search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Apple Cider Vinegar"

    • இளம் வயதினரும் பாதிப்பை எதிர்கொள்கிறார்கள்.
    • இஞ்சியும் மூட்டு வலியை விரட்டும் ஆற்றல் கொண்டது.

    மூட்டு வலி வயதானவர்களைத்தான் பாதிக்கும் என்ற நிலைமை மாறிவிட்டது. இளம் வயதினரும் பாதிப்பை எதிர்கொள்கிறார்கள். குறிப்பாக, ஜாக்கிங், ரன்னிங் பயிற்சி மேற்கொள்ளும் இளைஞர்களும், உடற்பயிற்சிக்காக சைக்கிள் ஓட்டும் இளைஞர்களும், மூட்டு வலி சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள். எலும்பு மண்டல அமைப்பு பலவீனமாக இருப்பதே மூட்டுவலிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. ஆரம்ப நிலையிலேயே ஒரு சில பழக்கவழக்கங்களை கடைப்பிடித்து வந்தால் மூட்டுவலி பிரச்சினை தலைதூக்காமல் பார்த்துக்கொள்ளலாம். அதற்கு இளைஞர்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள்:

    * ஆப்பிள் சிடர் வினிகர் மூட்டுவலியை குறைக்கும் தன்மை கொண்டது. அதனுடன் தேங்காய் எண்ணெய்யையும் சம அளவு

    சேர்த்து மூட்டு பகுதிகளில் தடவி மசாஜ் செய்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

    * இஞ்சியும் மூட்டு வலியை விரட்டும் ஆற்றல் கொண்டது. இஞ்சி எண்ணெய்யை தினமும் இரண்டு முறை மூட்டுகளில் தடவி வந்தால் போதும். நல்ல மாற்றம் தெரியும்.

    * இஞ்சியை டீயாகவும் பருகிவரலாம். இஞ்சியை கொதிக்க வைத்து, அந்த நீரை வடிகட்டி அதனுடன் தேன், எலுமிச்சை சாறு கலந்து ருசிக்கலாம்.

    * இஞ்சியுடன் மஞ்சளையும் சேர்த்தும் பயன்படுத்தலாம். இரண்டையும் நீரில் கால் மணி நேரம் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அந்த நீரை வடிகட்டி, அதனுடன் தேன், எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.

    * பாலுடன் மஞ்சள் தூள், சர்க்கரை கலந்தும் இரவில் பருகி வரலாம். தொடர்ந்து பருகிவந்தால் மூட்டுவலி பிரச்சினை நிரந்தரமாக நீங்கிவிடும்.

    * எலுமிச்சை சாறை நீரில் கலந்தோ, எலுமிச்சை டீயாகவோ பருகி வரலாம். இதுவும் மூட்டுவலிக்கு நிவாரணம் தரக்கூடியது.

    • வயிற்றில் உள்ள அழுக்குகளை சுத்தப்படுத்த உதவும்.
    • வயிற்றில் நல்ல பாக்டீரியாக்கள் அதிகரிக்க உதவுகிறது.

    எப்போதுமே நம்முடைய உணவில் நார்ச்சத்து அதிகமாக இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படி நார்ச்சத்து அதிகமாக இருந்தால் அது வாயுத்தொல்லை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதோடு, வயிற்றில் உள்ள அழுக்குகளை சுத்தப்படுத்த உதவும். இதனால் வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அதிகரிக்கிறது.

    நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகள் என்று பார்க்கும்போது பச்சைக் காய்கறிகளில் தான் நார்ச்சத்து மிகவும் அதிகமாக இருக்கிறது. அதே நேரம் வயிற்றில் உள்ள அழுக்குகள் சுத்தமாக வேண்டுமென்றால், பழங்களை உட்கொள்ள வேண்டும். பழங்களிலும் நார்ச்சத்து அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் 3 வகையான பானங்களை 3 நாட்களுக்கு உட்கொண்டால், வயிற்றிலுள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி குடலில் சேர்ந்திருக்கும் அழுக்கு முற்றிலுமாக அகற்றப்படும்.

    வெஜிடபிள் ஜூஸ் - பல ஆய்வறிக்கைகளின்படி காய்கறிச்சாறு வயிற்றை சுத்தம் செய்வதற்கு உதவும் எனப்படுகிறது. இந்த பானம் தயாரிக்க கீரை, தக்காளி, கேரட், காலிஃப்ளவர், ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், பாகற்காய் போன்றவற்றை நன்றாக அரைத்து தயாரிக்க வேண்டும்.

    ஆப்பிள் ஜூஸ் - உங்களுக்கு பல நாட்களாக வயிற்று உபாதை இருந்தால், அல்லது வயிறு சுத்தமாக இல்லை என்பது போல் நீங்கள் உணர்ந்தால் தாராளமாக ஆப்பிள் ஜூஸ் குடிக்கலாம். ஆப்பிள் ஜூஸ் குடலில் உள்ள நச்சுத்தன்மைக்கு நல்லது என பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் வயிற்றில் படிந்திருக்கும் நச்சுக்கள் வேகமாக வெளியேறும்.

    ஆப்பிள் சிடர் வினிகர் - ஆப்பிள் சிடர் வினிகர் என்பது ஆப்பிளில் இருந்து எடுக்கப்படும் ஒரு சாறு தான். இதில் தேவையான அளவு வைட்டமின் சி சத்து உள்ளது. இது குடலில் உள்ள அதிகப்படியான அமிலத்தன்மையை நீக்கி தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும். 300 மில்லி வெந்நீரில் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து பருகுவது உடலுக்கு நல்லது.

    இந்த மூன்று பானங்களையும் தொடர்ந்து மூன்று நாளைக்கு பருகி வந்தால், வயிற்றில் உள்ள எல்லா கெட்ட சமாச்சாரங்களும் அடுத்த பத்து நாளைக்குள் வெளியேறிவிடும்.

    • ஆப்பிள் சிடர் வினிகர் ஆப்பிள் சாற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
    • இது கூந்தல் முதல் பாதம் வரை அழகுச் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது.

    ஆப்பிள் சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் வினிகர்தான் ஆப்பிள் சிடர் வினிகர். முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமத்திற்கும், பொடுகு போன்ற தலைமுடி சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் ஆப்பிள் சிடர் வினிகர் உதவுகிறது.

    பொதுவான அழகு சார்ந்த பிரச்சினைகளுக்கு மிகவும் பயனுள்ள தீர்வுகளில் ஒன்றாக ஆப்பிள் சீடர் வினிகர் உள்ளது. இது உங்கள் சருமம் மற்றும் உச்சந்தலையில் அமில-கார சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது.

    பல்வேறு ஊட்டச்சத்து நிறைந்த ஆப்பிள் சீடர் வினிகர் கூந்தல் முதல் பாதம் வரை அழகுச் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது. சருமத்திற்கு பல நன்மைகளை தரக்கூடிய இந்த வினிகரை பயன்படுத்தி உங்கள் அழகை மெருகேற்றுவது எப்படி என்பது குறித்து இங்கு பாப்போம்.

    உங்கள் கூந்தல் பொலிவிழந்து காணப்பட்டாலோ, அதிகமாக கொட்டினாலோ நீங்கள் ஆப்பிள் சிடர் வினிகரை பயன்படுத்தி பார்க்கலாம். இது உங்கள் கூந்தலுக்கு பிரகாசத்தை சேர்க்கிறது. நீங்கள் தலைக்கு குளிக்கும் போது ஷாம்பு பயன்படுத்தி உங்கள் முடியை நன்கு அலசவும். பின்னர் ஒரு குவளை தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி ஆப்பிள் சிடர் வினிகரை சேர்த்து கடைசியாக ஒரு முறை மீண்டும் அலசவும். இப்படி செய்து வந்தால் முடி உதிர்வு குறைந்து நன்கு வளரும்.

    சரும பராமரிப்பிலும் ஆப்பிள் சிடர் வினிகர் பயன்படுகிறது. ஆப்பிள் சிடர் வினிகரை சிறிதளவு தூய நீருடன் சேர்த்துக் கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதைப் பஞ்சில் தொட்டு சருமத்திலும், முகத்தில் பருக்கள், தேமல், கரும்புள்ளி உள்ள இடங்களிலும் தடவி 5 - 10 நிமிடங்கள் காற்றில் காய வைத்து பிறகு, குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வர சருமம் பளபளவென்று பொலிவடையும். ஆனால், சோரியாசிஸ், சிரங்கு, சிராய்ப்பு போன்ற சருமப் பிரச்னை உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தக் கூடாது

    ஆப்பிள் சீடர் வினிகரைக் (apple cider vinegar ) கொண்டு தினமும் முகத்திற்கு சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால் ஆப்பிள் போன்ற கன்னங்களைப் பெறலாம். இதனை தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறி புத்துணர்ச்சி கிடைக்கும்.

    அனைத்து வித சருமத்திலும் ஆப்பிள் சீடர் வினிகர் செயலாற்றுகிறது. வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து கொள்ள வேண்டும். இதனுடன் ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். பின்னர் பத்து நிமிடங்களுக்கு பிறகு கழுவி விட வேண்டும். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் இளமையான தோற்றம் தக்கவைக்கப்படும்.

    ×