என் மலர்
நீங்கள் தேடியது "aravind kejriwal"
- குற்றப்பத்திரிக்கையில் ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங் பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டு இருந்தது.
- அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை கைது செய்தது. இதேபோல் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங் பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறும் போது, ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங் பெயரை குற்றப்பத்திரிக்கையில் தவறுதலாக சேர்த்திருப்பதே, இந்த வழக்கு முழுக்க முழுக்க பொய்யான ஒன்று தான் என்று வெளிப்படையாக தெரிகிறது என்றார்.

"அது எப்படி ஒருவரின் பெயரை குற்றப்பத்திரிக்கையில் தவறுதலாக சேர்த்திருக்க முடியும்? இதில் இருந்தே இந்த வழக்கு முழுக்க முழுக்க பொய்யான ஒன்று என்பது தெளிவாகிறது. நாட்டிலேயே மிகவும் நேர்மையான கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தவே பிரதமர் இவ்வாறு செய்கிறார். நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் அரசியல் கட்சியை கேவலமான அரசியல் செய்து பிரதமர் தடுக்க நினைக்கிறார். இது அவர் செய்க்கூடிய காரியம் இல்லை," என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து இருக்கிறார்.
"வரலாற்றிலேயே முதல் முறையாக அமலாக்கத்துறை இவ்வாறு செய்திருக்கிறது. குற்றப்பத்திரிக்கையில் என் பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டுவிட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்து இருக்கிறது," என்று சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங் ஏற்கனவே சம்பந்தப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இதுமட்டுமின்றி தன்மீது வேண்டுமென்றே உள்நோக்கத்துடன், உண்மையற்ற, அவதூறான தகவல்களை தெரிவித்த அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ரா மற்றும் உதவி இயக்குனர் ஜோகேந்தர் சிங் ஆகியோர் மீது விசாரணை நடத்த வலியுறுத்தி மத்திய நிதித்துறை செயலாளருக்கு சஞ்சய் சிங் கடிதம் எழுதியிருந்தார்.
- அமலாக்கத்துறை அதிகாரிகளால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு.
- அவரை விடுவிக்கக்கோரி பிரதமர் மோடி வீட்டிடை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு.
டெல்லி மாநில முதல்வராக அரவிந்த கெஜ்ரிவால் இருந்து வருகிறார். டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை சில தினங்களுக்கு கைது செய்தது. அவரை காவலில் வைத்து விசாரிக்க ஒரு வாரம் அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அமலாக்கத்துறை காவலில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அவரது கைது கண்டித்து பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெறும் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இதனால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் எந்தவிதமான போராட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் போராட்டம் நடத்தினால் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.
இதற்கிடையே அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பா.ஜனதாவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
வருகிற 31-ந்தேதி இந்தியா கூட்டணி சார்பில் ராம்லீலா மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முற்றுகை போராட்டம் பேரணியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பா.ஜனதா பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இருந்து டெல்லி தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
- அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறை கண்காணிப்பாளருக்கு புகார் கடிதம்.
- நான் இன்சுலின் கேட்கவில்லை என திகார் சிறை நிர்வாகம் தவறான தகவலை தெரிவித்துள்ளது.
டெல்லி முதல்வரான கெஜ்ரிவால் மதுபான கொள்கை விவகாரத்தில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். சிறையில் இருக்கும் போதிலும் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. தொடர்ந்து டெல்லி முதல்வராக இருந்து சிறையில் இருந்து உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.
இதற்கிடையே, திகார் சிறையில் தனது கணவரைக் கொல்ல சதி நடப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்நிலையில், "நான் இன்சுலின் கேட்கவில்லை என திகார் சிறை நிர்வாகம் தவறான தகவலை தெரிவித்துள்ளதாக" டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறை கண்காணிப்பாளருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில், " என் சர்க்கரை அளவு ஒரு நாளைக்கு மூன்று முறை மிக அதிகமாக உள்ளதால், நான் தினமும் இன்சுலின் கேட்கிறேன்.
ஆனால், திகார் நிர்வாகம் நான் இன்சுலின் கேட்கவில்லை என்ற அறிக்கையை செய்தித்தாளில் படித்து வருத்தம் அடைந்தேன்" என குறிப்பிட்டுள்ளார்.
- திகார் சிறையில் தனது கணவரைக் கொல்ல சதி நடப்பதாக கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா குற்றம் சாட்டியுள்ளார்
- திகார் நிர்வாகம் நான் இன்சுலின் கேட்கவில்லை என்ற அறிக்கையை செய்தித்தாளில் படித்து வருத்தம் அடைந்தேன் - கெஜ்ரிவால்
டெல்லி முதல்வரான கெஜ்ரிவால் மதுபான கொள்கை விவகாரத்தில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். சிறையில் இருக்கும் போதிலும் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. தொடர்ந்து டெல்லி முதல்வராக இருந்து சிறையில் இருந்து உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.
இதற்கிடையே, திகார் சிறையில் தனது கணவரைக் கொல்ல சதி நடப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்நிலையில், "நான் இன்சுலின் கேட்கவில்லை என திகார் சிறை நிர்வாகம் தவறான தகவலை தெரிவித்துள்ளதாக" டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறை கண்காணிப்பாளருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில், " என் சர்க்கரை அளவு ஒரு நாளைக்கு மூன்று முறை மிக அதிகமாக உள்ளதால், நான் தினமும் இன்சுலின் கேட்கிறேன்.
ஆனால், திகார் நிர்வாகம் நான் இன்சுலின் கேட்கவில்லை என்ற அறிக்கையை செய்தித்தாளில் படித்து வருத்தம் அடைந்தேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்க சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மேலும் கெஜ்ரிவாலின் கடுமையான நீரிழிவு மற்றும் இரத்த சர்க்கரை அளவின் ஏற்ற இறக்கம் குறித்து தினமும் 15 நிமிடங்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது.
- டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பான சாட்சிகளிடம் பேசக் கூடாது.
- இடைக்கால ஜாமின் தொகையாக ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும்.
டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்ட அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் காரணமாக முன்ஜாமின் வழங்கப்படலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில்தான் மக்களவை தேர்தலின் ஏழாம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கிய உத்தரவில் உச்சநீதிமன்றம் நிபந்தனைகளை விதித்துள்ளது.
அதன்படி, இடைக்கால ஜாமின் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் அலுவலகம், தலைமைச் செயலகம் செல்லக் கூடாது.
தேவைப்படும் பட்சத்தில் துணை நிலை ஆளுநர் ஒப்புதலுடன் கெஜ்ரிவால் கோப்புகளில் கையெழுத்திடலாம்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பான சாட்சிகளிடம் பேசக் கூடாது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அவரது பங்கு குறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்கக்கூடாது.
இடைக்கால ஜாமின் தொகையாக ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும் போன்ற நிபந்தனைகளை விதித்துள்ளது.
- தேர்தல் பிரசாரத்திற்காக ஜூன் 1ம் தேதி வரை ஜெக்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்.
- ஆத் ஆத்மி தொண்டர்கள் கெஜ்ரிவாலை கோஷம் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இடைக்கால ஜாமின் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
அமலாக்கத்துறையின் எதிர்ப்பை மீறி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம், சில நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமின் வழங்கியது.
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக ஜூன் 1ம் தேதி வரை ஜெக்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், கெஜ்ரிவாலின் மானைவி சுனிதா கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவாலை வரவேற்று அழைத்துச் சென்றனர்.
ஆத் ஆத்மி தொண்டர்கள் கெஜ்ரிவாலை கோஷம் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொண்டர்கள் மத்தியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் "சர்வாதிகாரத்தை ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். சர்வாதிகார சக்திகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும்.
மேலும், எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. " என பேசினார்.
- சிறையில் இருந்து வெளியில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
- இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை.
டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. இதைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவருக்கு ஜாமின் வழங்கியதற்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமின் உத்தரவை, அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும் வரை நிறுத்தி வைப்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
ஜாமின் நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையிலேயே உள்ளார். இந்த நிலையில், தனக்கு வழங்கப்பட்ட ஜாமின் உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
- மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை மறுநாளுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து.
டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. இதைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவருக்கு ஜாமின் வழங்கியதற்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமின் உத்தரவை, அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும் வரை நிறுத்தி வைப்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
ஜாமின் நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையிலேயே உள்ளார். இந்த நிலையில், தனக்கு வழங்கப்பட்ட ஜாமின் உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். மேலும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவின் முழு விவரம் கிடைத்த பின்பே மேல்முறையீட்டு மனு மீது முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்த உச்சநீதிமன்றம் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்து.
- விசாரணை நடத்தியதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.
- ஏற்கனவே 90 நாட்கள் சிறையில் தண்டனை அனுபவித்தார்.
டெல்லி மாநில அரசின் மதுபானக் கொள்கை தொடர்பாக பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது. இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்தியதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.
இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. ஏற்கனவே 90 நாட்கள் சிறையில் தண்டனை அனுபவித்த நிலையிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்ற காரணங்களை கருத்தில் கொண்டும் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
- இரண்டு நாட்களில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்தார்.
- வேறொரு ஆம் ஆத்மி தலைவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
டெல்லி அரசின் மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக கடந்த மார்ச் 21 ஆம் தேதி தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.
இந்த வழக்கில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்படு வந்த நிலையில் 6 மாதங்கள் கழித்து நேற்று முன்தினம் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் யாரும் எதிர்பாராத வகையில் இன்னும் இரண்டு நாட்களில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்தார்.
அடுத்த வருடம் பிப்ரவரியில் நடக்க உள்ள டெல்லி சட்டமன்றத் தேர்தலை மகாராஷ்டிர தேர்தலுடன் வரும் நவம்பர் மாதமே நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் வேறொரு ஆம் ஆத்மி தலைவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்புக்கு பதிலடி கொடுத்த பாஜக கட்சியை சேர்ந்த ஹரிஷ் குரானா, "ஏன் 48 மணி நேரம் கழித்து ராஜினாமா செய்ய வேண்டும்? அவர் இன்றே ராஜினாமா செய்ய வேண்டும். கடந்த காலங்களில் கூட, அவர் இப்படி செய்துள்ளார். அவரால் தலைமை செயலகத்திற்கு செல்ல முடியாது, அவரால் கோப்புகளில் கையெழுத்திட முடியாது, பிறகு இதில் என்ன அர்த்தம் உள்ளது என டெல்லி மக்கள் கேட்கின்றனர்?," என தெரிவித்தார்.
- மதுபான கொள்கையை நிறைவேற்றியதில் நடந்த ஊழல் தொடர்பாக கெஜ்ரிவாலை சி.பி.ஐ. கைது செய்தது.
- 6 மாதங்களுக்கு பிறகு கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
டெல்லி அரசின் மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக கடந்த மார்ச் 21 ஆம் தேதி தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.
அவ்வழக்கில் அவருக்கு கடந்த ஜூலை 12-ந்தேதி உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் அளித்தது. ஆனால் அதற்கு முன்பே ஜூன் 26-ந் தேதி, மதுபான கொள்கையை நிறைவேற்றியதில் நடந்த ஊழல் தொடர்பாக கெஜ்ரிவாலை சி.பி.ஐ. கைது செய்தது.
இந்த வழக்கில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்படு வந்த நிலையில் 6 மாதங்கள் கழித்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பின்னர், சிறையிலிருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால் யாரும் எதிர்பாராத வகையில் இன்னும் இரண்டு நாட்களில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்தார்.
இந்நிலையில், டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனாவை சந்திக்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேர்மையானவர் என மக்கள் சான்றிதழ் அளிக்கும் வரை முதல்வர் நாளற்காலியில் அமரப்போவதில்லை என கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டெல்லி கவர்னரை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
- ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு, கவர்னர் வழங்கும் தேதிகளை பொறுத்து பதவியேற்பு விழா.
டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. இதனால் முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார்.
இதைத்தொடர்ந்து டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய முதல்வராக மூத்த அமைச்சர் அதிஷி தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அப்போது புதிய முதல்வராக அதிஷி தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தையும், கவர்னரிடம் அதிஷி கொடுத்தார்.
டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படியே அதிஷி பதவியேற்பது எப்போது? புதிய அரசு பதவி ஏற்பது குறித்து முடிவு செய்யப்படும்.
இதற்கிடையே டெல்லி சட்டசபையின் சிறப்பு கூட்டம் வருகிற 26, 27-ந்தேதிகளில் நடைபெற உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிஷி சிறப்புரையாற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு, கவர்னர் வழங்கும் தேதிகளை பொறுத்து பதவியேற்பு விழா நடைபெறும் என கூறப்பட்டது.
இந்நிலையில், டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பிய கடிதத்தில், புதிய முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்ட அதிஷி பதவியேற்பதற்கான தேதியை செப்டம்பர் 21-ம் தேதி என முன்மொழிந்ததாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.