என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Annapurna Devi"

    • கடந்த தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுலை வீழ்த்தி ஸ்மிருதி இரானி வென்று அமைச்சரானார்.
    • இந்த தேர்தலில் தோல்வியடைந்த ஸ்மிருதி இரானிக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை.

    2019 ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி, கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்திரபிரதேச மாநிலம் அமேதி ஆகிய தொக்குகளில் நின்றார். இதில் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால் அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் ராகுல்காந்தி தோல்வியை தழுவினார்.

    அதன் பின்னர் ஸ்மிருதி இரானி மோடியின் அமைச்சரவையில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சராக 5 ஆண்டுகள் பதவி வகித்தார்.

    இந்நிலையில் இந்தாண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் மீண்டும் ஸ்மிருதி இரானி பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டார். அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கிஷோரிலால் சர்மா போட்டியிட்டார்.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட கிஷோரிலால் சர்மா அமோக வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி ரானியை 1.67 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    இதனையடுத்து, தேர்தலில் தோல்வியடைந்த ஸ்மிருதி இரானிக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை.

    இந்நிலையில், ஸ்மிருதி இரானி வகித்து வந்த மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை தற்போது பாஜக எம்.பி. அன்னபூர்ணா தேவிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

    • அறிக்கைப்படி, இந்தியாவின் பட்டினிக் குறியீடானது மிகவும் பின்தங்கிய நிலையில் 111வது இடத்தில் தீவிரமான அளவில் உள்ளது.
    • ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது மட்டுமே பட்டினியோடு நேரடியாகத் தொடர்புடையது என்று அன்னபூரணா தேவி விளக்கமளித்துள்ளார்.

     2023 ஆம் ஆண்டுக்கான உலகப் பட்டினிக் குறியீடு Global Hunger Index (GHI) அறிக்கை கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த குறியீட்டில் மொத்தம் உள்ள 121 நாடுகளில் 111 வது இடத்தில் இந்தியா உள்ளது. அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃபே என்ற நிறுவனமும் இந்தப் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

    அதன் அறிக்கைப்படி, இந்தியாவின் பட்டினிக் குறியீடானது மிகவும் பின்தங்கிய நிலையில் 111வது இடத்தில் தீவிரமான அளவில் உள்ளது. இது அரசியல் களத்தில் பேசுபொருளான நிலையில் இதுகுறித்து தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்குத் தனது பதிலை மக்களவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பித்துள்ளார்.

     

    அதில் அவர், GHI -யின் அறிக்கை இந்தியாவின் உண்மை நிலையை விவரிக்கவில்லை. GHI பயன்படுத்தும் பட்டினியை அளக்கும் காரணிகள் குறைபாடுடையதாகும். எனவே அந்த அறிக்கை face value கொண்டதல்ல. மேலும் இந்தியாவின் பட்டினி அளவைப் பொறுத்தவரை GHI உடைய மதிப்பீடு தவறானது.

     

    GHI பட்டினிக் குறியீட்டை ஊட்டச்சத்துக் குறைபாடு, 5வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் சத்துணவு குறைபாட்டால் தங்கள் உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருத்தல், வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருத்தல், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை உயிரிழப்புகள் ஆகிய காரணிகளை அடிப்படையாக வைத்து உலக பட்டினி குறியீடு கணக்கிடப்படுகிறது. இவற்றில் ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது மட்டுமே பட்டினியோடு நேரடியாகத் தொடர்புடையது என்று அன்னபூரணா தேவி விளக்கமளித்துள்ளார்.  

    • தமிழ்நாட்டில் அனைத்து நலத்திட்டங்களும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • பங்குத்தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் விடுவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி அன்னபூர்ணா தேவிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:

    தமிழ்நாட்டில் அனைத்து நலத் திட்டங்களும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு நிதியுதவி வழங்கும் திட்டங்களுக்கு மாநில அரசின் பங்களிப்பு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முறையாக வழங்கப்பட்டு வருகிறது.

    பெரும்பாலான நேர்வுகளில், ஒன்றிய அரசின் நிதிப்பங்கு காலாண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டிலோ மட்டுமே வழங்கப்படுகிறது.

    நிதியாண்டின் முடிவிற்குள் ஒன்றிய அரசு ஒதுக்கும் தொகையை மேற்குறிப்பிட்ட திட்டங்களுக்குக் குறுகிய காலத்திற்குள் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது.

    பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்னும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 304 கோடி ரூபாயில், ஒன்றிய அரசின் பங்குத் தொகையான 184 கோடி ரூபாய் இதுநாள் வரை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் உரிய காலத்தில் வரவு வைக்க இயலாமல் உள்ளது.

    இன்றைய தேதியில், ஒற்றை ஒருங்கிணைப்பு முகமை (Single Nodal Agency) கணக்குகளில் உள்ள 576.22 கோடி ரூபாயில் இந்த நிதியாண்டு முடிவதற்குள் ரூ.482.80 கோடி பயன்படுத்தப்படும் என்றும், மீதமுள்ள தொகை ஒன்றிய அரசின் பங்காக அடுத்த நிதியாண்டுக்குக் கொண்டு செல்லப்படும்.

    இந்நிலையில், தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திட ஏதுவாக, ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான பங்குத்தொகையை, குறிப்பிட்ட காலத்திற்குள் அதாவது அந்தந்த நிதியாண்டுக்குள்ளேயே விடுவித்திட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    ×