search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதி
    X

    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதி

    • ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
    • ஏ.ஆர்.ரகுமான் மருத்துவர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.

    பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏ.ஆர்.ரகுமான் மருத்துவர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.

    ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்ததை தொடர்ந்து பல சர்ச்சைகள் ஏற்பட்டது. இதை அடுத்து உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிவதாக சாய்ரா பானு தெரிவித்து இருந்தார். மேலும் சாய்ரா பானுவுக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கு ஏ.ஆர். ரகுமான் உதவியதாக தகவல்கள் வெளியானது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×