என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பொருளாதார மேம்பாட்டிற்கு கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
- பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்கள் சுயதொழில் செய்து பொருளாதார மேம்பாடு அடைய 2023-ம் நிதியாண்டி ற்குரிய கடன் திட்டங்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் மனுதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தின் கீழ் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்கள் சுயதொழில் செய்து பொருளாதார மேம்பாடு அடைய 2023-ம் நிதியாண்டி ற்குரிய கடன் திட்டங்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் மனுதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய பொதுகாலக்கடன், பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன், பெண்களுக்கான நுண்கடன், ஆண்களுக்கான நுண்கடன் மற்றும் கறவைமாட்டுக் கடன் திட்டம் ஆகிய கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி வழங்கி வருகிறது.
விண்ணப்பதாரர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மனுதாரருக்கு 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதிற்கு மேம்படாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும் (ஆதார் எண் அவசியம்), சுய உதவி குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும் மற்றும் திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும்போது சாதிச்சான்று, வருமானச்சான்று, பிறப்பிட சான்றிதழ் நகல்கள், முன்னணி நிறுவனம் ஒன்றிலிருந்து பெறப்பட்ட விலைப்புள்ளி, திட்ட அறிக்கை (பெரிய திட்டமாக இருந்தால் மட்டும்), குடும்பஅட்டை / ஆதார் அட்டை நகல், வங்கி கோரும் இதர ஆவணங்கள் மற்றும் அடமானத்திற்குரிய ஆவணங்கள் அளிக்க வேண்டும்.
கடனுதவி விண்ணப்பங்கள் மற்றும் இதர கடனுதவி விவரங்களை சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகததில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்திலும் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகள் ஆகியவற்றிலும் நேரில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்