என் மலர்
நீங்கள் தேடியது "Apollo hospital"
- ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
- ஏ.ஆர்.ரகுமான் மருத்துவர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏ.ஆர்.ரகுமான் மருத்துவர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்ததை தொடர்ந்து பல சர்ச்சைகள் ஏற்பட்டது. இதை அடுத்து உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிவதாக சாய்ரா பானு தெரிவித்து இருந்தார். மேலும் சாய்ரா பானுவுக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கு ஏ.ஆர். ரகுமான் உதவியதாக தகவல்கள் வெளியானது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அண்ணா நகரில் உள்ள இல்லத்தில் வைகோ தங்கி இருந்தார்.
- இன்று மாலை அல்லது நாளை வைகோவுக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குமரி மாவட்ட செயலாளர் வெற்றிவேல் மகள் திருமண விழாவில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் நெல்லை சென்றார்.
நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் அவர் தங்கினார். இரவில் எதிர்பாராதவிதமாக வைகோ கால் தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள்.
இதை தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டார். அண்ணா நகரில் உள்ள இல்லத்தில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் வைகோ இன்று பிற்பகல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். டாக்டர்கள் ஸ்கேன் உள்பட பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள். இன்று மாலை அல்லது நாளை வைகோவுக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
- 2 மாதங்களுக்கு ஒரு முறை அப்பல்லோவில் ராமதாஸ் உடல் பரிசோதனை மேற்கொள்வது வழக்கம்.
- ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான பரிசோதனைகள் நடைபெறுகிறது.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தகவல் வெளியானதை அடுத்து, வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
2 மாதங்களுக்கு ஒரு முறை அப்பல்லோவில் ராமதாஸ் உடல் பரிசோதனை மேற்கொள்வது வழக்கம் என்றும் அதுபோல் தான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான பரிசோதனைகள் முடிந்தவுடன் ராமதாஸ் மருத்துவமனையில் இருந்து சென்று விடுவார் என்று பா.ம.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை வந்திருந்த அவர் ரிசர்வ் வங்கி குடியிருப்பில் தங்கி இருந்தார்.
- அஜீரண கோளாறு காரணமாக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருப்பவர் சக்திகாந்த தாஸ். சென்னை வந்திருந்த அவர் ரிசர்வ் வங்கி குடியிருப்பில் தங்கி இருந்தார்.
நேற்று அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் நலமாக உள்ளார் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜீரண கோளாறு காரணமாக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
- சென்னை விமான நிலையத்தில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு நேரடியாக சென்றார்.
- தாயார் தயாளு அம்மாளின் நலம் குறித்து விசாரிக்க மு.க.அழகிரியும் மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் வயது மூப்பின் காரணமாக கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
உடனடியாக அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு நேரடியாக சென்றார்.
அங்கு தாயார் தயாளு அம்மாளைப் பார்த்துவிட்டு, அவரது உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் சென்றிருந்தார். இதனை தொடர்ந்து தாயார் தயாளு அம்மாளின் நலம் குறித்து விசாரிக்க மு.க.அழகிரியும் மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தார்.
இந்த நிலையில், தாயார் தயாளு அம்மாளின் நலம் குறித்து விசாரிக்க இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வருகை தந்துள்ளார்.
- தயாளு அம்மாள் உடல்நிலையை மருத்துவர் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
- தற்போது தயாளு அம்மாளுக்கு சளி தொல்லை குறைந்து உள்ளதாக தெரிகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல் நலக் குறைவு காரணமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல்நிலையை மருத்துவர் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். தற்போது தயாளு அம்மாளுக்கு சளி தொல்லை குறைந்து உள்ளதாக தெரிகிறது.
அடுத்த சில நாட்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கி அதன் பிறகு தயாளு அம்மாளை வீட்டுக்கு அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் என்று ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக முதல்வராக இருந்த போது உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாட்களுக்கு பிறகு 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார்.
இதைத் தொடர்ந்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அப்போதைய மாநில அரசு சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை 2017-ம் ஆண்டு செப்டம்பரில் நியமித்தது.
இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும், தடை விதிக்கக் கோரியும் ஐகோர்ட்டில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அப்துல்நசீர் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.
விசாரணையின்போது ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது. தேவையில்லாமல் வழக்கு விசாரணைக்கு தங்களது மருத்துவர்களை இழுப்பதாக அப்பல்லோ நிர்வாகம் குற்றம் சாட்டியது.
மேலும் விசாரணை குழுவில் மருத்துவ நிபுணர்கள் இல்லை. மருத்துவர்கள் இல்லாத அந்த ஆணையத்தில் மருத்துவர்களை அழைத்து எப்படி விசாரிக்க முடியும் என்று தெரிவித்தது.

அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஒரு நல்ல மருத்துவமனையாகும். ஒரு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் மீது அவதூறு சொல்வதை ஏற்க இயலாது. ஆணையத்தின் செயல்பாட்டை அப்பல்லோ மருத்துவமனை தடுக்க நினைக்கிறது.
ஆணையம் என்பது உண்மையை கண்டறியும் குழுவே. நிபுணர் குழு அல்ல. நிபுணர்கள் குழுவில்தான் மருத்துவர்கள், நிபுணர்கள் இடம் பெற வேண்டும். ஆவணங்கள், ஆதாரங்களை திரட்டி அரசிடம் கொடுப்பதே ஆணையத்தின் பணியாகும். அதன் பிறகு அரசு நடவடிக்கை எடுக்கும்.
ஜெயலலிதா மரணம் தொடர்பான உண்மையை மக்களுக்கு சொல்வது மிக மிக முக்கியம் ஆகும். மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் விவரம் தெரிய வேண்டும். தேவைப்பட்டால் இந்த ஆணையத்தில் மருத்துவ வல்லுநர்களை சேர்க்கவும் தயாராக இருக்கிறோம்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவுப்படுத்தவும் அரசு தயாராக இருக்கிறது.
புதுவை வருவாய்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் அமைச்சர் ஷாஜகான். நேற்று இரவு இவர், சுய்ப்ரேன் வீதியில் உள்ள தனது வீட்டில் இருந்தார்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து மற்றும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வைத்திலிங்கம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் அமைச்சர் ஷாஜகானின் உடல் நலம் குறித்து அவரது குடும்பத்தினரிடமும், மருத்துவ குழுவினரிடமும் கேட்டறிந்தனர்.
தொடர்ந்து மருத்துவ குழுவினர் அமைச்சர் ஷாஜகானின் உடல்நிலையை கண்காணித்து இன்று காலை வரை சிகிச்சை அளித்து வந்தனர்.
அவரது உடல்நிலை தற்போது நன்றாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். எனினும் அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அமைச்சர் ஷாஜகானை சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல இருப்பதாக தெரிவித்தனர்.
அதன்படி மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ குழுவினருடன் கூடிய சிறப்பு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. காலை 10.45 மணியளவில் அமைச்சர் ஷாஜகான் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அமைச்சர் ஷாஜகானுடன் அவரது மனைவி வகீதா மற்றும் உறவினர்கள் சென்றனர்.
இதற்கிடையே அமைச்சர் ஷாஜகான் மரணம் அடைந்து விட்டதாக இன்று காலை வதந்தி பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் ஷாஜகானின் ஆதரவாளர்கள் புதுவை ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர்.
இதனால் ஆஸ்பத்திரி வளாகமே பரபரப்பும், பதட்டமுமாக இருந்தது. அமைச்சர் ஷாஜகான் நலமுடன் இருப்பதாகவும், அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்த பின்னரே அவர்கள் கலைந்து சென்றனர்.
தி.மு.க.வின் பொருளாளர் துரைமுருகன் உடல் நலக்குறைபாடு காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
துரைமுருகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அக்கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைக்கு நேற்று அப்போலோ டாக்டர்கள் மற்றும் டெக்னீசியன்கள் ஆஜராக வேண்டும் என்று ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
இதை எதிர்த்து அப்போலோ நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அப்போலோ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை சுட்டிக்காட்டி ஆணைய விசாரணையில் இருந்து மருத்துவர்கள் ஆஜராக விலக்கு அளிக்குமாறு அப்போலோ நிர்வாகம் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது.

டாக்டர்கள் ஆஜராவதில் இருந்து விலக்கு கோருவது தொடர்பாக இன்று பிற்பகல் அப்போலோ நிர்வாகம் விளக்கம் தர வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #ArumugasamyCommission #JayaDeathProbe
ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மீண்டும் விசாரணை தொடங்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, அப்பல்லோ டாக்டர்கள் 10 பேருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி இருக்கிறது. இவர்கள் வருகிற புதன்கிழமை அல்லது அதற்கு முன்பு ஆஜராக வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. எனவே, புதன்கிழமை முதல் விசாரணை நடைபெறுவது உறுதியாகி உள்ளது.
அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆஸ்பத்திரி சார்பில் ஒரு மருத்துவ குழு அமைத்து அவர்களிடம் விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. எனவே, சுப்ரீம் கோர்ட்டை அணுக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மீண்டும் ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை தொடங்குகிறது. இதுபற்றி, சசிகலா தரப்பில் குறுக்கு விசாரணை செய்யும் ராஜா செந்தூர் பாண்டியன் கூறியதாவது, “துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் இதுவரை விசாரணைக்கு ஆஜராகவில்லை. தற்போது தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அவருக்கு உடனே சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார். எனவே துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் சம்மன் அனுப்பப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. #JayaDeathprobe #OPanneerselvam
