என் மலர்
நீங்கள் தேடியது "Appropriate documents"
- வெடிவிபத்துக்கள் ஏற்பட்டு அதிக அளவில் மனித உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டு வருகிறது.
- ,சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் மாவட்ட நிர்வாகம் ஆய்வுமேற்கொள்ள உள்ளது
கள்ளக்குறிச்சி:
தமிழகத்தில் சமீப காலமாக வெடிபொருள் மற்றும் பட்டாசுகள் உற்பத்தி மற்றும் சேமிப்பு இடங்களில், வெடிவிபத்துக்கள் ஏற்பட்டு அதிக அளவில் மனித உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிபொருட்கள் தயாரிப்பு, பட்டாசு விற்பனை மற்றும் வெடிபொருட்கள் இருப்பு ஆகியவற்றை வரன்முறைப்படுத்தி உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம்ஆகியவற்றை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக ,சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் மாவட்ட நிர்வாகம் ஆய்வுமேற்கொள்ள உள்ளது.
இந்த ஆய்வின்போது, அரசிடமிருந்து உரிய அனுமதியோ, உரிமமோ பெறாம ல்வெடிபொருட்கள் தயாரிப்பு, பட்டாசு விற்பனை மற்றும் வெடிபொருட்கள் இருப்பு வைத்தல் ஆகியவற்றில் பொதுமக்கள் எவரேனும் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால் அந்த நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கோள்ளப்படும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், வெடிபொரு ள் மற்றும் பட்டாசு விற்பனை செய்வதற்கு தற்காலிக வெடிபொருள் உரிமம் பெற விருப்பமுள்ளவர்கள், அரசு பொது இ-சேவை மையத்திற்கு உரியஆவணங்களுடன் சென்று இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.