search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "apple price low"

    அரூர் பகுதியில் ஆப்பிள் விலை குறைந்து உள்ளதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
    அரூர்:

    ஆப்பிள் பழம் அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்றாக உள்ளது. மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் உணவில் முக்கியமானது ஆப்பிள் பழமாக உள்ளது. இதில் இரும்பு, புரோட்டின், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், வைட்டமின் பி1, பி2, சி உள்ளிட்ட சத்துகள் உள்ளது. இந்தியாவில் சிம்லா, காஷ்மீர் பகுதிகளில் பயிரிடப்படுகிறது. 

    தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பழக்கடைகளில் ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்கள் பெங்களூரிலிருந்து மொத்தமாக வாங்கி வந்து சில்லரையில் விற்பனை செய்து வந்தனர். 

    கடைகளில் சில்லரை விலையில் ஒரு கிலோ ஆப்பிள் ரூ. 110 முதல் ரூ. 130 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அரூர் சந்தையில் மினிடோர் வாகனத்தில் வைத்து பெரிய அளவிலான ஆப்பிள் கிலோ ரூ. 80க்கு கூவி கூவி விற்பனை செய்யப்பட்டது. ஆப்பிள் விலை குறைந்துள்ளதை அடுத்து மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
    ×