என் மலர்
நீங்கள் தேடியது "Apna"
- அப்னா ஆய்வு குறித்த முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.
- 70 சதவீத முதலாளிகள் தரமான வேலைக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள்.
'அப்னா' என்ற ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட நிறுவன இந்திய முதலாளிகளிடம் விரிவான சர்வே ஒன்றை சமீபத்தில் நடத்தியது.
அதில் நிறுவன முதலாளிகள் எவ்வாறு உற்பத்தித்திறனை அதிகரிக்கிறார்கள், கம்பெனி ஊழியர்களின் சோர்வை தடுப்பதற்கான உத்திகள், வேலை நேரத்தில் ஊழியர்களிடம் ஏற்படும் கவனச்சிதறல்களை குறைத்து கவனத்தை மேம்படுத்தும் உத்திகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வு குறித்த முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.
அதில் கூறி இருப்பதாவது:-
70 சதவீத முதலாளிகள் தரமான வேலைக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். ஊழியர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவதே உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான வழி ஆகும்.
வருகைப்பதிவு மற்றும் நேரத்திற்கு அலுவலகத்திற்கு ஊழியர்கள் வருவதைக் காட்டிலும் நிறுவன அலுவலகங்களில் உகந்த சூழலை உருவாக்குதல்.
கம்பெனி நலனுக்காக நன்றாக உழைக்கும் ஊழியர்களை கண்டறிந்து அவர்களை பாராட்டி, பரிசுகள் கொடுத்தல்.
ஊழியர்கள் ஊக்கமுடன் பணிபுரிய அவர்கள் பார்க்கும் வேலையை அங்கீகரித்தல்.
ஊழியர்களுக்கு முதலாளிகள் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குதல். பணியாளர்களுக்கு ஆரோக்கியமான பணிச்சூழலை உறுதி செய்தல்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.