search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Antigua"

    • ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது.
    • மழையால் ரத்தானால் இங்கிலாந்தின் சூப்பர் 8 கனவு சிதைந்து விடும்.

    ஆன்டிகுவா:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், லீக் சுற்று விறுவிறுப்பான கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. இதில் 'பி' பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, குட்டி அணியான ஓமனை ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) சந்திக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது.

    ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து முதல் ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை எதிர்கொண்டது. துரதிர்ஷ்டவசமாக மழையால் அந்த ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் பணிந்தது.

    இதையடுத்து எஞ்சிய இரு லீக்கில் வென்றால் மட்டும் சூப்பர்8 சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும் என்ற வாழ்வா-சாவா சிக்கலுக்கு மத்தியில் ஓமனுடன் இன்று களம் காணுகிறது. ஆனால் இந்த ஆட்டத்திற்கும் மழை ஆபத்து இருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஒரு வேளை இந்த ஆட்டமும் மழையால் பாதியில் ரத்தானால் இங்கிலாந்தின் சூப்பர் 8 கனவு சிதைந்து விடும்.

    இங்கிலாந்தை பொறுத்தவரை ஓமன் மற்றும் நமிபியாவை வீழ்த்த வேண்டும். அதே சமயம் ஆஸ்திரேலிய அணி கடைசி லீக்கில் ஸ்காட்லாந்தை சாய்க்க வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் இங்கிலாந்தும், ஸ்காட்லாந்தும் தலா 5 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும்.

    அப்போது ரன்ரேட் அடிப்படையில் ஒரு அணி அடுத்த சுற்றுக்கு தேர்வாகும். ரன்ரேட்டில் ஸ்காட்லாந்து (+2.164) வலுவாக இருப்பதால் இங்கிலாந்து (ரன்ரேட் -1.800) இரு ஆட்டத்திலும் மெகா வெற்றியை பெற்றாக வேண்டும்.

    முன்னதாக கிங்ஸ்டனில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் வங்காளதேசம்- நெதர்லாந்து (டி பிரிவு) அணிகள் மல்லுக்கட்டுகின்றன. தலா ஒரு வெற்றி, தோல்வியுடன் உள்ள இவ்விரு அணிகளும் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தின் முடிவு முக்கியமாகும்.

    வங்கிக் கடன் மோசடி வழக்கில் தேடப்படும் மெகுல் சோக்சியை இந்தியாவிற்கு நாடு கடத்தத் தேவையான ஒத்துழைப்பை வழங்க ஆண்டிகுவா முன்வந்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. #PNBFraudCase #MehulChoksi
    நியூயார்க்:

    ஐ.நா. பொதுச்சபையின் 73ஆவது ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றுள்ள இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், ஆண்டிகுவா வெளியுறவு மந்திரி சேட் கிரீனைச் சந்தித்துப் பேசினார்.

    அப்போது பிஎன்பி வங்கிக் கடன் மோசடியில் தேடப்பட்டு வரும் மெகுல் சோக்சியை நாடு கடத்த உதவுமாறு அவரிடம் சுஷ்மா சுவராஜ் கேட்டுக்கொண்டுள்ளார். மெகுல் சோக்சியை நாடு நடத்தும் நடவடிக்கையில் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஆண்டிகுவா வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார்.

    இந்தத் தகவலை இந்திய வெளியுறவு அமைச்சகச் செய்தித்தொடர்பாளர் ரவீஸ் குமார் தெரிவித்தார். இந்தியாவுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க ஆண்டிகுவா உடன்பட்டுள்ளதாகவும், அதேநேரத்தில் குறித்த காலவரையறை எதையும் கூறவில்லை என்றும் ரவீஸ் குமார் குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த ஆகஸ்ட் மாதம் ஆண்டிகுவா பிரதமர் எழுதிய கடிதத்தில், மெகுல் சோக்சியின் பாஸ்போர்ட் சட்டப்பூர்வமாக பெறப்பட்டது என்பதால் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய முடியாது என்று கூறியிருந்தார். அவருக்கு எதிராக எந்த சட்டவிரோத புகார்களும் இல்லை என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    வங்கி மோசடி வெளிப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக, ஜனவரி மாதம் சோக்சி இந்தியாவில் இருந்து தப்பிச் சென்றார். பின்னர் ஆண்டிகுவா பார்புடா குடியுரிமை பெற்றுள்ளார். #PNBFraudCase #MehulChoksi
    ஆண்டிகுவா டெஸ்டில் தனது அபாரமான பந்து வீச்சினால் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 219 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #WIvBAN
    ஆண்டிகுவா:

    வங்காள தேசம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆண்டிகுவா நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    வெஸ்ட் இன்டீஸ் அணியினரின் பந்து வீச்சில் அனல் பறந்தது. குறிப்பாக, கீமர் ரோச் சிறப்பாக பந்து வீசி வங்காள தேசத்தின் முன்னணி வீரர்களை அவுட்டாக்கினார். தொடக்க ஆட்டக்காரரான லியான் தாஸ் மட்டும் இரட்டை இலக்கத்தை தொட்டார். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க எண்களிலேயே வெளியேறினர். இதனால் வங்காள தேச அணி தனது முதல் இன்னிங்சில் 43 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    வெஸ்ட் இன்டீஸ் அணியின் கீமர் ரோச் 8 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. அணியின் எண்ணிக்கை 113 ரன்களாக இருக்கும்போது டேவன் ஸ்மித் 58 ரன்களில் அவுட்டாகினார். அடுத்து ஆடிய பாவெல் 48 ரன்கள் எடுத்து அவுட்டானார். பிராத்வைட் சிறப்பாக ஆடி 121 ரன்களில் அவுட்டானார். அடுத்து ஆடிய ஷாய் ஹோப் 68 ரன்களில் அவுட்டானார். கடைசியில் ஜேசன் ஹோல்டர், கீம்ர் ரோச் ஓரளவு ரன்கள் எடுத்தனர். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 137.3 ஓவரில் 406 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.

    வங்காள தேசம் சார்பில் அபு ஜெயத், மெஹிடி ஹசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து, வங்காள தேசம் அணியினர் இரண்டாவது இன்னிங்சை ஆடினர். முதல் இன்னிங்ஸ் போலவே விக்கெட்டுகள் மளமளவென விழுந்தது.
     
    இறுதியில், வங்காள தேச அணி 40.2 ஓவரில் 144 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நுருல் ஹசன் மட்டும் தாக்குப்பிடித்து 64 ரன்கள் எடுத்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஷனோன் காப்ரியல் 5 விக்கெட்டுகளும், ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 219 ரன்கள் வித்தியாசத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தியது. ஆட்ட நாயகனாக கீமர் ரோச் தேர்வு செய்யப்பட்டார். #WIvBAN
    ஆண்டிகுவா டெஸ்டில் தனது அபாரமான பந்து வீச்சினால் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் வெற்றியை நெருங்கி கொண்டிருக்கின்றனர். #WIvBAN
    ஆண்டிகுவா:

    வங்காள தேசம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆண்டிகுவா நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    வங்காள தேசத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம்  இக்பால், லியான் தாஸ் ஆகியோர் களமிறங்கினர். வெஸ்ட் இன்டீஸ் அணியினரின் பந்து வீச்சில் அனல் பறந்தது.

    குறிப்பாக, கீமர் ரோச் சிறப்பாக பந்து வீசி வங்காள தேசத்தின் முன்னணி வீரர்களை அவுட்டாக்கினார். தொடக்க ஆட்டக்காரரான லியான் தாஸ் மட்டும் இரட்டை இலக்கத்தை தொட்டார். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க எண்களிலேயே வெளியேறினர். இதனால் வங்காள தேச அணி தனது முதல் இன்னிங்சில் 43 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    வெஸ்ட் இன்டீஸ் அணியின் கீமர் ரோச் 8 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிராத்வைட், டேவன் ஸ்மித் ஆகியோர் இறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடியதால் அணியின் எண்ணிக்கை 100 ரன்களை கடந்தது.

    113 ரன்களாக இருக்கும்போது டேவன் ஸ்மித் 58 ரன்களில் அவுட்டாகினார். அடுத்து ஆடிய பாவெல் 48 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

    முதல் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 68 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்துள்ளது. பிராத்வைட் 88 ரன்களுடனும், பிஷு ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    இரண்டாம் நாள் ஆட்டத்தில் பிராத்வைட் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 121 ரன்களில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஷாய் ஹோப் 68 ரன்களில் அவுட்டானார். கடைசியில் ஜேசன் ஹோல்டர், கீம்ர் ரோச் ஓரளவு ரன்கள் எடுத்தனர். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 137.3 ஓவரில் 406 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.

    வங்காள தேசம் சார்பில் அபு ஜெயத், மெஹிடி ஹசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து, வங்காள தேசம் அணியினர் இரண்டாவது இன்னிங்சை ஆடினர். முதல் இன்னிங்ஸ் போலவே விக்கெட்டுகள் மளமளவென விழுந்தது.
     
    இரண்டாம் நாள்  ஆட்ட நேர முடிவில் வங்காள தேச அணி 18 ஓவரில் 6 விக்கெட் இழ்ப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. மகமதுல்லா 15 ரன்களுடனும், நுருல் ஹசன் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஷனோன் காப்ரியல் 4 விக்கெட்டும், ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். #WIvBAN
    வங்காள தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 406 ரன்களை குவித்துள்ளது. #WIvBAN
    ஆண்டிகுவா:

    வங்காள தேசம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆண்டிகுவா நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    வங்காள தேசத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம்  இக்பால், லியான் தாஸ் ஆகியோர் களமிறங்கினர். வெஸ்ட் இன்டீஸ் அணியினரின் பந்து வீச்சில் அனல் பறந்தது.

    குறிப்பாக, கீமர் ரோச் சிறப்பாக பந்து வீசி வங்காள தேசத்தின் முன்னணி வீரர்களை அவுட்டாக்கினார். தொடக்க ஆட்டக்காரரான லியான் தாஸ் மட்டும் இரட்டை இலக்கத்தை தொட்டார். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க எண்களிலேயே வெளியேறினர். இதனால் வங்காள தேச அணி தனது முதல் இன்னிங்சில் 43 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    வெஸ்ட் இன்டீஸ் அணியின் கீமர் ரோச் 8 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிராத்வைட், டேவன் ஸ்மித் ஆகியோர் இறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடியதால் அணியின் எண்ணிக்கை 100 ரன்களை கடந்தது.

    113 ரன்களாக இருக்கும்போது டேவன் ஸ்மித் 58 ரன்களில் அவுட்டாகினார். அடுத்து ஆடிய பாவெல் 48 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

    முதல் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 68 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்துள்ளது. பிராத்வைட் 88 ரன்களுடனும், பிஷு ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    இரண்டாம் நாள் ஆட்டத்தில் பிராத்வைட் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 121 ரன்களில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஷாய் ஹோப் 68 ரன்களில் அவுட்டானார். கடைசியில் ஜேசன் ஹோல்டர், கீம்ர் ரோச் ஓரளவு ரன்கள் எடுத்தனர்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 137.3 ஓவரில் 406 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.

    வங்காள தேசம் சார்பில் அபு ஜெயத், மெஹிடி ஹசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். #WIvBAN 
    ஆண்டிகுவா டெஸ்டின் முதல் நாள் ஆட்ட முடிவில், வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்துள்ளது. #WIvBAN #TestSeries
    ஆண்டிகுவா:

    வங்காள தேச அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் டெஸ்ட் ஆண்டிகுவா நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    வங்காள தேசத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம்  இக்பால், லியான் தாஸ் ஆகியோர் களமிறங்கினர். வெஸ்ட் இன்டீஸ் அணியினரின் பந்து வீச்சில் அனல் பறந்தது. குறிப்பாக, கீமர் ரோச் சிறப்பாக பந்து வீசி வங்காள தேசத்தின் முன்னணி வீரர்களை அவுட்டாக்கினார்.

    தொடக்க ஆட்டக்காரரான லியான் தாஸ் மட்டும் இரட்டை இலக்கத்தை தொட்டார். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க எண்களிலேயே வெளியேறினர். இதனால் வங்காள தேச அணி தனது முதல் இன்னிங்சில் 43 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    வெஸ்ட் இன்டீஸ் அணியின் கீமர் ரோச் 8 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிராத்வைட், டேவன் ஸ்மித் ஆகியோர் இறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடியதால் அணியின் எண்ணிக்கை 100 ரன்களை கடந்தது.

    113 ரன்களாக இருக்கும்போது டேவன் ஸ்மித் 58 ரன்களில் அவுட்டாகினார். அடுத்து ஆடிய பாவெல் 48 ரன்கள் எடுத்து அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 194 ஆக இருந்தது.

    தொடர்ந்து இறங்கிய  தேவேந்திர பிஷு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். இதனால் வெஸ் இண்டீஸ் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 68 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்துள்ளது. பிராத்வைட் 88 ரன்களுடனும், பிஷு ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். #WIvBAN #TestSeries
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 43 ரன்களில் வங்காள தேசம் சுருண்டது. #WIvBAN #TestSeries
    ஆண்டிகுவா:

    வங்காள தேசம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் டெஸ்ட் ஆண்டிகுவா நகரில் இன்று இரவு தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    வங்காள தேசத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம்  இக்பால், லியான் தாஸ் ஆகியோர் களமிறங்கினர். வெஸ்ட் இன்டீஸ் அணியினரின் பந்து வீச்சில் அனல் பறந்தது.

    குறிப்பாக, கீமர் ரோச் சிறப்பாக பந்து வீசி வங்காள தேசத்தின் முன்னணி வீரர்களை அவுட்டாக்கினார். தொடக்க ஆட்டக்காரரான லியான் தாஸ் மட்டும் இரட்டை இலக்கத்தை தொட்டார். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க எண்களிலேயே வெளியேறினர்.

    இதனால் வங்காள தேச அணி தனது முதல் இன்னிங்சில் 43 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    வெஸ்ட் இன்டீஸ் அணியின் கீமர் ரோச் 8 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. #WIvBAN #TestSeries
    ×