என் மலர்
நீங்கள் தேடியது "Anna Nagar jewelry snatch"
அம்பத்தூர்:
கடந்த சில வாரங்களாக அண்ணாநகர், அமைந்த கரை, ராஜமங்கலம், அரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடைப்பெற்று வந்தன.
குற்றவாளிகளை பிடிக்க அண்ணாநகர் உதவி ஆணையர் குணசேகரன் தலைமையில் அண்ணாநகர் காவல் ஆய்வாளர்கள் சரவணன், செந்தில்குமார்,மதுரவாயல் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.விசாரணையில் தொடர் வழிபறியில் ஈடுப்பட்டு வந்தவர்கள் ஒரே கும்பலை சார்ந்தவர்கள் என்பது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியானது.
அவர்கள் பயன்படுத்தி வந்த மோட்டார் சைக்கிளை ராஜமங்கலத்தில் திருடி உள்ளனர். அதனை வைத்தே அவர்கள் தொடர் கொள்ளையில் ஈடுப்பட்டனர் என்பது தெரியவந்தது.
மணிகண்டன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அண்ணாநகர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். தீவிர விசாரணையில் வழிப்பறியில் ஈடபட்ட வடபழனியை சேர்ந்த சந்தோஷ் குமார் (20), மாங்காடு பகுதியை சேர்ந்த எட்வீன் (19), வடபழனி பகுதியை சேர்ந்த பார்த்திபன் (24) ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 12 1/2 சவரன் தங்க நகைகள், 10 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் விசாரணை நடைபெறுகிறது. #arrest
போரூர்:
சென்னை அண்ணா நகர், மேற்கு திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை திருமங்கலம் உதவி கமிஷனர் சிவகுமார் உத்தரவின் பேரில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அண்ணா நகர் மேற்கு பகுதியில் நேற்று காலை திருமங்கலம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் போலீசை கண்டதும் தப்பி ஒட முயன்றனர். அவர்களை போலீஸ் ஏட்டு ரவி துரத்திச் சென்று மடக்கி பிடித்தார். போலீசார் விசாரணையில், அவர்கள் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (வயது 20). ஸ்ரீநாத் (20), பூந்தமல்லியைச் சேர்ந்த சசிகுமார்(20) என்பதும் பூந்தமல்லி அருகே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அண்ணா நகர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
உடனடியாக 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 20 சவரன் நகைகளையும் கொள்ளையடிக்க பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.