search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Applications welcome"

    • ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு தேவைப்படும் ஒரு பணியாளரை நிரப்புதல் பொருட்டு தற்காலிக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
    • இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

    சேலம் மாவட்டத்தில் பெண்களுக்கு தேவைப்படும் அவசரகால மீட்பு, மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல் உதவி, சட்ட உதவி, தற்காலிக தங்குமிடம் ஆகியவற்றை வழங்கி அவர்களை பாதுகாக்க ஒன்றிய அரசினால் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம் ஆகஸ்டு மாதம் 2018-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தற்காலிக தேர்வு

    சேலம் மாவட்டம் ஆத்தூரில் கூடுதலாக ஒரு சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடங்குவதற்கு ஆணை பெறப்பட்டுள்ளது. தற்பொழுது புதிதாக ெதாடங்கப்பட உள்ள ஆத்தூர் பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு தேவைப்படும் 13 பணியாளர்கள் மற்றும் சேலம் மாவட்டம் பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு தேவைப்படும் ஒரு பணியாளரை நிரப்புதல் பொருட்டு தற்காலிக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    பணியிடம் குறித்த விவரங்கள் https://salem.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியான நபர்கள் தங்களது சுய விபரங்களை அடுத்த மாதம் 8-ந்தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் வளாகம், அறை எண் 126 என்ற முகவரிக்கு நேரிலோ, அல்லது தபால் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்கத் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்கள் சுயதொழில் செய்து பொருளாதார மேம்பாடு அடைய 2023-ம் நிதியாண்டி ற்குரிய கடன் திட்டங்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் மனுதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
    • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தின் கீழ் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்கள் சுயதொழில் செய்து பொருளாதார மேம்பாடு அடைய 2023-ம் நிதியாண்டி ற்குரிய கடன் திட்டங்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் மனுதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

    சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய பொதுகாலக்கடன், பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன், பெண்களுக்கான நுண்கடன், ஆண்களுக்கான நுண்கடன் மற்றும் கறவைமாட்டுக் கடன் திட்டம் ஆகிய கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி வழங்கி வருகிறது.

    விண்ணப்பதாரர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மனுதாரருக்கு 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதிற்கு மேம்படாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும் (ஆதார் எண் அவசியம்), சுய உதவி குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும் மற்றும் திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

    விண்ணப்பிக்கும்போது சாதிச்சான்று, வருமானச்சான்று, பிறப்பிட சான்றிதழ் நகல்கள், முன்னணி நிறுவனம் ஒன்றிலிருந்து பெறப்பட்ட விலைப்புள்ளி, திட்ட அறிக்கை (பெரிய திட்டமாக இருந்தால் மட்டும்), குடும்பஅட்டை / ஆதார் அட்டை நகல், வங்கி கோரும் இதர ஆவணங்கள் மற்றும் அடமானத்திற்குரிய ஆவணங்கள் அளிக்க வேண்டும்.

    கடனுதவி விண்ணப்பங்கள் மற்றும் இதர கடனுதவி விவரங்களை சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகததில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்திலும் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகள் ஆகியவற்றிலும் நேரில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • மாநில மற்றும் மாவட்ட அளவில் மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது.
    • மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25,௦௦௦ வழங்கப்பட உள்ளது.

    கடலூர்:.26-

    கடலூர் கலெக்டர் பால சுப்பிரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    ஊரக பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்ட மைப்பு கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புற பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பகுதி அளவிலான கூட்ட மைப்பு கள், நகர அளவி லான கூட்டமைப்பு களுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது. 

    2022-23 ஆம் ஆண்டிற்கு மாநில அளவில் சிறப்பாக செயல்படும் ஊரகப் பகுதிகளை சார்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்க ளுக்கு ரூ.1,00,000, ஊராட்சி அள விலான கூட்டமைப்பிற்கு ரூ.3,00,000, வட்டார அளவி லான கூட்டமைப்பிற்கு ரூ.5,00,000, கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு ரூ.1,00,000, நகரப் பகுதி களை சார்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1,00,000, பகுதி அள விலான கூட்டமைப்பிற்கு ரூ.3,00,000, நகர அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.5,00,000, மாவட்ட அள வில் சிறப்பாக செயல்படும் ஊரகப் பகுதிகளை சார்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25,000, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.1,00,000, கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு ரூ.50,000, நகரப் பகுதிகளை சார்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25,000, பகுதி அளவிலான கூட்ட மைப்பிற்கு ரூ.1,00,000 - மும் வழங்கப்பட உள்ளது.

    எனவே சிறப்பாக செயல்படும் ஊரகப் பகுதி களை சார்ந்த தகுதி வாய்ந்த குழுக்கள் மற்றும் கூட்ட மைப்புகள் விண்ணப்ப ங்கள் வட்டார இயக்க மேலாளர் அலுவலகத்தில் பெறப்படுகின்றன. நகரப் பகுதிகளை சார்ந்த குழுக்கள் மற்றும் கூட்ட மைப்புகள் கீழ்கண்ட முகவரிக்கு நாளை (27-ந் தேதி) முதல் ஏப்ரல் மாதம் 25-ந் தேதி மாலை 5 மணிக்குள் மணி மேகலை விருதுக்காக விண்ணப்பித்து பயன்பெற லாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    ×