என் மலர்
நீங்கள் தேடியது "Archana Kamath"
- டேபிள் டென்னிஸில் சீனா மற்றும் கொரிய வீராங்கனைகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்
- 24 வயதாகும் அர்ச்சனா காமத் டேபிள் டென்னிஸில் இருந்து விலகி படிப்பைத் தொடர முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
2024 பாரீஸ் ஒலிம்பிக்சில் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பெண்கள் பிரிவில் இந்தியா சார்பில் மனிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா மற்றும் அர்ச்சனா காமத் ஆகியோர் போட்டியிட்டனர். ஒற்றயர் பிரிவில் போட்டியிட்ட மனிகா பத்ரா மற்றும் ஸ்ரீஜா அகுலா ஆகியோர் முதல்முறையாகக் காலிறுதிக்கு முந்திய சுற்று வரை முன்னேறி சாதனை படைத்தனர். அணியாகவும் இந்த மூன்று வீராங்கனைகளுக்கு ஒன்றிணைத்து காலிறுதி சுற்று வரை முன்னேறி சாதித்தனர்.
காலிறுதிப் போட்டியில் இந்திய அணியில் அர்ச்சனா காமத் மட்டுமே ஒரேயொரு சுற்றில் வெற்றிபெற்றிருந்தார். ஆனால் இந்த வெற்றிகள் அர்ச்சனாவுக்கு போதுமானதாக இல்லை. 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்க உள்ள ஒலிம்பிக்கிலும் வெற்றி பெறுவோமா என்ற உறுதியாகத் தெரியாத நிலையில் டேபிள் டென்னிஸை கைவிட்டு அமெரிக்காவில் படிப்பைத் தொடர அர்ச்சனா முடிவெடுத்துள்ளார்.
டேபிள் டென்னிஸில் சீனா மற்றும் கொரிய வீராங்கனைகளே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் வருங்காலங்களில் வெற்றி என்பது சத்தியம்தானா என்று தனது பயிற்சியாளர் கார்க் - உடன் தீவிரமாக ஆலோசித்து உள்ளார். உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளை பொறுத்தவரை அரையிறுதிக்கு முன்னேறினால் மட்டுமே பொருளாதார ரீதியாக உதவிகள் கிடைக்கும். எனவே பொருளாதார ரீதியாகவும் பலன்கள் இல்லாத நிலையில்தான் 24 வயதாகும் அர்ச்சனா காமத் டேபிள் டென்னிஸில் இருந்து விலகி படிப்பைத் தொடர முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக தனது இளைய சகோதரர் நாசாவில் பணியாற்றி வருவதாகவும், அவர் தான் தனது ரோல் மாடல் என்றும் அர்ச்சனா பேசியிருந்தார். படிப்பை தொடர அவர் எனக்கு ஆதரவாக இருக்கிறார். நல்லபடியாக படித்து முடிக்க விரும்புகிறேன் என்றும் தெரிவித்தார். மேலும் பொருளாதாரம் தொடர்புடைய படிப்பில் அர்ச்சனா சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.