என் மலர்
நீங்கள் தேடியது "Antiguo edificio court"
திண்டுக்கல்:
திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே அமைந்திருந்த பழைய நீதிமன்ற கட்டிடம் பல வரலாற்று நினைவுகளை தாங்கியதாகும். நீதிமன்றத்தில் உள்ள பழங்கால கட்டிடங்கள் கருங்கற்களால் கட்டப்பட்டு இன்றளவும் சேதமடையாமல் கம்பீரமாக உள்ளது.
ஆனால் அதன் பிறகு கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்கள் சிதிலமடைந்து விட்டன. தற்போது புதிய கோர்ட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே செயல்பட்டு வருகிறது.
இதனால் பழைய நீதிமன்ற கட்டிடம் பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இந்த கட்டிடத்தை திண்டுக்கல் மாவட்ட மக்கள் பெரிதும் பயன்படுத்தும் வகையில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, தாலுகா அலுவலகங்கள் என்று பயன்தரும் கட்டிடமாக மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் எந்தவித அறிவிப்பும் வராததால் சமூக விரோத செயல்களுக்கு புகலிடமாக இரவு நேரங்களில் மதுபானம் அருந்துபவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து இதனை பயன்படுத்துகின்றனர். அவர்கள் விட்டு செல்லும் மதுபான பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், ஆணுறை ஆகியவை மலைபோல் குவிந்து உள்ளன.
நீதிபதிகள் தங்கி இருந்த அறைகளில் பெண்களை அழைத்து வந்து உல்லாசத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இந்த கட்டிடத்துக்கு காவலாளி கிடையாது. 4 புறமும் வாசல் உண்டு. எந்த வழியாக வேண்டுமானாலும் ஆட்களை அழைத்து உள்ளே வந்து விடலாம்
இதனால் அந்தி மயங்கியவுடன் குடிமகன்களும் இங்கு வந்து மயங்கி விடுகின்றனர். பாலியல் தொழிலும் தற்போது இங்கு அரங்கேறி வருவதால் இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.