என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Apple"

    • ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புது ஐபேட் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
    • சமீபத்தில் தான் ஆப்பிள் புதிய ஐபேட் ப்ரோ மற்றும் ஐபேட் மாடல்களை அறிமுகம் செய்து இருந்தது.

    ஆப்பிள் நிறுவனம் 16 இன்ச் அளவில் பெரிய ஐபேட் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புது ஐபேட் மாடல் அடுத்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகாகும் என தெரிகிறது. இது தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடலை விட அளவில் பெரியதாக இருக்கும். புதிய டேப்லெட் மாடல் ஐபேட் மற்றும் மேக்புக் மாடல்களிடையே நிலைநிறுத்தப்படும்.

    சமீபத்தில் தான் ஐபேட் (10th Gen), M2 பிராசஸர் கொண்ட ஐபேட் ப்ரோ மாடல்களை ஆப்பிள் அறிமுகம் செய்து இருந்தது. புதிய ஐபேட் மாடல் அடுத்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய தகவல்களின் படி 16 இன்ச் ஐபேட் மாடல் அறிமுகமாகும் பட்சத்தில் ஆப்பிள் இதுவரை உற்பத்தி செய்ததில் பெரிய டேப்லெட் மாடலாக இது அமையும். கிராபிக் டிசைனர்கள் மற்றும் கலைஞர்களுக்கு பயனுள்ள சாதனமாக 16 இன்ச் ஐபேட் இருக்கும்.

    புதிய 16 இன்ச் ஐபேட் மாடலை ஆப்பிள் எவ்வாறு தனது சாதனங்களுடன் நிலைநிறுத்தும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. புதிய மாடல் ஐபேட் ப்ரோ என்று அழைக்கப்படுமா அல்லது ஐபேட் என்றே அழைக்கப்படுமா என்பதும் மர்மமாகவே இருக்கிறது. ஆப்பிள் உருவாக்கும் பெரிய ஐபேட் மாடல் டேப்லெட் மற்றும் லேப்டாப் மாடல்கள் இடையே உள்ள இடைவெளியை மேலும் சிறியதாக்கும்.

    • இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விற்பனை பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
    • வருடாந்திர அடிப்படையில் ஐபோன் விற்பனை உலகளவில் பலமடங்கு அதிகரித்து இருக்கிறது.

    ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் இந்திய ஐபோன் விற்பனையில் வரலாறு காணாத வருவாய் ஈட்டப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் ஐபோன் விற்பனை இருமடங்கு வளர்ச்சியை பதிவு செய்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    உலகளவில் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் 90.1 மில்லியன் டாலர்கள் வருவாயை ஈட்டி இருக்கிறது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது எட்டு சதவீதம் வரை அதிகம் ஆகும். ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் 394.3 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. இது முந்தைய ஆண்டை விட எட்டு சதவீதம் அதிகம் ஆகும்.

    "ஒவ்வொரு பகுதி வருவாயிலும் நாங்கள் புதிய சாதனையை இந்த காலாண்டில் எட்டியிருக்கிறோம். இந்தியா, தென் கிழக்கு ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற வளரும் நாடுகளில் தொடர்ந்து இருமடங்கு வளர்ச்சியை பதிவு செய்து வருகிறோம்," என ஆப்பிள் நிறுவனத்தில் கால் தெரிவித்தார்.

    "புதிய ஐபோன் 14 சீரிஸ் பல்வேறு தலைசிறந்த தொழில்நுட்பம் மற்றும் மிக முக்கிய பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஐபோன் 14 சீரிஸ் உற்பத்தியை மேற்கொள்வதில் சுவாரஸ்ய அனுபவத்தை வழங்குகிறது," என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. புதிய ஐபோன் 14 உற்பத்தி சென்னை அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் நடைபெற்று வருகிறது.

    • ஆப்பிள் நிறுவனம் விரைவில் புது மேக் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • ஆண்டு துவக்கத்தில் புது சாதனங்களை அறிமுகம் செய்வதை ஆப்பிள் அரிதாக மேற்கொள்ளும் நடவடிக்கை ஆகும்.

    ஆப்பிள் நிறுவனம் புதிதாக மேக் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. புது மேக் மாடல்கள் அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே அறிமுகம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மார்க் குர்மேன் வெளியிட்டு இருக்கும் சமீபத்திய செய்தி குறிப்பில், அடுத்த தலைமுறை ஆப்பிள் மேக் மாடல்கள் அடுத்த ஆண்டு துவக்கம் வரை அறிமுகம் செய்யப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக விடுமுறை காலக்கட்டத்திற்காக ஆப்பிள் மேலும் சில சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத வாக்கில் புது சாதனங்களை ஆப்பிள் மிகவும் அரிதாகவே அறிமுகம் செய்கிறது. அந்த வகையில் புது மேக் மாடல்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். ஒவ்வொரு முறையும் மார்ச் மாதத்தில் மேக் மாடல்களை ஆப்பிள் அறிமுகம் செய்து இருக்கிறது.

    இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் மேக் ஸ்டூடியோ மாடலை அறிமுகம் செய்தது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் M2 சார்ந்த 14 இன்ச் மற்றும் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்கள், மேக்ஒஎஸ் 13.3 மற்றும் ஐஒஎஸ் 16.3 அப்டேட்டுடன் அறிமுகம் செய்யப்படலாம். இந்த மென்பொருள் அப்டேட்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாத துவக்கத்திலோ வெளியிடப்படலாம்.

    முன்னதாக ஆப்பிள் வருவாய் விளக்க கூட்டத்தில் விடுமுறை காலத்தை ஒட்டி சில சானங்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதை உணர்த்தும் தகவல்களை ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்து இருந்தார். மேலும் புது மேக் மாடல்கள் அடுத்த ஆண்டு துவக்கம் வரை அறிமுகம் செய்யப்படாது என்றே தகவல் வெளியாகி உள்ளது.

    • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உள்பட பல்வேறு சாதனங்கள் சீனா ஆலையில் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
    • ஐபோன் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவன சாதனங்களின் உற்பத்தியை மெல்ல சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஆப்பிள் மாற்றி வருகிறது.

    சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஐபோன் உற்பத்தி சரியும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் உற்பத்தி இலக்குகளை குறைப்பது பற்றி பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. சீனாவில் உள்ள உலகின் மிகப்பெரிய உற்பத்தி ஆலையான செங்சௌ-வில் அடுத்த மாதத்திற்கான ஐபோன் உற்பத்தி 30 சதவீதம் வரை குறையும் என தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த ஆலையில் குறையும் ஐபோன் உற்பத்தியை ஓரளவு ஈடுசெய்ய ஷென்சென் ஆலையில் பாக்ஸ்கான் நிறுவனம் உற்பத்தியை அதிகப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஷென்செனில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். எனினும், கொரோனாவை கட்டுக்குள் வைக்க பல பணியாளர்கள் சில நாட்களுக்கு முன் ஆலையை விட்டு வெளியேறினர்.

    உலகளவில் மின்சாதன பொருட்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், இது போன்ற இடர்பாடான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர திட்டமிட்டு வருவதாக பாக்ஸ்கான் நிறுவனம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதுதவிர மற்ற ஆலைகளுடன் தொடர்பு கொண்டு உற்பத்தி சரிவை முடிந்த வரை ஈடுகட்ட முயற்சித்து வருவதாக தெரிவித்து உள்ளது.

    உற்பத்தி சரிவு குறித்து ஆப்பிள் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. பாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய உற்பத்தியாளராக விளங்கி வருகிறது. செங்கௌ ஆலையில் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையாக மிக கடுமையான கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

    • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் சர்வதேச சந்தையில் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டன.
    • ஐபோன் 14 சீரிசில் மொத்தம் நான்கு மாடல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் டாப் எண்ட் மாடலாக ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் மாத வாக்கில் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஐபோன் 14 சீரிசில் விலை உயர்ந்த மாடலாக ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், டிசைனர்கள் உருவாக்கி இருக்கும் புதிய ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் அதன் விலை காரணமாக ஆடம்பர பொருளாக மாறி இருக்கிறது.

    டிசைனர்கள் உருவாக்கி இருக்கும் புது ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலின் பின்புறத்தில் ரோலெக்ஸ் டேடோனா வாட்ச் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆடம்பர ஸ்மார்ட்போன் மற்றும் அக்சஸரீக்களை உருவாக்கி வரும் கேவியர் நிறுவனம் புதிய ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்-ஐ ஆடம்பர பொருளாக மாற்றியுள்ளது. இதன் விலை 1 லட்சத்து 34 ஆயிரத்து 250 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 கோடியே 10 லட்சத்து 80 ஆயிரத்து 444 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலை 128 ஜிபி மாடலுக்கானது ஆகும்.

    இதன் 256 ஜிபி விலை 1 லட்சத்து 34 ஆயிரத்து 580 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 கோடியே 11 லட்சத்து 06 ஆயிரத்து 550 என்றும் 512 ஜிபி விலை 1 லட்சத்து 35 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 கோடியே 11 லட்சத்து 41 ஆயிரத்து 347 என்றும் 1 டிபி மாடல் விலை 1 லட்சத்து 35 ஆயிரத்து 420 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 கோடியே 11 லட்சத்து 77 ஆயிரத்து 092 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலின் பின்புறம் PCD கோட்டிங், ரோலெக்சில் பிளாக் டயல்கள், கேஸ் மற்றும் பிரேஸ்லெட்கள் உள்ளன. இந்த ஐபோனின் பின்புறம் ரோலெக்ஸ் காஸ்மோகிராப் டேடோனா வாட்ச் உள்ளது. இதில் 40mm எல்லோ கோல்டு வாட்ச் பேஸ் மற்றும் டைமண்ட் அக்செண்ட்கள் உள்ளன.

    • ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் மாத வாக்கில் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது.
    • இந்தியாவில் ஐபோன் 14 மாடலுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை செப்டம்பர் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஐபோன் 14 மாடலில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏ15 பயோனிக் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. ஃபார் அவுட் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 14 மாடலுக்கு ஜியோமார்ட் விற்பனை மையங்களில் அசத்தல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய ஐபோன் 14 மாடலின் விலை ரூ. 79 ஆயிரத்து 900 என துவங்குகிறது. எனினும், ஜியோமார்ட் விற்பனையகத்தில் ஐபோன் 14 விலை ரூ. 77 ஆயிரத்து 900 என மாற்றப்பட்டு இருக்கிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகள் மற்றும் மாத தவணை முறையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வரை கூடுதல் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    அந்த வகையில் ஐபோன் 14 (128 ஜிபி) மாடலின் விலை ரூ. 7 ஆயிரம் வரை குறைந்துவிடும். ஆப்லைன் விற்பனை மையத்தில் இந்த சலுகை வழங்கப்படும் நிலையில், ஜியோமார்ட் ஆன்லைனில் ஐபோன் 14 (128 ஜிபி) விலை ரூ. 79 ஆயிரத்து 900 என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 சீரிசில்- ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இதில் ஐபோன் 14 மாடல் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி போன்ற மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் புளூ, பர்பில், மிட்நைட், ஸ்டார்லைட் மற்றும் ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    ஐபோன் 14 (256 ஜிபி) மாடலின் விலை ரூ. 89 ஆயிரத்து 900 என்றும் 512 ஜிபி விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 900 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஐபோன் 14 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே, ஆப்பிள் ஏ15 பயோனிக் பிராசஸர், அதிகபட்சம் 512 ஜிபி மெமரி, 12MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP ஆட்டோபோகஸ் செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோன் வெளியிடாதது பற்றி சாம்சங் சமீபத்தில் கேலி விளம்பரம் வெளியிட்டு இருந்தது.
    • ஆப்பிள் நிறுவனத்தின் போல்டபில் ஐபோன் பற்றிய விவரங்கள் பல ஆண்டுகளாக வெளியாகி வந்தன.

    மடிக்கக்கூடிய ஐபோன் வெளியிடவில்லை என்பதை கூறி ஆப்பிள் நிறுவனத்தை கேலி செய்யும் வகையில் சாம்சங் சமீபத்தில் தான் விளம்பரம் வெளியிட்டு இருந்தது. இதற்கு ஆப்பிள் தரப்பில் எந்த விதமான பதிலும் அளிக்கப்படவில்லை. எனினும், சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் மடிக்கக்கூடிய ஐபோன் உருவாக்கி அசத்தி இருக்கிறார்.

    சீனர் உருவாக்கிய போல்டபில் ஐபோன் மாடல் ஐபோன் V என அழைக்கப்படுகிறது. இது ஒரு கிளாம்ஷெல் வகையிலான போல்டபில் போன் ஆகும். மடிக்கக்கூடிய ஐபோன் பற்றிய வீடியோ சீனாவை சேர்ந்த வீடியோ தளமான பிலிபிலியில் வெளியிடப்பட்டு இருக்கிறது. வீடியோவில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் ஏராளமான பாகங்கள் இடம்பெற்றுள்ளன.

    அதன்படி கேலக்ஸி Z ப்ளிப் மற்றும் மோட்டோ ரேசர் போன்ற மாடல்களில் இருப்பதை போன்று ஐபோனில் உள்ள பாகங்களை இரண்டாக பிரித்து அவற்றை ஒன்றாக இணைத்துள்ளார். போனின் கீழ்புறத்தில் மதர்போர்டு, ரேம், மெமரி போன்ற பாகங்களும், மேல்பாதியில் பேட்டரி, கேமரா சென்சார் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.

    நீண்ட கால உழைப்பின் பலனாக இந்த மடிக்கக்கூடிய ஐபோனை சீனர் உருவாக்கி இருக்கிறார். எனினும், ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன் ப்ரோடோடைப் நிலையிலேயே இருப்பதாக தெரிகிறது. இவர் உருவாக்கி இருக்கும் போல்டபில் ஐபோனில் மடிக்கக்கூடிய ஸ்கிரீன், கேமரா மற்றும் இதர அம்சங்கள் உள்ளன. மேலும் இவை அனைத்தும் சீராக இயங்குகின்றன.

    • ஆப்பிள் நிறுவன ஐபோன் மாடல்களுக்கு 5ஜி சேவையை பயன்படுத்துவதற்கான அப்டேட் பற்றி புது தகவல் வெளியாகி உள்ளது.
    • ஐஒஎஸ் பீட்டா வெர்ஷனை பயன்படுத்தி வருவோருக்கு புதிய தலைமுறை 5ஜி தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் 16.2 பீட்டா வெர்ஷனை உலகம் முழுக்க வெளியிட்டு வருகிறது. இந்திய ஐபோன் பயனர்களுக்கு இந்த அப்டேட் 5ஜி கனெக்டிவிட்டியை வழங்குகிறது. இந்தியாவில் 5ஜி சப்போர்ட் வெளியிடும் நிறுவனங்களில் ஆப்பிள் தற்போது இணைந்து இருக்கிறது. முன்னதாக சாம்சங், சியோமி, ரியல்மி, ஒப்போ, ஒன்பிளஸ் மற்றும் மோட்டோரோலா போன்ற நிறுவனங்களும் தங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி சப்போர்ட் வழங்கின.

    ஐஒஎஸ் பீட்டா வெர்ஷன் பயன்படுத்தி வருவோர் புதிய அப்டேட் இன்ஸ்டால் செய்து 5ஜி சேவையை பயன்படுத்த முடியும். முன்னதாக இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் 5ஜி தொழில்நுட்பத்தை வழங்குவதாக ஆப்பிள் அறிவித்து இருந்தது. தற்போது ஐஒஎஸ் 16.2 அப்டேட் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பயனர்களிடம் இருந்து கருத்து கேட்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.

    ஆப்பிள் தேர்வு செய்த பயனர்கள் புதிய ஐஒஎஸ் 16.2 பீட்டா 2 வெர்ஷன் வழங்கப்படுகிறது. இந்தியாவில் பீட்டா திட்டத்தில் இணைந்து இருக்கும் பயனர்கள் 5ஜி சேவையை அனுபவிக்க முடியும். தற்போது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவையை வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக இந்த இரு நிறுவன சேவைகளை பயன்படுத்தி வரும் பயனர்கள் 5ஜி சேவையை பயன்படுத்தலாம். இதற்கு பயனர் வசிக்கும் பகுதியில் 5ஜி ஏற்கனவே வெளியிடப்பட்டு இருப்பது அவசியம் ஆகும்.

    தற்போது ஐபோன் 12 சீரிஸ், ஐபோன் 13 சீரிஸ், ஐபோன் SE 2022 மற்றும் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களில் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. ஐஒஎஸ் 16.2 பீட்டா இன்ஸ்டால் செய்த பின் ஐபோன்களின் செட்டிங்ஸ் -- வாய்ஸ் & டேட்டா -- 5ஜி ஆன், 5ஜி ஆட்டோ மற்றும் 4ஜி/எல்டிஇ போன்ற ஆப்ஷன்கள் காணப்படுகின்றன.

    • ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய ஐபோன் 14 சீரிசை செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்தது.
    • புதிய ஐபோன் 14 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED பேனல் மற்றும் மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ஐபோன் 14 வாங்க திட்டமிடுகின்றீர்கள் எனில், இந்த சலுகையை தவற விடாதீர்கள். ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 14 மாடலுக்கு அசத்தலான வங்கி சலுகைகள் மற்றும் எக்சேன்ஜ் ஆஃபர்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி இரு சலுகைகளை சேர்த்து ஐபோன் 14 வாங்கும் போது அதிகபட்சம் ரூ. 20 ஆயிரம் வரை சேமிக்க முடியும்.

    ப்ளிப்கார்ட் தளத்தில் புதிய ஐபோன் 14 விலை ரூ. 79 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ஐபோன் 14 மாடலின் 128 ஜிபி வேரியண்டிற்கானது ஆகும். இதுதவிர ஐபோன் 14 வாங்கும் ஹெச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் பழைய ஐபோன் வைத்திருப்போர் இந்த தொகையை முழுமையாக செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

    தற்போது ஐபோன் 14 விலை ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 79 ஆயிரத்து 900 ஆகும். ஹெச்டிஎப்சி வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இத்துடன் பழைய ஐபோன் வைத்திருப்பவர்கள் ஐபோன் 14 விலையை மேலும் குறைக்க முடியும். ஐபோன் 11 மாடலை எக்சேன்ஜ் செய்யும் போது ப்ளிப்கார்ட் ரூ. 15 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்குகிறது. அந்த வகையில் இரு சலுகைகளை சேர்த்தால் ஐபோன் 14 விலை ரூ. 19 ஆயிரம் வரை குறைந்துவிடும்.

    இதோடு ஐபோன் 12 வைத்திருப்பவர்கள் அதனை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 19 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்த வகையில் இரு சலுகைகளை சேர்த்தால் ஐபோன் 14 விலையில் ரூ. 24 ஆயிரம் வரை குறையும். எனினும், எக்சேன்ஜ் சலுகைக்கு பழைய ஐபோன் சீராக வேலை செய்யும் நிலையில் இருப்பது அவசியம் ஆகும்.

    ஐபோன் 14 அம்சங்கள்:

    ஆப்பிள் ஐபோன் 14 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள், 60Hz ரிப்ரெஷ் ரேட், ஏ15 பயோனிக் சிப், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 14 மாடல் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் ஐஒஎஸ் 16 வழங்கப்பட்டு இருக்கிறது.

    கனெக்டிவிட்டிக்கு 5ஜி, வைபை, டூயல் சிம், ப்ளூடூத், ஜிபிஎஸ், லைட்னிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12MP வைடு ஆங்கில் கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் டால்பி விஷன் வீடியோ ரெக்கார்டிங் வசதி உள்ளது.

    • ஆப்பிள் நிறுவத்தின் ஆப்பிள் வாட்ச் மாடல் சர்வதேச ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் அதிகம் விற்பனையாகி வருகிறது.
    • ஆப்பிள் வாட்ச் மாடல்களில் உள்ள பாதுகாப்பு அம்சம் பற்றிய உண்மை சம்பவங்கள் உலகம் முழுக்க நடைபெற்று வருகின்றன.

    ஆப்பிள் வாட்ச் மாடல்கள் அதனை அணிந்திருப்போர் உயிரை காப்பாற்றியதாக உலகம் முழுக்க ஏராளமான சம்பவங்கள் நடைபெறுவதாக வழக்கமான ஒன்று தான். அந்த வரிசையில், இந்தியாவில் ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. ஆப்பிள் வாட்ச் அணிந்திருந்த ஒருத்தர் 150 அடி ஆழமான பகுதியில் தவறி விழுந்திருக்கிறார். இவர் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் 7 மூலம் அவரது குடும்பத்தார் அவரை மீட்டுள்ளனர்.

    இந்திய இளைஞர் ஸ்மித் மேத்தா என்பவர் ஆழமான பகுதியில் தவறி விழுந்திருக்கிறார். இவரை தொடர்பு கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தான், அவர் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் அவரை மீட்க உதவி இருக்கிறது. மிகவும் கோரமான ஆபத்தில் சிக்கி, ஆப்பிள் வாட்ச் மூலம் காப்பாற்றப்பட்ட சம்பவத்தை அந்த இளைஞர் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கிற்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்து இருந்தார்.

    மகாராஷ்டிராவை சேர்ந்த ஸ்மித் மேத்தா தான் வசிக்கும் பகுதியில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். மழை பெய்து கொண்டிருந்த போது அவர் தனது நண்பர்களுடன் மலை ஏற்றத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இவருடன் மூன்று நண்பர்கள் சென்று இருந்தனர். மலை ஏற்றம் முடிந்து திரும்பி கொண்டிருந்த போது பள்ளத்தாக்கில் தவறி விழுந்து விட்டார்.

    எனினும், கீழே விழும் போது மரம் மற்றும் பாறை மீது விழுந்ததில் எலும்பு முறிவுகளுடன் உயிர் பிழைத்து இருக்கிறார். கடுமையான வலியில் தவித்துக் கொண்டிருந்த இளைஞரை அவரது நண்பர்கள் அவர் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் உதவியுடன் காப்பாற்றினர். பின் காயமுற்ற இளைஞருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தனக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்தமைக்காக டிம் குக், ஸ்மித் மேத்தாவுக்கு பாராட்டு தெரிவித்தார்.

    • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களுக்கு அவ்வப்போது அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்படுவது வாடிக்கையான விஷயம் தான்.
    • முன்னணி ஆன்லைன் வலைதளங்கள் துவங்கி, மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் பலரும் ஐபோன்களுக்கு திடீர் சலுகை அறிவிப்பர்.

    இந்திய சந்தையில் ஐபோன் 12 மாடலுக்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னணி ஆன்லைன் விற்பனையாளரான ப்ளிப்கார்ட் ஐபோன் 12 ஸ்மார்ட்போனிற்கு ரூ. 7 ஆயிரத்து 130 அதிரடி தள்ளுபடி வழங்குகிறது. முன்னதாக ஐபோன் 12 மாடல் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 79 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது ஐபோன் 12 மாடலுக்கு தள்ளுபடி மட்டுமின்றி எக்சேன்ஜ் மற்றும் வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது.

    ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 12 (64 ஜிபி) விலை தற்போது ரூ. 48 ஆயிரத்து 999 என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. முன்னதாக நவம்பர் 15 ஆம் தேதி ஐபோன் 12 விலை ரூ. 56 ஆயிரத்து 129 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்திய சந்தையில் 2020 அக்டோபர் மாத வாக்கில் ஐபோன் 12 மாடல் ரூ. 79 ஆயிரத்து 990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    தற்போது இதன் விலை ரூ. 48 ஆயிரத்து 999 என குறைக்கப்பட்டு இருக்கிறது. தள்ளுபடி மட்டுமின்றி ஐபோன் 12 வாங்குவோர் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்து அதிகபட்சம் ரூ. 17 ஆயிரத்து 500 வரை தள்ளுபடி பெறலாம். எக்சேன்ஜ் மதிப்பு ஒவ்வொரு ஸ்மார்ட்போன் மாடல் மற்றும் அது எந்த அளவுக்கு சீராக இயங்குகிறது என்பதை பொருத்து வேறுபடும்.

    இவை தவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 64 ஜிபி மட்டுமின்றி ஐபோன் 12 128 ஜிபி, 256 ஜிபி மாடல்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இரு மாடல்களின் விலை முறையே ரூ. 53 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 61 ஆயிரத்து 999 என மாற்றப்பட்டு இருக்கிறது.

    ஐபோன் 12 அம்சங்கள்:

    அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 12 மாடலில் 6.1 இன்ச் OLED பேனல், சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, செராமிக் ஷீல்டு கிளாஸ், ஏ14 பயோனிக் பிராசஸர், டூயல் 12MP கேமரா சென்சார்கள், 12MP செல்ஃபி கேமரா, IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. ஐபோன் 12 மாடலுடன் யுஎஸ்பி சை டு லைட்னிங் கேபிள் வழங்கப்படுகிறது.

    • ஆப்பிள் நிறுவனத்தின் குறைந்த விலை ஐபோன் சீரிசாக ஐபோன் SE விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • ஆப்பளின் புதிய தலைமுறை ஐபோன் SE மாடல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் SE சீரிஸ் மூலம் பட்ஜெட் விலை ஐபோன்களை விற்பனை செய்து வருகிறது. இதுவரை ஐபோன் SE பிரிவில் மூன்று மாடல்களை ஆப்பிள் அறிமுகம் செய்து இருக்கிறது. தற்போது வெளியாக இருக்கும் புதிய மாடல் ஐபோன் SE 4-இல் சில மாற்றங்களை செய்ய ஆப்பிள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அதன்படி ஆப்பிள் ஐபோன் SE 4 அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகமாகும் என்றும் இது ஃபிளாக்‌ஷிப் கில்லர் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் இது ஏராளமான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு சவால் விடும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் ஐபோன் SE மாடல்கள் கொடுக்கும் விலைக்கு ஏற்ற அம்சங்களை கொண்டிருந்தன. இவற்றின் விற்பனையும் அதிகளவிலேயே நடைபெற்று வந்தது.

    தற்போதைய தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் இந்த நிலை விரைவில் மாறும். அதன்படி புதிய ஐபோன் SE சீரிஸ் மேம்பட்ட டிசைன் கொண்டிருக்கும் என்றும் இதன் தோற்றம் ஐபோன் XR போன்று காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய ஐபோன் SE மாடலில் ஃபேஸ் ஐடி அம்சம் வழங்கப்படலாம்.

    இத்துடன் 6.1 இன்ச் 720 பிக்சல் LCD டிஸ்ப்ளே, IP67 சான்று, 3000 எம்ஏஹெச் பேட்டரி, 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 7.5 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மாடலில் ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய ஏ16 பயோனிக் சிப்செட் வழங்கப்படலாம். இதே பிராசஸர் ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ சீரிசில் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 12MP பிரைமரி கேமரா, 7MP செல்ஃபி கேமரா வழங்கப்படலாம்.

    ×