என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anna University"

    • சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே வழக்கு உள்ளது.
    • ஆதாரம் இல்லாததால் விடுவிக்க வேண்டும் தரப்பு வாதம்.

    அண்ணா பல்லைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி ஞானசேகரன் மனுதாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே வழக்கு உள்ளது. ஆதாரம் இல்லாததால் விடுவிக்க வேண்டும் என ஞானசேகரன் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிபதி, பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய ஞானசேகரின் மனுவை தள்ளுபடி செய்தார்.

    ஞானசேகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்தும் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

    • ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளின் விவரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
    • எவ்வித முகாந்திரமும் இல்லாமல் அவசர அவசரமாக சிறப்பு புலனாய்வு குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக ஞானசேகரன் தெரிவித்து உள்ளார்.

    சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், கடந்தாண்டு டிச. 25-ந்தேதி ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்.

    தொடர் விசாரணையில், திருட்டு, ஆள் கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது. அவருக்கு எதிராக, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இதைத்தொடர்ந்து பா.ஜ.க.வை சேர்ந்த வக்கீல் ஏ.மோகன்தாஸ் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தி.மு.க. நிர்வாகியாக இருந்த ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளை தமிழ்நாடு போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. இந்த வழக்குகளை சி.பி.ஐ.க்கோ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவுக்கோ மாற்ற வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

    வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளின் விவரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

    அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி ஞானசேகரன் மனுத்தாக்கல் செய்து இருந்தார். மனுவில், எவ்வித முகாந்திரமும் இல்லாமல் அவசர அவசரமாக சிறப்பு புலனாய்வு குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக அவர் தெரிவித்து இருந்தார்.

    அல்லிகுளம் நீதிமன்ற நீதிபதி விடுமுறை என்பதால் வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணைக்காக ஞானசேகரன் ஆஜரானார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி, ஞானசேகரன் மனு மீது 7-ந்தேதி அரசு தரப்பு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

    • விண்ணப்பப் படிவங்களை cfa.annauniv.edu/cfa என்ற இணையதளத்தின் வாயிலாக சமர்பிக்கலாம்
    • ஆவண நகல்கள் மற்றும் விண்ணப்பக் கட்டணங்களை இணையதளம் வாயிலாக சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் 9.6.2025

    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறயிருப்பதாவது:-

    தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு எனும் வகையின் கீழ், அண்ணா பல்கலைக் கழகத்தின் பல்கலைக்கழக வளாகங்களான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி,மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரி பி.இ., பி.டெக், பி.பிளான் பட்டப்படிப்பிற்கான இணையதள விண்ணப்பப் படிவங்கள் 2025-26-ம் ஆண்டு வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவங்களை cfa.annauniv.edu/cfa என்ற இணையதளத்தின் வாயிலாக சமர்பிக்கலாம்.

    விண்ணப்பப் படிவங்கள், கல்வி சம்பந்தப்பட்ட ஆவண நகல்கள் மற்றும் விண்ணப்பக் கட்டணங்களை இணையதளம் வாயிலாக சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் 9.6.2025.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
    • விசாரணையை வருகிற ஜூன் 12-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளின் விவரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

    சென்னை ஐகோர்ட்டில், பா.ஜ.க.வை சேர்ந்த வக்கீல் ஏ.மோகன்தாஸ் தாக்கல் செய்துள்ள மனுவில், ''அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன், ஆளும் கட்சியின் நிர்வாகி ஆவார். அவருக்கு எதிராக, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    தி.மு.க. நிர்வாகியாக இருந்த ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளை தமிழ்நாடு போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. இந்த வழக்குகளை சி.பி.ஐ.க்கோ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவுக்கோ மாற்ற உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஞானசேகரனுக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குகள் குறித்த விரிவான விவரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை வருகிற ஜூன் 12-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    • பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் மட்டும் அவர் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    • கடந்த 2013-ம் ஆண்டு சென்னை தி.நகரில் நடந்த திருட்டு சம்பவத்தில் ஞானசேகரன் ஈடுபட்டுள்ளார்.

    சென்னை:

    அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போலீசார் ஞானசேகரனிடம் விசாரணை நடத்திய போது அவர் திருட்டு உள்பட மேலும் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 20-க்கும் மேற்பட்ட வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஞானசேகரன் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் மட்டும் அவர் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் ஞானசேகரன் மீது மேலும் ஒரு திருட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாம்பலம் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டு சென்னை தி.நகரில் நடந்த திருட்டு சம்பவத்தில் ஞானசேகரன் ஈடுபட்டுள்ளார்.

    இந்த வழக்கில் அவரை கைது செய்வதற்காக போலீசார் இன்று ஞானசேகரனை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். இந்த வழக்கு தொடர்பாக அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

    • குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
    • தொப்பி அணிந்து தனது முகத்தை மறைத்துக் கொண்டார்.

    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் நியமித்த 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    அந்த குற்றப்பத்திரிகையில் ஞானசேகரன் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. வேறு யாருக்கும் அதில் தொடர்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தான் இருந்ததற்கான தடயம் மற்றும் ஆதாரத்தை மறைப்பதற்காக அவர் தனது செல்போனை பிளைட் மோடுக்கு மாற்றினார். தொப்பி அணிந்து தனது முகத்தை மறைத்துக் கொண்டார்.

    பல்கலைக்கழக படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த மாணவியையும், அவரது நண்பரான மாணவரையும் பார்த்த ஞானசேகரன், மாணவரை தாக்கி கல்லூரி அடையாள அட்டையை பறித்தார். பின்னர் அவர்களை வீடியோ எடுத்திருப்பதாகவும், அதை டீன் மற்றும் ஊழியர்களிடம் காண்பிப்பதாகவும் மிரட்டினார். அவர்கள் கெஞ்சியதால் மாணவரை அங்கிருந்து அனுப்பிவிட்டு மாணவியின் செல்போனை பிளைட் மோடுக்கு மாற்ற சொன்னார். பின்னர் மாணவியை ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். அதை வீடியோவாகவும் பதிவு செய்தார். தான் பல்கலைக்கழக அதிகாரி என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக யாரிடமோ போனில் பேசுவதாக நடித்து, "சார், நான் மாணவியை எச்சரித்து போக விடுகிறேன்" என்று கூறியுள்ளார்.

    மாணவி பெற்றோரின் செல்போன் எண்களையும் பெற்றுக்கொண்டு தான் அழைக்கும் போதெல்லாம் வரவேண்டும் என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார். மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை செல்போனில் மறைத்து வைத்திருந்ததாகவும், பின்னர் அதை அழித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

    மேற்கண்ட தகவல்கள் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளன.

    இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஞானசேகரன் பயன்படுத்திய செல்போனின் அழைப்புகளை சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆய்வு செய்தனர். அவர் மாணவியை மிரட்டுவதற்காக யாருடனோ செல்போனில் பேசுவது போல் நடித்து, அவரை 'சார்' என்று சும்மா அழைத்தார். உண்மையில் சார் என்று யாரும் இல்லை' என்று தெரிவித்துள்ளார்.

    • முதல் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 10-ந்தேதி தொடங்கியது.
    • 4-வது சுற்று கலந்தாய்வு நிறைவு பெற இருக்கிறது.

    சென்னை :

    என்ஜினீயரிங் படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த செப்டம்பர் மாதம் 10-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 4 சுற்றுகளாக கலந்தாய்வு நடந்து வரும் நிலையில், 4-வது சுற்று நிறைவு பெற இருக்கிறது. இந்த நிலையில் முதல் கட்ட கலந்தாய்வில் இடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கான என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு வகுப்புகள் எப்போது தொடங்கும்? என்பது குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு இருக்கிறது.

    அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் பி.இ., பி.டெக். (முழு நேரம்) படிப்புகளில் சேர்ந்த மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு முதல் செமஸ்டருக்கான அறிமுக வகுப்புகள் வருகிற 14-ந்தேதியும், பாடங்களுக்கான வகுப்புகள் வருகிற 28-ந்தேதியும் தொடங்குகிறது. இந்த செமஸ்டருக்கான கடைசி வேலைநாள் அடுத்த ஆண்டு (2023) மார்ச் 23-ந்தேதி ஆகும்.

    அதேபோல் பி.ஆர்க். (முழு நேரம்) படிப்பில் சேர்ந்தவர்களுக்கு அறிமுக வகுப்புகள் 14-ந்தேதியும், பாடங்களுக்கான வகுப்புகள் 28-ந்தேதியும் தொடங்கும் என்றும், இவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 15-ந்தேதி கடைசி வேலைநாளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவர்கள் அனைவருக்கும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் செய்முறை தேர்வும், அடுத்த ஆண்டு ஏப்ரல் 5-ந்தேதி முதல் செமஸ்டர் தேர்வும் தொடங்கி நடைபெறும். முதல் செமஸ்டர் முடிந்து, அதற்கு அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் அடுத்த ஆண்டு மே மாதம் 15-ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 15 நாட்கள் நடக்கும் அறிமுக வகுப்புகளில், மாணவர்கள் தேர்ந்தெடுத்த துறை, கல்லூரி குறித்தும், படிப்புக்கு பின்னர் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள், தொழில் முனைவோராவதற்கான வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்படும்.

    • மாண்டஸ் புயல் காரணமாக செமஸ்டர் தேர்வுகள் தடைப்பட்டன.
    • தொழில்நுட்ப கல்வி இயக்கம் டிப்ளமோ தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது.

    மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைப்பட்டது. மேலும் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் டிப்ளமோ தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, கடந்த 9-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 24-ந் தேதி (சனிக்கிழமை)யும், கடந்த 10-ந் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 31-ந் தேதியும் (சனிக்கிழமை) நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

    • ஜனவரி 19 மற்றும் 20ந் தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு
    • 2வது முறையாக தேர்வு நடைபெறும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைப்பட்டது. மேலும் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் டிப்ளமோ தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து 9ந் தேதி நடைபெற இருந்த தேர்வு, வரும் 24-ந் தேதி (சனிக்கிழமை)யும், கடந்த 10-ந் தேதி நடைபெற இருந்த தேர்வு வரும் 31-ந் தேதியும் (சனிக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் மீண்டும் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் தேதியில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. அதன்படி கடந்த 9ந் தேதி நடைபெற இருந்த தேர்வு, ஜனவரி 19ந் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் கடந்த 10-ந் தேதி நடைபெற இருந்த தேர்வு ஜனவரி 20ந் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆகஸ்டு, செப்டம்பர்-2022-க்கான செமஸ்டர் தேர்வு அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது.
    • 30-ந்தேதி முதல் தேர்வு தொடங்கி நடக்கவுள்ளது.

    சென்னை :

    அண்ணா பல்கலைக்கழகம் அதன் கீழ் உள்ள தொலைதூரப் படிப்புகளில் ஆகஸ்டு, செப்டம்பர்-2022-க்கான செமஸ்டர் தேர்வு அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது.

    அதன்படி, எம்.பி.ஏ., எம்.எஸ்சி., எம்.சி.ஏ. ஆகிய படிப்புகளுக்கான அட்டவணையில் ஞாயிற்றுக்கிழமையில் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 30-ந்தேதி முதல் தேர்வு தொடங்கி நடைபெறுவதாக வெளியிடப்பட்டு இருக்கும் அந்த பட்டியலில், அடுத்த மாதம் (பிப்ரவரி) 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சில தேர்வுகள் நடைபெறும் என்று கூறப்பட்டிருக்கிறது.

    அந்தவகையில், அறிவுசார் சொத்து உரிமைகள், சில்லரை தளவாடங்கள், மருத்துவ சுற்றுலா, நீடித்த முதலீடுகள் மற்றும் நிதி முடிவுகள், வணிகத்தின் சட்ட அம்சங்கள், கூறுகள் சார்ந்த தொழில்நுட்பம், மின் வணிகம், தரவுத்தள மேலாண்மை அமைப்பு உள்பட சில பாடப்பிரிவுகளுக்கான தேர்வுகள் அடுத்த மாதம் 12-ந்தேதி நடைபெற இருக்கிறது.

    வழக்கமாக படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு, பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வு ஆகியவைகள் தான் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும். ஆனால் தற்போது பட்டப்படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வும் ஞாயிற்றுக்கிழமையில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • ரூ.641 கோடி மதிப்பீட்டில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் மேற்கொள்ள அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.
    • இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவு பெற்று நிலம் மீட்டெடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    சென்னை:

    கொடுங்கையூர் குப்பைக்கொட்டும் வளாகத்தில் சுமார் 252 ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக கொட்டப்பட்டு வரும் சுமார் 66.52 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் ஆறு சிப்பங்களாக பிரிக்கப்பட்டு, தூய்மை இந்தியா திட்டநிதி, மாநில அரசுநிதி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி நிதி பங்களிப்பின் மூலம் பயோ-மைனிங் முறையில் செயல்படுத்தப்படுகிறது.

    ரூ.641 கோடி மதிப்பீட்டில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் மேற்கொள்ள அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    இந்தப் பணிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப வல்லுநர்களை உள்ளடக்கிய திட்ட கண்காணிப்புக் குழுவின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிகள் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவு பெற்று நிலம் மீட்டெடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    • அண்ணா பல்கலைக்கழகம் பெயரில் போலி டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசில் புகாரளிக்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
    • ஓய்வு பெற்ற நீதிபதியை ஏமாற்றி, அண்ணா பல்கலைக்கழகத்தையும் ஏமாற்றி உள்ளனர்.

    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறியிருப்பதாவது:

    அண்ணா பல்கலைக்கழகம் பெயரில் இசையமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு உள்ளிட்டோருக்கு போலி டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசில் புகாரளிக்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

    ஓய்வு பெற்ற நீதிபதியை ஏமாற்றி, அண்ணா பல்கலைக்கழகத்தையும் ஏமாற்றி உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    அண்ணா பல்கலைக்கழகம் பெயரில் போலி டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க ஆளுநர் மாளிகையும், அரசும் அறிவுறுத்தி உள்ளன.

    இதையடுத்து ஆளுநர் செயலாளர், உயர்கல்வித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×