என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "appear in court"
- 20 மது பாட்டில்களை பறிமுதல்
- ஜெயிலில் அடைத்தனர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மதுபாட்டில் விற்பனை செய்வதாக போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் வந்தது.
போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் எஸ்.வி.நகரம் மற்றும் பையூர் ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது கள்ளத்தனமாக மது விற்பனை செய்த எஸ்.வி.நகரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (55), பையூர் கிராமத்தை சேர்ந்த கார்த்தி (30) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து, 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட 2 பேர் ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பா.ம.க. சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
- ரெயில் நிலையத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட செயலாளர் அருள் எம்.எல்.ஏ. உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டு ரெயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பா.ம.க. சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட செயலாளர் அருள் எம்.எல்.ஏ. உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டு ரெயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை சேலம் ஒருங்கிணைந்த நீதி மன்றத்தின் உள்ள குற்ற வியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் பங்கேற்க பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் அருள் எம்.எல்.ஏ. வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்தி, பாமக மாநகர் மாவட்ட தலைவர் ராச ரத்தினம் ஆகி யோர் இன்று ஆஜராயினர்.
அவர்களுக்கு வக்கீல்கள் குமார், குலசேகரன், விஜய் ராஜா, சுதாகர், கண்ணன், மோகன்ராஜ் ஆகியோர் வாதாடினர். இதை தொடர்ந்து வழக்கு விசா ரணையை வருகிற 30-ந்தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
- கோபி குற்றவியல் நீதித்துறை நடுவர் விசாரணை்க்கு ஆஜராக வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
- மேலும் வரும் 20-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தொட்டாபாளையத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சரக்கு ஆட்டோ மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கீழ்வாணியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (19) என்பவர் உயிரிழந்தார்.
அதேபோன்று கடந்த 2016-ம் ஆண்டு ஓலப்பாளையம் பிரிவில் மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக தந்தை ஏசுராஜூடன், செல்வி மேரி என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது
அந்த வழியாக வந்த தனியார் நிறுவனத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வேன் மோதியதில் செல்வி மேரியும், ஏசுராஜூம் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த வழக்கு சிறுவலூர் போலீஸ் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கோபி நகராட்சி சுகாதார ஆய்வாளர் சதீஸ், நகராட்சி அதிகாரிகளுடன் கடை வீதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து மகேந்தி்சிங் என்பவருக்கு சொந்தமான கடையில் சோதனை செய்து 3 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அப்போது கடையில் இருந்த உதாராம் என்பவர் சதீசிடம் தகராறு செய்ததுடன், அரசு பணி செய்யவிடாமல் தடுத்து உள்ளார். இது தொடர்பாக சதீஸ் அளித்த புகாரின் பேரில் கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த 3 வழக்குகளிலும் அப்போதைய இன்ஸ்பெக்டர் பாலமுரளிசுந்தரம் விசாரணை அதிகாரியாக இருந்தார். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் பால முரளிசுந்தரம் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பணியாற்றி வருகிறார்.
அதேபோன்று கெட்டிசெவியூரில் கடந்த 2019-ம் ஆண்டு சரக்கு வேன் மோதியதில் சோமசுந்தரம் என்ற விவசாயி உயிரிழந்தார். விபத்து குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக கோபி இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் இருந்தார். தற்போது அவர் ஈரோடு தாலுகா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
அதேபோன்று கடந்த 2015-ம் ஆண்டு பங்களாபுதூர் அருகே உள்ள பனங்காட்டு பள்ளம் என்ற இடத்தில் வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பழனிச்சாமி என்பவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசார ணைக்கு அதிகாரியாக அப்போதைய பங்களாபுதூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கதிர்வேல் இருந்தார்.
தற்போது கதிர்வேல் கோவை மாவட்டம் போத்தனூர் போலீஸ் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
மேற்கண்ட 5 வழக்குகளிலும் சாட்சி விசாரணைக்கு கீழக்கரையில் உள்ள இன்ஸ்பெக்டர் பால முரளிசுந்தரம், போத்தனூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கதிர்வேல், ஈரோடு் தாலுகா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆகியோர் தொடர்ந்து ஆஜராகாத நிலையில்
கோபி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1-ன் மாஜிஸ்திரேட் விஜய் அழகிரி 3 பேருக்கும் சாட்சி விசாரணை்க்கு ஆஜராக வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். மேலும் வரும் 20-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.
- ஆனந்தன் (வயது 45). பிரபல ரவுடியான இவரை கடந்த 5-ந் தேதி நள்ளிரவு மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தது.
- இந்த கொலை குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சேலம்:
சேலம் அருகே குள்ளம்பட்டி காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 45). பிரபல ரவுடியான இவரை கடந்த 5-ந் தேதி நள்ளிரவு மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிசங்கரி தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் காட்டூர் ஆனந்தன் கொலை வழக்கு தொடர்பாக, வலசையூரை சேர்ந்த ரவுடி அன்பழகன், கன்னங்குறிச்சியை சேர்ந்த மணிகண்டன், பள்ளி பட்டியை சேர்ந்த அஜித் குமார், வெள்ளியம்பட்டியை சேர்ந்த சக்திவேல் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் சரண் அடைந்தனர்.
மேலும் இந்த கொலை தொடர்பாக, வலசையூரை சேர்ந்த சீனிவாசன், வெள்ளியம்பட்டியை சேர்ந்த ராஜா, ஹரி சிவன், இவருடைய தம்பி குழந்தைவேல் ஆகியோரை காரிப்பட்டி போலீசார் கைது செய்தனர். சரண் அடைந்த மற்றும் போலீசாரால் கைது செய்யப்பட்டவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் சரண் அடைந்த அன்பழகன், சக்திவேல், மணிகண்டன், அஜித் குமார் ஆகிய 4 பேரையும் காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் தலைமையில் போலீசார் 4 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அதில் 4 பேரும் கொலைக்கான காரணம் குறித்து போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீஸ் விசாரணை இன்று (திங்கட்கிழமை) மாலையுடன் முடிகிறது. அதன்பிறகு அவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
- கடந்த 2016-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தலின்போது, பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்களான, ஓமலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தமிழரசு, மாநில வன்னியர் சங்க செயலாளர் பெரியார் சிலைக்கு அனுமதி பெறாமல் மாலை அணிவித்ததாக போலீசார் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
- வழக்கின் விசாரணையை நீதிபதி அடுத்த மாதம் 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
சேலம்:
கடந்த 2016-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தலின்போது, பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்களான, ஓமலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தமிழரசு, மாநில வன்னியர் சங்க செயலாளர் கார்த்தி, மாநகர மாவட்ட செயலாளர் அருள் எம்.எல்.ஏ, மாநகர் மாவட்ட தலைவர் கதிர்.ராஜரத்தினம் ஆகியோர் பெரியார் சிலைக்கு அனுமதி பெறாமல் மாலை அணிவித்ததாக போலீசார் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், இன்று காலை சேலம் ஜெ.எம்.1 கோர்ட்டில் ஓமலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தமிழரசு (தற்போது தி.மு.க.வில் உள்ளார்), மாநில வன்னியர் சங்க செயலாளர் கார்த்தி ஆகியோர் நீதிபதி கலை
வாணி முன்பு ஆஜரா னார்கள். மூத்த வழக்கறி ஞர்கள் வக்கீல் விஜயராசா, குமார், கண்ணன் ஆகியோர் ஆஜராகினர். வழக்கின் விசாரணையை நீதிபதி அடுத்த மாதம் 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
- சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் உள்ள பிரியா காபி பாரில் டீ குடிக்க சென்றுள்ளார்.
- பலத்த காயம் அடைந்த ஜீவானந்தம் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அன்னதானப்பட்டி:
சேலம் தாதகாப்பட்டி சண்முக நகர் சிங்கார முனியப்பன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 35). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் உள்ள பிரியா காபி பாரில் டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு நபரும், ஜீவானந்தமும் அங்கு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்த சமயம் திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட தாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த ஜீவானந்தம் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அடிதடி பிரிவில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் நிலவாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் அருள் குமார் (24) என்பவரை கைது செய்தார். இதையடுத்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்ததை கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக செங்குன்றம் அருகே செயல்பட்டு வந்த குட்கா குடோனில் சோதனை நடத்தப்பட்டது. இதில் குட்கா விற்பனை தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் சிக்கின.
குடோனில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் ஒவ்வொரு மாதமும் யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது பற்றிய விவரங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டிகே ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளின் பெயரும் குட்கா ஊழலில் தொடர்புபடுத்தி பேசப்பட்டது. நேற்று அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.
தற்போது சிபிஐ விசாரணை வளையத்திற்குள் முன்னாள் வணிக வரித்துறை அமைச்சராக இருந்த பிவி ரமணாவும் வந்துள்ளார். அவரிடம் நேற்று தீவிர விசாரணை நடத்தப்பட்டது. குட்கா ஊழலில் இதுவரையில் ரமணாவின் பெயர் அடிபடாமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் திடீரென ரமணாவுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது.
இன்றும் இருவரும் சிபிஐ அலுவலகத்தில் மீண்டும் ஆஜராக வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதன்படி முன்னாள் அமைச்சர் ரமணா இன்று 2-வது நாளாக சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. குட்கா ஊழல் தொடர்பாக நேற்று ரமணாவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாக இன்றைய விசாரணை அமைந்திருந்தது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந்தேதி மக்கள் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
இதுதொடர்பாக தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், சிப்காட், புதுக்கோட்டை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் மொத்தம் 249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. பின்னர் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் சி.பி.ஐ. சூப்பிரண்டு சரவணன் தலைமையில் துணை சூப்பிரண்டு ரவி மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு தூத்துக்குடிக்கு வந்தது. இந்த குழுவினர் தொடர்ந்து 3 நாட்கள் விசாரணை நடத்துகின்றனர்.
தற்போது சம்பவம் நடந்த இடங்களில் ஆய்வு மற்றும் ஆவணங்கள் சேகரிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த போலீஸ் நிலையங்களில் ஆவணங்களை ஆய்வு செய்தனர். சம்பவ விவரங்களையும் கேட்டறிந்தனர்.
நேற்று சூப்பிரண்டு சரவணன், துணை சூப்பிரண்டு ரவி ஆகியோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலையிடம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்த இடம், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்ட இடம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டனர்.
தொடர்ந்து தூத்துக்குடி இந்திய உணவுக்கழக குடோன் ரவுண்டானா உள்ளிட்ட துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதேபோன்று சம்பவம் தொடர்பாக புகார் அளித்த துணை தாசில்தார், தாசில்தார் ஆகியோரையும் வரவழைத்து சம்பவ விவரங்களை கேட்டறிந்தனர். இன்றும் தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது துப்பாக்கி சூடு சம்பவத்தன்று பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி. ஆகியோர் சி.பி.ஐ. முன்பு ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து துணை தாசில்தார் சேகரும் சி.பி.ஐ. முன்பாக ஆஜராகி விளக்கம் அளித்தார். மேலும் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்றும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த இடங்களை பார்வையிட்டனர். பின்னர் பாதிக்கப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தினார்கள். #ThoothukudiProtest #SterliteProtests #ThoothukudiShooting #CBI
சென்னை:
தமிழக அரசு கடந்த 2013-ம் ஆண்டு குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்தது. இந்த தடையை மீறி மாதவராவ், சீனிவாசராவ் ஆகியோர் குட்காவை தமிழகம் முழுவதும் விற்பனை செய்தனர். இதற்காக அவர்கள், தமிழக அமைச்சர்கள், போலீஸ் டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி ஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ. போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி, சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து, அமைச்சர், டிஜிபி, முன்னாள் போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
பின்னர், குட்கா வியாபாரிகள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, அரசு அதிகாரிகள் பாண்டியன், செந்தில் முருகன் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். பின்னர், இவர்களை சி.பி.ஐ. கோர்ட்டில் கடந்த 10-ந்தேதி (திங்கட்கிழமை) ஆஜர்படுத்தி, 4 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதிப்பெற்றனர்.
இந்த நிலையில், விசாரணையை முடித்து, 5 பேரையும் இன்று காலையில் கோர்ட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அவர்கள் அனைவரையும் வருகிற 20-ந்தேதி வரை கோர்ட்டு காவலில் சிறையில் அடைக்க நீதிபதி திருநீலபிரசாத் உத்தரவிட்டார்.
இதன்பின்னர், சி.பி.ஐ. போலீசார், புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், ‘மாதவராவ், சீனிவாசராவ் ஆகியோரை மேலும் 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை தற்போது நடந்து வருகிறது.
இதற்கிடையில் செந்தில்குமார் உள்பட 3 பேரையும் புழல் சிறையில் அடைக்க, போலீசார் அழைத்து சென்றனர். #gudkacorruption #cbi
சென்னை:
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
அதில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதுவரை 45-க்கும் மேற்பட்டோர் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் ஜெயலலிதாவின் பள்ளித் தோழி பதர்சயீத், போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் ஆகியோர் இன்று விசாரணை கமிஷன் முன் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டது.
அதை தொடர்ந்து இன்று 2 பேரும் விசாரணை கமிஷன் முன் ஆஜராகினர். பதர்சயீத் 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ. ஆக இருந்தார். இவர் ஜெயலலிதாவின் பள்ளி பருவ தோழி ஆவார்.
எனவே அவரது உடல் நலம் குறித்த தகவல்களை விசாரணை கமிஷன் முன் வழங்கினார்.
ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்தபோது கடந்த 2011-ம் ஆண்டில் பொன் மாணிக்கவேல் உளவுப்பிரிவு டி.ஐ.ஜி. ஆக இருந்தார். அவரிடமும் ஜெயலலிதா உடல் நலம் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர் பதில் அளித்தார். #JayalalithaDeath
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்