்.மோகன் மற்றும் துணைச் செயலாளர்கள் மன்னை சோழராஜன், சேலம் தமிழரசன், அதலை செந்தில்குமார், அமுதரசன், ஆனந்த், பொன்ராஜ், வி.ஜி. கோகுல், பூர்ணசங்கீதா, வீரமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் தமிழகத்தில் நடத்துவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.
- உலக நாடுகளே திரும்பிப் பார்க்கும் ஆட்சி மத்தியில் நடந்து வருகிறது என்றார் அண்ணாமலை.
சென்னை:
திருவான்மியூரில் நடந்த பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் தமிழகத்தில் நடத்துவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் போடும் பட்ஜெட்டிற்கு விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தியதில்லை. ஆனால், மத்திய அரசின் பட்ஜெட் குறித்து விளக்கப் பொதுக்கூட்டம் நடத்துவார். தான் போடும் பட்ஜெட் குறித்து பேசாமல், மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பேசுவதற்காக ஸ்டாலின் திருவள்ளூர் சென்றாரோ, அப்பவே மத்திய அரசின் பட்ஜெட் சிறப்பானது என்பது தெரிய வந்துள்ளது.
உலக நாடுகளே திரும்பிப் பார்க்கும் ஆட்சி மத்தியில் நடந்து வருகிறது. அனைத்து இடங்களிலும் மரியாதை இருக்கும் தலைவர் பிரதமர் மோடி.
கவர்னரும், அண்ணாமலையும் இருக்கவேண்டும் என்று முதலமைச்சர் சொல்கிறார். ஒரு மனிதனுக்கு எப்போது வாய்க்கொழுப்பு அதிகரிக்கிறதோ, அழிவு ஆரம்பமாகி விட்டதாக அர்த்தம்.
உங்கள் கட்சியில்தான் துண்டை போட்டு நீங்க, உங்களுக்குப் பிறகு உதயநிதி, இன்பநிதி என்று உங்கள் குடும்பத்தினரே தலைவர் பதவியில் இருக்கப் போறீங்க.
பா.ஜ.க. தலைவராக தொடர முடியாது என்பது எனக்கு தெரியும். இந்தக் கட்சியைப் பொறுத்தவரையில் ஒருவரே பதவியில் நீடிக்க முடியாது. ஆனால் இங்கு இருந்து செல்லும்போது அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல் விட மாட்டேன் என தெரிவித்தார்.
சென்னை:
தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர்கள் திருச்சி சிவா- ஆ.ராசா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கழகச் சொற்பொழிவாளர்கள் கூட்டம் வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது.
அப்போது தி.மு.க. சொற்பொழிவாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறோம். கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல்- சட்டசபை இடைத்தேர்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். #mkstalin #annaarivalayam
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6 மணிக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பிரச்சனைகளை முன் வைக்க தி.மு.க. ஆலோசித்து வருகிறது.

தி.மு.க. சட்டசபை கொறடா சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. தலைவரும் தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ. கூட்டம் வருகிற 2-ந்தேதி (புதன்கிழமை) மாலை 5 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும்.
அப்போது தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #DMK #MKStalin #DMKMLAMeeting

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் வருகிற 16-ந்தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
இதுகுறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
கலைஞரின் திருவுருவச் சிலை வருகிற 16-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பொதுச் செயலாளர் க.அன்பழகன் முன்னிலையில், பாராளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்கிறார்.
இதை முன்னிட்டு இடவசதி மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்த்திடும் வகையில், தலைமைக் கழகத்தால் ‘சிறப்பு அழைப்பாளர்’களாக அழைக்கப்பட்டுள்ள முன்னணியினர் மட்டுமே, அண்ணா அறிவாலய வளாகத்தில் நடைபெற உள்ள கலைஞர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலைஞர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி, பொதுக்கூட்டம் நடைபெறும் ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் நேரடி ஒளிபரப்பு செய்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் சிலை திறந்து வைத்தவுடன், சோனியா காந்தி, மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன் மற்றும் வாழ்த்துரை வழங்க உள்ள ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு, கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், புதுச்சேரி மாநில முதல்-மந்திரி நாராயணசாமி ஆகியோர் நேரடியாக பொதுக்கூட்டம் நடைபெறும் திடலுக்கு வருகை தந்தவுடன், பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் தொடங்கும்.
எனவே, கழக நிர்வாகிகள் தோழர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தருவதை தவிர்த்து, பொதுக்கூட்டம் நடைபெறும் ஒய்.எம்.சி.ஏ. திடலுக்கு வருகைதர வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ராயப்பேட்டையில் சோனியா காந்தி பேசும் பொதுக்கூட்ட மேடை அண்ணா அறிவாலய வடிவமைப்பில் தயாராகி வருகிறது.
தென் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ, மேடை அமைக்கும் பணியை கவனித்து வருகிறார்.
இந்த மேடை வெளியில் தயாரிக்கப்பட்டு ராயப்பேட்டை மைதானத்திற்கு கொண்டு வரப்படுகிறது. #DMK #KarunanidhiStatue #MKStalin
தி.மு.க.வுக்கு இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளிலேயே உயரமான கொடிக்கம்பம் அண்ணா அறிவாலயத்தில் நடப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்த கொடிக்கம்பத்தை மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்தார்.

கொடிக்கம்பத்தின் உச்சியில் இடிதாங்கி, விமானங்களுக்கான எச்சரிக்கை விளக்கு ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. இரவிலும் ஒளிரும் வகையில் கொடிக்கம்பத்தில் ‘ஹைபீம்’ மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த விளக்குகள் இரவில் தானாக எரிந்து அணையும்படி ‘டைமர்’ வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.
மோட்டார் மூலம் கொடி ஏற்றப்பட்டது. கொடி உச்சியை அடைவதற்கு 12 நிமிடங்கள் ஆனது. அதுவரை பேன்ட்-வாத்தியங்கள் இசைக்கப்பட்டது.
கொடி மேலே செல்ல செல்ல 5 ஆயிரம் கருப்பு- சிவப்பு நிற பலூன்களும் கூடவே பறக்கவிடப்பட்டன.
கொடி ஏற்றப்பட்டதும் மு.க.ஸ்டாலின் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார்.
இதில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, உதயநிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ.க்கள் வாகை சந்திரசேகர், தாயகம் கவி, எழும்பூர் ரவிச்சந்திரன், எம்.ஆர்.ராமச்சந்திரன், பூங்கோதை ஆலடி அருணா உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். #DMK #MKstalin #DMKFlag
