search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Apple Car"

    • எலெக்ட்ரிக் கார் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்ததாக தகவல்.
    • திட்ட இயக்குனர் கெவின் லின்ச் கூட்டத்தில் கலந்து கொண்டதாக தகவல்.

    ஆப்பிள் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார் திட்டத்தை ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆப்பிள் நிறுவனம் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எலெக்ட்ரிக் கார் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    ஊழியர்களுடன் நிறுவனத்திற்குள் நடைபெற்ற கூட்டத்தில் ஆப்பிள் கார் திட்டம் ரத்து செய்யப்படுதாக அதன் தலைமை நிர்வாக அலுவலர் ஜெஃப் வில்லியம்ஸ் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் போது திட்ட இயக்குனர் கெவின் லின்ச் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த திட்டத்தில் பணியாற்றி வந்த 2 ஆயிரத்திற்கும் அதிக டெக்னிஷியன்கள் ஆப்பிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவுக்கு மாற்றப்படுவர் என தெரிகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த திட்டங்களில் அதிக கவனம் செலுத்த முடியும். புதிய தகவல் குறித்து ஆப்பிள் சார்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    ஆப்பிள் கார் திட்டம் ரத்து செய்யப்படுவதற்கான மிகப்பெரிய காரணம், சந்தையில் தற்போது ஆப்பிள் சாதனங்கள் ஈட்டி வரும் லாபத்தை புதிய கார் ஈட்டுமா என்பதும், காரை வெளியிடுவதற்கு மட்டுமே இன்னமும் பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்பதும் தான் என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக வெளியான தகவல்களின் படி ஒருவேளை ஆப்பிள் கார் வெளியாகும் பட்சத்தில் அதன் விலை நிச்சயம் 1 லட்சம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 83 லட்சம் வரையிலான விலையை கொண்டிருக்கும். இத்தனை விலை கொடுத்து காரை வாங்குவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனால் சந்தையில் இது எதிர்பார்த்த லாபத்தை ஈட்டும் வாய்ப்புகள் குறைவு தான் என ஆப்பிள் நிர்வாக குழு உறுப்பினர்கள் கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    ×