search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anti drug day"

    • குழந்தை திருமணம் நடத்தி வைக்கும் கலாசாரம் இன்றளவும் உள்ளது.
    • வில்லுப்பாட்டு என்பது தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்று.

    நெல்லை:

    தமிழகத்தில் சட்டப்படி திருமணம் செய்து கொள்ள பெண்களுக்கு 18 வயதும் ஆண்களுக்கு 21 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் சட்டத்தை மீறி பல மாவட்டங்களில் 18 வயது நிரம்பாத குழந்தைகள் சிலருக்கு குழந்தை திருமணம் நடத்தி வைக்கும் கலாசாரம் இன்றளவும் உள்ளது.

    அந்த வகையில் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகாவுக்கு உட்பட்ட பாப்பாக்குடி பகுதியில் அதிகளவு குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக அரசு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    எனவே அந்த பகுதியில் உள்ள சமூக நலத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து குழந்தை திருமணங்களை தடுக்க, விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

    இதுபோன்ற விஷயங்களில் அதிகாரிகள் வழக்கமாக பள்ளி மாணவர்களை கொண்டும், தன்னார்வலர்களை கொண்டும் விழிப்புணர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது வழக்கம்.

    ஆனால் சற்று வித்தியாசமாக குழந்தை திருமணங்களை தடுக்க நெல்லையை சேர்ந்த அரசு பெண் அதிகாரி ஒருவர் தானே களத்தில் இறங்கி கிராமிய கலையான வில்லுப்பாட்டு மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.

    நெல்லையை அடுத்த தச்சநல்லூரை சேர்ந்தவர் கோமதி கிருஷ்ணமூர்த்தி. இவர் குரூப்-4 தேர்வு மூலம் தமிழக அரசுத்துறையில் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த பதவி உயர்வு பெற்று தற்போது நெல்லை மாவட்டம் முக்கூடல் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது வருவாய் கட்டுப்பாட்டில் தான் பாப்பாக்குடி கிராமம் அமைந்துள்ளது.

    அங்கு அதிக குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை அறிந்து வேதனை அடைந்த கோமதி கிருஷ்ணமூர்த்தி பள்ளி மாணவர்கள் மத்தியில் ஆழமான விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்தார். இதற்காக அவரே களத்தில் இறங்கி கிராமிய கலையான வில்லுபாட்டை பாடி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை கொண்டு சென்றார்.

    இந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 பள்ளிகளில் வருவாய் ஆய்வாளர் கோமதி கிருஷ்ணமூர்த்தி வில்லுப்பாட்டு மூலம் மாணவர்கள் மத்தியில் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து மாணவர்களிடையே அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.

    வில்லுப்பாட்டு என்பது தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்று. அந்த கலை நயத்தை சற்று கூட குறைவில்லாமல் அதிகாரியாக இருந்தாலும் வில்லுப்பாட்டில் தேர்ச்சி பெற்ற கலைஞரை போன்று கோமதி கிருஷ்ணமூர்த்தி வில்லு பாடகியாகவே மாறி இருப்பார்.

    இதற்காக பிரத்யேகமாக வில்லு கலைக்கு தேவைப்படும் மண்பானை, வில்லு வீசுகோல் ஆகியவற்றை அவரே தயார் செய்து வைத்துள்ளார். அவருடன் சேர்ந்து சமூக நலத்துறையை சேர்ந்த சமூகநலத்துறை அலுவலரான பத்மா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுடன் இணைந்து வில்லுப்பாட்டு பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    சமீபத்தில் போதை ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்ட நிலையில் அன்றைய தினம் கோமதி கிருஷ்ணமூர்த்தி முக்கூடலில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தானே வேடமிட்டு நாடகம் ஒன்றை நடத்தி இருந்தார். அதில் எமதர்மராஜா வேடம் போட்டு மது, கஞ்சா போன்ற போதையால் ஏற்படும் தீமைகள் குறித்து தத்ரூபமாக நடித்துக் காட்டி இருந்தார்.

    இது குறித்து கோமதி கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, `பாப்பாக்குடி பகுதியில் குழந்தை திருமணம் அதிகம் நடைபெறுவதாக அதை தடுக்க வேண்டும் என நாங்கள் வில்லுப்பாட்டு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    பொதுவாக நான் பள்ளி மற்றும் கல்லூரி பருவத்தில் இதுபோன்ற பொது மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் அதிக ஆர்வம் வைத்திருப்பேன். எனவே கிராமிய கலையான வில்லுப்பாட்டு மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் எளிதில் புரியும் என்பதால் இந்த செயலில் ஈடுபட்டு வருகிறேன் என்று கூறினார்.

    • அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம் நடந்தது.
    • மாணவர்கள் மது மற்றும் புகையிலை பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என சுகாதார மேற்பார்வையாளர் பேசினார்.

    சிவகாசி

    சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 26-ந்தேதி உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம் கல்லூரியில் அனுசரிக்கப்பட்டது. விழாவில் விருதுநகர் மாவட்டம் எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார மேற்பார்வையாளர் வீரபத்திரன், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். முன்னதாக விழாவுக்கு தலைமை தாங்கினார். முதல்வர் நந்தகுமார் கலந்து கொண்டார்.

    சுகாதார மேற்பார்வை யாளர் வீரபத்திரன் பேசுகையில், மாணவர்கள் மது மற்றும் புகையிலை பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று கூறினார். குட்கா, கஞ்சா போன்ற பொருட்கள் மூளையை பாதித்து உங்களது நினைவை மாற்றுகிறது. இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது.

    சுகாதாரம் சாரா மேற்பார்வையாளர் பாண்டியன் பேசுகையில், போதைப் பொருள்களை பயன்படுத்துவதால் மனக்குழப்பம் ஏற்பட்டு தானே பேசிக்கொள்வது. எதைக்கண்டாலும் பயப்படுவது போன்றவை ஏற்படுகிறது. சிறுநீரகம். கல்லீரல் பாதிப்பு போன்ற வையும், இதயம் சார்ந்த பாதிப்பும் ஏற்படுகிறது. முன்னதாக மாணவர்கள் பொதுமக்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். விழாவில் மாணவர்கள் போதைப்பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வடமலாபுரம் சுகாதார ஆய்வாளர் விக்ணேஷ் மற்றும் எம்.புதுப்பட்டி சுகாதார ஆய்வாளர் ஷேக் முகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மாணவ, மாணவிகள் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
    • நம்மை சுற்றி உள்ள யாரையும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக விடக்கூடாது.

    நெல்லை:

    சர்வதேச போதை ஓழிப்பு தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் இன்று அமலாக்க பணியகம், நாட்டு நலப்பணி திட்ட குழுமம் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தின.

    விழிப்புணர்வு பேரணி

    முக்கிய சாலைகள், சந்திப்பு பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நெல்லை, பாளை தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் 250-க்கும் மேற்பட்டோர் போதை ஓழிப்பு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு பேரணி சென்றனர். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநகர போலீஸ் துணை கமிஷனர் அனிதா, கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசியதாவது:-

    உலக அளவில் போதை ஒழிப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அது தொடர்பாக விழிப்பு ணர்வு நிகழ்ச்சியில் நீங்கள் எல்லோரும் பங்கு பெற்று இருக்கிறீர்கள். இந்த ஆண்டு இன்னும் 2 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வரும். அதிலும் நீங்கள் பங்கு கொள்ள வேண்டும். கல்லூரிகளுக்கு ஏன் படிப்பதற்காக வருகி றோம் என்றால் நமது தலைமைத்துவ பண்புகளை வளர்த்துக் கொள்வதற்காக தான்.

    தலைமைத்துவ பண்புகள் என்றால் என்ன? இந்த சமுதாயத்திற்காக நாம் என்ன செய்ய வேண்டும். முதலில் மாணவர்களாகிய நீங்கள் இந்த போதைப் பழக்கத்திற்கு அடிமையாக கூடாது என உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். 2-வது நம்மை சுற்றி இருக்கிற யாரையும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக விடக்கூடாது.

    அதற்காகத்தான் நமது மாவட்டத்தில் நிறைய ஆன்ட்டி டிரக் கிளப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. நான் தவறு செய்ய வில்லை. எனக்கு எதற்கு இதெல்லாம் என்று நீங்கள் நினைக்கலாம்.

    நல்ல தலைமைப் பண்பு கொண்ட ஒரு மாணவன் நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை நன்கு அறிந்து வைத்திருப்பான். தவறு நடந்தால் அதை தடுக்க முன் நிற்பான். அதற்காகத்தான் அரசு தரப்பில் அமைப்புகள் உள்ளன. அதில் தகவல் தெரிவித்து போதை ஒழிப்பிற்கு எதிராக தங்களது பங்களிப்பை ஆற்றலாம். நீங்கள் நினைத்தால் நெல்லையை போதை இல்லாத மாநகரமாக மாற்ற முடியும். அதற்காகத்தான் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டது.
    • வடகரை பேரூராட்சி மன்ற தலைவர் ஷேக் தாவுத், மாணவ-மாணவிகளிடையே போதைப் பொருளின் தீமை குறித்து உரையாற்றினார்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வடகரை பேரூராட்சி மன்ற தலைவரும், தி.மு.க. மாவட்ட பொருளாளருமான ஷேக் தாவுத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளிடையே போதைப் பொருளின் தீமை குறித்து உரையாற்றினார்.

    விழாவிற்கு கம்பீரம் பாலசுப்பிரமணியம், ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் பள்ளியின் செயலாளர் முகமது பண்ணையார் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் முதல்வர் சமீமா பர்வீன் முன்னிலையில் மாணவ-மாணவிகள் போதைப்பொருள் தடுப்பு உறுதி மொழி ஏற்றனர்.

    ×